கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளின் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் - மாணவர் மனசு பெட்டி - அரசாணை எண்: 83, நாள்: 17-06-2022 வெளியீடு (G.O. (1D) No.83, Dated: 17-06-2021)...

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:


ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு குழு உருவாக்கப்படும்.  


குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும். 


குறைகளை தீர்க்க ஹெல்ப் லைன் எண், மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும்.


ஆன்லைன் வகுப்பில் கண்ணியமான உடை அணிய வேண்டும்.


ஆன்லைன் வகுப்புகளை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்.


ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகள்.


>>> Click here to Download G.O. (1D) No.83, Dated: 17-06-2021...


>>> தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளின் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் (தமிழில்)...


பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி அளவில் குழு அமைக்கப்பட்ட வேண்டும். குழுவில் பள்ளி முதல்வர், 2 ஆசிரியர்கள், 2 பெற்றோர், 2 நிர்வாகிகள் இடம்பெற வேண்டும். 


பள்ளிகள் அமைக்கும் குழுவில் பள்ளிசாராத நபர் ஒருவர் இடம்பெற வேண்டும். அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வப்போது ஆன்லைன் வகுப்பு வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். மாணவர்கள் புகார் அளிக்க வசதியாக பள்ளிகளில் பெட்டிகள் வைக்கப்பட்ட வேண்டும்.


பள்ளிக் குழந்தைகளைப்பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் இணையவழிவகுப்புகளுக்கான நெறிமுறைகள் :


தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கல்வி வாரியங்களைச் சார்ந்த ( Education Boards ) அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்நெறிமுறைகள் பொருந்தும்.


மாணவர் பாதுகாப்பைத் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யவும் , அது சார்ந்த நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்யவும் , ஒவ்வொரு பள்ளியிலும் , " மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு " அமைக்கப்படும்.


இக்குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் , ஆசிரியர் இருவர் , பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் இருவர் , பள்ளி நிருவாக உறுப்பினர் ஒருவர் , ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் தேவைக்கேற்பப் பள்ளி சாரா வெளிநபர் ஒருவர் உறுப்பினர்களாக இருப்பர் .


ஒரு மாத காலத்தில் மாநில அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறையைப் பள்ளிக்கல்வித்துறை உருவாக்கும். 


அனைத்துத் தரப்பினரும் தங்களது குறைகளை எளிதாகத் தெரிவிக்கும் வகையில் இம்மையத்தில் கட்டணமில்லா நேரடி தொலைபேசி ( Hot Line ) மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் வசதி உருவாக்கப்படும்.


மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு தங்களுக்கு வரப்பெற்ற எந்த வகையான புகாரையும் உடனடியாக மாநிலக் கட்டுப்பாட்டு அறைக்குத் ( Central Complaint Centre - CCC ) தெரியப்படுத்தவேண்டும் . . இந்த மையம் புகார்களைப் பதிவுசெய்வது மட்டுமின்றி , அதுசார்ந்து பின்பற்ற வேண்டிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு வழங்கும்.


 இம்மையத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல்துறை வல்லுநர் இருப்பர் . இம்மையத்தின் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் மந்தணத்தன்மையுடன் பாதுகாக்கப்படும்.


. பள்ளிகளைச் சார்ந்த அனைத்து அங்கத்தினருக்கும் போக்சோ ( POCSO ) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாகும் வகையில் வருடந்தோறும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


இது தொடர்பான விழிப்புணர்வு கட்டகம் ( orientation module ) பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கி வழங்கப்படும்.


பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் , சுயத் தணிக்கை ( Self - audit ) செய்வதை உறுதி செய்யவும் பள்ளிக்கல்வித்துறையால் கட்டகம் ( Module ) உருவாக்கப்பட்டு வழங்கப்படும் . . மற்றும் இணையவழிக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் வகுப்பறைச் சூழலுக்கேற்றவாறு கண்ணியமாக உடை அணியவேண்டும்.


இணையவழிக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதோடு , அப்பதிவுகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வு செய்யவேண்டும்.


• புகார் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை எளிதே தெரிவிப்பதற்காகப் பள்ளிவளாகத்தில் பாதுகாப்புப் பெட்டிகள் ( Safety Boxes ) வைக்கப்படும் . மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை ஆய்வுசெய்து தக்க நடவடிக்கை எடுக்கும்.


• மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு , பள்ளியில் பெறப்பட்ட அனைத்துப் புகார்களையும் பதிவு செய்யத் தனியாக ஒரு பதிவேட்டைப் பராமரிக்கும்.


 புகாரானது எந்த முறையில் பெறப்பட்டிருந்தாலும் ( வாய்மொழி உட்பட ) இந்தப் பதிவேட்டில் பதியப்பட வேண்டும் . . அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை ' குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம் ' என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns