கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...



தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் செய்யப்பட்ட அளவிற்கு பரிசோதனைகள் தற்போது செய்யப்படுகின்றன. தினமும் 1.30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 36வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. மேற்கு மண்டலத்தை சேர்ந்த 9 மாவட்ட மருத்துவர்கள் உடன் காணொலியில் ஆலோசிக்கப்பட்டது.



மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா, மூச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். மேலும், விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிசேரியன் செய்வது அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்காக பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், விருப்பத்தின் பேரில் சிசேரியன் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும் என்றும், மேலும், சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுவதற்கு ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும். மாணவர்கள் பயிற்சிக்கு செல்வதை தடுத்து ஒருவேளை காலதாமதம் ஏற்பட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும். நீட் எதிர்ப்பு தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு சென்றால் அது ஒப்புதலோடுதான் திரும்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...