கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருங்கால வைப்புநிதி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பணம் எடுக்க முடியாது: புதிய நடைமுறை இம்மாதம் முதல் அமல்...

 


ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்புநிதி கணக்குடன், ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும். இல்லையெனில் பணம் எடுக்க முடியாது. இந்த புதிய நடைமுறை இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து வருங்கால வைப்புநிதி அதிகாரிகள் கூறியதாவது: கரோனா நோய் பரவல் காரணமாக பொதுமக்கள் வருமானமின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால், நிதிச் சிக்கலில் தவிக்கும் நபர்கள், தங்களது வருங்கால வைப்புநிதி கணக்கில் இருந்து ஒரு தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதன்படி, தற்போது பி.எஃப். கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில், சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020 சட்டத்தின்142-வது பிரிவில், அண்மையில்ஒரு புதிய விதி கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஊழியர்களின் பி.எஃப். கணக்குடன் ஆதார்எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இந்த இணைப்பை மேற்கொள்ளவில்லை எனில், ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிறுவனத்தின் சார்பில் செலுத்தப்படும் தொகை, இந்த மாதம் முதல் பி.எஃப். கணக்கில் சேராது. இதனால், ஊழியர்களின் கணக்கில் நிறுவனம் சார்பில், அவர்களது பங்குத் தொகையை பி.எஃப். கணக்கில் சேர்க்க இயலாத நிலை ஏற்படும். அத்துடன், பி.எஃப். கணக்கில் இருந்து கரோனா முன் தொகையும் எடுக்க இயலாது.


எனவே, இதுவரை பி.எஃப். கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள், உடனடியாக www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் ஆதார் எண்ணை, ஆன்லைன் மூலமாகவே இணைத்து விடலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...