கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மா.சுப்பிரமணியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மா.சுப்பிரமணியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Doctors Strike - Minister Engaged in negotiations



 மருத்துவர்கள் போராட்டம் - அமைச்சர் பேச்சுவார்த்தை


கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் அமைச்சர் மா.சுப்ரமணியன் மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை.


புற்றுநோய்க்காக அனுமதிக்கப்பட்ட தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என இளைஞர் குற்றச்சாட்டு.


வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியைக் கொண்டு வந்து மருத்துவரைக் குத்திய விக்னேஷ்.


மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்...




 மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்...


Minister Ma.Subramanian released the ranking list for medical studies...



Medical Counselling Ranking List: மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு ஆக.21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், அரசு சார்பில் சைதாப்பேட்டையில் ஆரம்பிக்கப்பட்ட நீட் தேர்வு மையத்திலிருந்து, தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 4 அரசுப் பள்ளி மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட அமைச்சர்


சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2024 - 25ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Paramedical) பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்து, தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "2024 -25ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS), மருத்துவம் சார்ந்த (Paramedical) பட்டப் படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள நிர்வாக மருத்துவர் இடங்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 31 முதல் ஆக.9 வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன.இந்தாண்டு 43,063 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 2,721 அதிகம். இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டிற்கு 3,733 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவில் 343 விண்ணப்பங்களும், முன்னாள் படை வீரர் பிரிவு ஒதுக்கீட்டில் 455 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 133 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.


எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 6,630 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள பிடிஎஸ் படிப்பில் 1,683 இடங்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் 496 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 126 இடங்களும் உள்ளன.அரசின் ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 29,429 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 28,819 விண்ணப்பம் தகுதி பெற்றுள்ளது. அவர்களில் 10,704 மாணவர்களும், 18,114 மாணவிகளும், திருநங்கை ஒருவரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டிற்கு 3,733 மாணவர்கள் விண்ணப்பம் செய்ததில், 3,683 மாணவர்கள் தகுதி பெற்றனர். அவர்களில் 1,041 மாணவர்களும், 2,642 மாணவிகளும் ஆவர். தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்வதற்கு 13,417 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டை விட 150 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அன்னை கல்லூரியில் 50 இடங்களும், கன்னியாகுமரி ஆராய்ச்சி மையத்தில் 100 இடங்களும் கூடுதலாக கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 9,200 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 2,150 இடங்கள் உள்ளது.


அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளியில் படித்த ரூபிகா என்ற மாணவி 669 மதிப்பெண் பெற்றுள்ளனர். அரசு சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க தொடங்கப்பட்ட சைதாப்பேட்டை சீர்மிகு பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முதல் 10 பேரில் நான்கு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.ஆகஸ்ட் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றத்திறனாளிகள் மற்றும் விளையாட்டுப் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு 22ம் தேதி ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் நேரடியாக கலந்தாய்வு நடைபெறும்.திருநங்கை ஒருவரும் தேர்வாகி இருப்பதாகவும், அரசு ஒதுக்கீட்டில் அவருக்கு இடம் கிடைத்துள்ளதாகவும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது. நீட் தேர்விற்கு அகில இந்திய அளவில் எதிர்ப்புகள் கிளம்பி துவங்கி உள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று அகில இந்திய தலைவர்கள் கேட்டுள்ளனர். மாநில உரிமைகளை எப்போதும் திமுக விட்டு கொடுக்காது.எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களில் பொதுப் பிரிவு தரவரிசைப் பட்டியலில் 2023-24ம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் 7,791 பேரும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் படித்த மாணவர்கள் 21 ஆயிரத்து 25 பேரும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 2023-24 ம் கல்வியாண்டில் 472 மாணவர்களும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் படித்த மாணவர்கள் 3 ஆயிரத்து 309 பேரும் இடம் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றுள்ள 10 மாணவர்களும் 2023-24 ம் கல்வியாண்டிற்கு முந்தைய ஆண்டுகளில் படித்தவர்கள்.அரசு மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக இடங்களை அதிகரிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம். அதன்படி 2025-26 ம் கல்வியாண்டில் கூடுதல் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டில் மேலும் 6 புதிய மருத்துவக்கல்லூரிகளை துவங்குவதற்கு நிதி கேட்டுள்ளோம். அதனை பெறுவதற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என தெரிவித்தார்.


தமிழ்நாட்டில் வரும் 10ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் - வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Special fever medical camp at 1000 places in Tamil Nadu on 10th - A special camp is going to be held in Tamil Nadu as viral fever is spreading - Minister M. Subramanian)...

 தமிழ்நாட்டில் வரும் 10ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் - வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Special fever medical camp at 1000 places in Tamil Nadu on 10th - A special camp is going to be held in Tamil Nadu as viral fever is spreading - Minister M. Subramanian)...


தமிழ்நாட்டில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதித்த ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக செல்கிறார்கள். இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-


கொரோனா போன்ற நோய் தொற்று அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் புதுவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் 200 வார்டுகளில் 200 முகாம்கள் நடத்தப்படும். பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு சென்று பயன் அடையலாம்.


காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். பொதுவாக வைரஸ் தொற்று ஏற்படுவதால் கூட்டங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முக கவசம் அணிதல் போன்ற சுய கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிப்பது நல்லது.


இவ்வாறு அவர் கூறினார்.


தமிழ்நாட்டில் இன்புளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை - பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை - அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் (Influenza fever in Tamil Nadu is not high - No need to give holidays to schools - Minister Mr. M.Subramanian)...



*தமிழகத்தில் இன்புளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை.


*அதேசமயம், பள்ளிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்களை ஆசிரியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


 *மேலும், இன்புளுயன்ஸா காய்ச்சல்  இதுவரை 995 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாகவும், 10 பேர் இறந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.





ஒன்றிய அரசு வழங்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறுத்தம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல் (The free booster vaccine provided by the Union Government will stop on September 30 - Minister M. Subramanian informed)...

 ஒன்றிய அரசு வழங்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறுத்தம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல் (The free booster vaccine provided by the Union Government will stop on September 30 - Minister M. Subramanian informed)...






சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு. 2,448 சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியம் ரூ 11,000 லிருந்து ரூ.14000 ஆக உயர்த்தப்படுகிறது. - அமைச்சர் மா. சுப்பிரமணியன் (Decision to grant 6 months maternity leave to Contract based Female Employees of Health Department. The salary of 2,448 Health care workers has been increased from Rs 11,000 to Rs 14,000. - Minister Ma.Subramanian)...

 சுகாதாரத்துறை  ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு.  2,448  சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியம் ரூ 11,000 லிருந்து ரூ.14000 ஆக உயர்த்தப்படுகிறது. -  அமைச்சர் மா. சுப்பிரமணியன் (Decision to grant 6 months maternity leave to Contract based Female Employees of Health Department. The salary of 2,448 Health care workers has been increased from Rs 11,000 to Rs 14,000. - Minister Ma.Subramanian)...



10-01-2022 முதல் பூஸ்டர் தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் (Booster Vaccine from 10-01-2022 - Minister M.Subramanian)...

 10-01-2022 முதல் பூஸ்டர் தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் (Booster Vaccine from 10-01-2022 - Minister M.Subramanian)...


10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் 

வருகிற 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 35,46,000 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்கள்.

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் தகவல் (Public Welfare Minister Mr. M. Subramanian has informed that a person in Tamilnadu has Omicran)...

  தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் தகவல் (Public Welfare Minister Mr. M. Subramanian has informed that a person in Tamilnadu has Omicran)...



தமிழகத்தில் இனி சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும். மருத்துவ பணியாளர்களின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை பதிலாக சனிக் கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் அறிவிப்பு(Tamilnadu Health Minister announced that the Corona Vaccination Camp will be held on Saturdays instead of Sundays in the favour of the medical staff)...

தமிழகத்தில் இனி சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும். மருத்துவ பணியாளர்களின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை பதிலாக சனிக் கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் அறிவிப்பு...



தமிழ்நாட்டிற்கு 9 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை - இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்...



 புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் 9 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சுகாதாரத்துறைக்கு கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தடுப்பூசி பெற ஆர்வமாக உள்ள தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதனடிப்படையில், தமிழ்நாட்டுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.


மக்களும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் ஒன்பது லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிறுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. செப்டம்பரில் இதுவரை 1,38,60,328 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், மத்திய அரசிடம் மொத்தம் 50 லட்சம் தடுப்பூசிகள் கேட்டிருந்தோம், ஆனால் 28 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வந்து இருந்தது. அதை மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பி 24 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

12-09-2021 அன்று கோவிட் தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்(Mega COVID Vaccination Camp) - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...



செப்டம்பர் 12ஆம் தேதி கோவிட் தடுப்பூசி மெகா சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்...


*கோவிட் தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் 12.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40,000 மையங்களில் நடைபெற உள்ளது. இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயித்து அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது. ICDS, NGOs, வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், (கிராம மற்றும் நகர), கல்வித்துறை, யுனிசெப், WHO மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் கோவிட் தடுப்பூசி முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.*


*முக்கிய அம்சங்கள்:*


1️⃣ *கோவிட் தடுப்பூசி வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்படும்.*


2️⃣ *ஒவ்வொரு மையத்திலும் போதிய பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.*


3️⃣ *18 வயதிற்கு மேற்பட்ட 20 இலட்சம் நபர்களுக்கு 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை கோவிட் தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.*


4️⃣ *தடுப்பூசி செலுத்திய பிறகு ஏதாவது பின்விளைவுகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் AEFI Kit தயார் நிலையில் வைக்கப்படும்.*


5️⃣ *அனைத்து மாவட்டங்களிலும் Task Force, Micro Planning, Supervisor Training, Vaccinator Training நடத்தப்பட்டுள்ளது*


6️⃣ *தேவையான IEC (Poster, Banner, Miking) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*


7️⃣ *கோவிட் சிறப்பு முகாமில் பாதுகாப்பான முறையில் நடைபெற கோவிட் -19 நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.*


8️⃣ *சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கைகழுவுதல் கட்டாயமாகும்.*


9️⃣ *தடுப்பூசி கொடுக்கும் முன் சோப்பைக் கொண்டு கைகழுவுவது / Sanitizer உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.*


 🔟 *பெரியவர்களுக்கு காய்ச்சல் / இருமல் அல்லது மற்ற கோவிட் தொற்று தொடர்பாக இருந்தால் மையங்களில் அனுமதிக்கக் கூடாது.*


⏸️ *மையங்களில் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி பெறுபவர்களுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.*


1️⃣2️⃣ *பயனாளிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களை எடுத்து வரவேண்டும்.*


1️⃣3️⃣ *சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.*


1️⃣4️⃣ *அனைத்து மையங்களிலும் போதுமான காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படும்.*


1️⃣5️⃣ *தமிழ்நாடு அரசின் பெரும் முயற்சியின் விளைவாக, ஒன்றிய அரசிடமிருந்து போதுமான தடுப்பூசி பெறப்பட்டுள்ளது.*


அனைத்து மக்களும் இந்த மெகா தடுப்பூசி முகாமினை சிறந்த முறையில் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் 100 சதவீதம் 18 வயதை நிரம்பிய கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி...

 


செப்டம்பர் மாதத்தில் 100 சதவீதம் 18 வயதை நிரம்பிய கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க இருக்கும் நிலையில், சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


அதைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்: நந்தனம் கல்லூரியில் புதிய பாட பிரிவு தொடங்கப்படமால் இருக்கிறது. அது மிகவும் அவசியம் என்று முதல்வர் தெரிவித்து இருந்தார். கூடுதல் பாடபிரிவு வேண்டும் என்று கல்லூரி முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். அதன் அடிப்படையில் 3 புதிய பாட பிரிவை தொடங்கி வைத்துள்ளார் உயர் கல்வித்துறை அமைச்சர். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 10க்கும் மேற்பட்ட பாட பிரிவு வேண்டும் என்று கேட்டு இருந்தார்.


ஆனால் கல்லூரியில் அந்த பாடப்பிரிவிற்கு அடிப்படை வசதிகள் செய்த பிறகு அடுத்த ஆண்டு பாடப்பிரிவை அதிகபடுத்துவதாக தெரிவித்து இருக்கிறோம். 90 % ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.மேலும் இந்த மாதத்திற்கு 23 லட்சம் தடுப்பூசியை கூடுதலாக மத்திய அரசு வழங்கி உள்ளது. சென்னையில் உள்ள 112 அரசு மற்றும் தனியார் கல்லூரியிலும் தடுப்பூசி முகாம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதன்கிழமை லயோலா கல்லூரியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்க இருக்கிறேன். செப்டம்பரில் 100% 18 வயதை நிரம்பிய கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும்,'என்றார்.


தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நாளை(23-08-2021) முதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி(24 Hours COVID Vaccine is given in Government Hospitals) - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தகவல்...



 தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழகத்தில் முதன்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமெரிக்கா வாழ் தமிழர்களின் தமிழக அறக்கட்டளை சார்பில் ரூ.2.36 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொண்டார். மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, இணை இயக்குநர் வினய் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:


அமெரிக்கா வாழ் தமிழர்களின் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட ரூ.2.36கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் 15 அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பப்படும். தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும், அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணி நாளை (ஆகஸ்ட் 23) முதல் தொடங்கப்படும்.


சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிடத்தில் கொரோனா நோயாளிகளை தங்க வைத்ததால்தான் கட்டிடம் பலவீனமானது என்று கட்டுமான நிறுவனத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது, ‘போகாத ஊருக்கு வழி சொல்வதுபோல்’ உள்ளது. மாநிலம் முழுவதும் பல இடங்களில் கரோனா பாதுகாப்பு மையம் செயல்பட்டது. அங்கெல்லாம், எவ்வித சேதாரமும் நடைபெறாதபோது புளியந்தோப்பில் மட்டும் ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டுவது வேடிக்கையாக உள்ளது.


இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...



தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் செய்யப்பட்ட அளவிற்கு பரிசோதனைகள் தற்போது செய்யப்படுகின்றன. தினமும் 1.30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 36வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. மேற்கு மண்டலத்தை சேர்ந்த 9 மாவட்ட மருத்துவர்கள் உடன் காணொலியில் ஆலோசிக்கப்பட்டது.



மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா, மூச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். மேலும், விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிசேரியன் செய்வது அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்காக பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், விருப்பத்தின் பேரில் சிசேரியன் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும் என்றும், மேலும், சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுவதற்கு ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும். மாணவர்கள் பயிற்சிக்கு செல்வதை தடுத்து ஒருவேளை காலதாமதம் ஏற்பட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும். நீட் எதிர்ப்பு தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு சென்றால் அது ஒப்புதலோடுதான் திரும்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா 3- வது அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு சிறப்பு வார்டு - அமைச்சர் தகவல்...

 தமிழகத்தில் மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், குழந்தைகள் வார்டு துவங்கப்பட்டு உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 1.30 கோடி ரூபாய் செலவில், ஒரு நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை எம்.எல்.ஏ., உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.


70 ஆயிரம் படுக்கைகள்


நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், எம்.பி., தயாநிதி, மருத்துவமனை இயக்குனர் மணி, மருத்துவ நிலைய அலுவலர் ஆனந்த் பிரதாப் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என, கூறப்படுகிறது. ஆனால், அது உறுதிப்படுத்தப்படாத தகவல் என, மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழகம் முழுதும் 70 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்கப் பட்டுள்ளன.மூன்றாவது அலை வந்தாலும், அதை சமாளிக்க போதிய கட்டமைப்புகள் அரசிடம்

உள்ளன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் திறந்து வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 1,737 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


4,000 குப்பிகள் கையிருப்பு


அனைத்து மருத்துவமனைகளிலும், கறுப்பு பூஞ்சைக்கான சிறப்பு சிகிச்சை வார்டு திறக்கப்பட்டுள்ளது. எனவே, அறிகுறி தெரிந்தவுடன், மருத்துவமனைக்கு வர வேண்டும். இதற்கான மருத்துவ சிகிச்சையை பொறுத்தவரை, மூன்று வகையான மருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மத்திய அரசிடம்

'ஆம்போடெரிசின் -- பி' மருந்தில் 45 ஆயிரம் குப்பிகள் கேட்டிருந்தோம்; மத்திய அரசு, 11 ஆயிரத்து 796 குப்பிகளை அனுப்பியது. தற்போது 4,000 குப்பிகள் கையிருப்பில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


'கொரோனா தொற்று முடிவுக்கு வரும்'


''தமிழகத்தில் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும்,'' என, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்திய அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தள்ளது. ஒரே நாளில் 25 ஆயிரத்து 550 பேர் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோரை காட்டிலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது.


தமிழகத்தில் தற்போது 56 ஆயிரத்து 550 படுக்கைகள் காலியாக உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும், தினமும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1,000 ஆக இருந்தது. தற்போது 100 ஆக குறைந்துள்ளது. விரைவில், கொரோனா நோய் தொற்று முடிவுக்கு வரும்.


தமிழகத்தில் இதுவரை 1 கோடியே ஐந்து லட்சத்து 97 ஆயிரத்து 418 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஐதராபாத், புனேவில் இருந்து 6 லட்சத்து 16 ஆயிரத்து 660 தடுப்பூசிகள் வர உள்ளன. அவை வந்தவுடன், ஐந்து மணி நேரத்தில் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



தமிழ்நாடு அரசிடம் 6.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

 தமிழக அரசுக்கு 4.95 லட்சம் தடுப்பூசிகள்  வந்துள்ளன.


6.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.


ஆயிரம் கோவாக்சின் டோஸ்களும் வந்துள்ளன.


தடுப்பூசிகள் தேவைப்படும் மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.


மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு தடுப்பூசி விநியோகம்.


மத்திய அரசு தொகுப்பிலிருந்து மேலும் 42 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளன.


கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் திறக்கப்படும்.


தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வமுடன் வருகிறார்கள், அரசு கட்டாயப்படுத்தவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.



செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசு எடுத்து நடத்த நடவடிக்கை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்...



 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருவதால் அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.



நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர்.



கூடங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வள்ளியூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடந்தது. கூடங்குளத்தில் உள்ள 130 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, உணவு உள்ளிட்டவை குறித்து காணொலி வாயிலாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,``தமிழகம் முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 2,53,000 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை தமிழகத்தில் 75 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.



18 முதல் 44 வயது உடையவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்காகத் தமிழக அரசின் சார்பில் 85.47 கோடி செலவில் 25 லட்சம் டோஸ் தடுப்பூசி பெறப்பட்டுள்ளது. அதனால் கிராமப்புறங்களில் உள்ள மக்களும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன். இது தவிர, அடுத்த 6 மாதங்களில் 3.5 கோடி தடுப்பூசிகள் பெறுவதற்கான டெண்டர் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டு விட்டன. இன்னும் ஆறு மாத காலத்தில் தடுப்பூசி போடாதவர்களே தமிழகத்தில் இல்லை என்ற நிலை உருவாகும்.



சுகாதாரத் துறையில் கடந்த பத்து வருடங்களில் இல்லாத வகையில், மருத்துவர்கள் அவர்கள் விரும்பிய இடங்களுக்கு கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. வெளிப்படையாகக் கலந்தாய்வு நடத்தி மருத்துவர்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டு வருவதற்கு மருத்துவத் துறையினர் வரவேற்புத் தெரிவித்து வருகிறார்கள். முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் இதே முறையில் இடமாறுதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.



கூடங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு ஏற்கெனவே செயல்பட்ட மகப்பேறு சேவைப் பிரிவு வேறொரு கிராமத்துக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் அதனால் தங்களுக்கு மகப்பேறு சேவை தேவை என்றும் மக்கள் தெரிவித்தனர். அதனால் கூடங்குளம் மருத்துவமனையில் மகப்பேறு சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கூடங்குளம் அரசு மருத்துவமனையில் தற்போது 86 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த மருத்துவமனையில் பேரிடர் கால சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதால் கூடுதல் படுக்கை வசதி மட்டுமல்லாமல் மருத்துவமனையிலேயே ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கான வசதியும் உருவாக்கப்படும்.



ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகம் தற்போது தென்காசி மாவட்டத்துக்குச் சென்றுவிட்டதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.



தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் கொரோனா பாதித்த மாவட்டங்களுக்கு கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் தொடர் நடவடிக்கைகள், தடுப்பூசி மற்றும் தளர்வில்லா ஊரடங்கு காரணமாக நோய்த் தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது.



செங்கல்பட்டில் செயல்பட்ட தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் கடந்த 10 வருடங்களாக சட்டச் சிக்கல் காரணமாக மூடப்பட்டுக் கிடந்தது. அதை முதல்வர் நேரில் ஆய்வு செய்து சட்டப் பிரச்னைகளை தீர்த்து தமிழக அரசே அதை கையில் எடுத்து மத்திய அரசின் அனுமதியுடன் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது நிறைவேறுமானால் தமிழகத்துக்கு கூடுதல் வரப்பிரசாதமாக அமையும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...