கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

PAN உடன் AADHAR இணைக்கும் கால அவகாசம் மேலும்3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது...

 


PAN உடன் AADHAR இணைக்கும் கால அவகாசம் மேலும்3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது...

பான் எண்ணுடன் ஆதார் இணைக்கும் (PAN - Aadhar Link) கால அவகாசம் நீட்டிப்பு .
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. பிறகு பல்வேறு காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எதிர்வரும் 2021 ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதாரிடன் பான் கார்டை இணைப்பது அவசிமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் ஜூலை 1 ஆம் தேதிக்கு பிறகும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. மேலும், ஜூன் 30க்குல் பான் - ஆதார் இணைக்கவில்லை என்றால் முதலீட்டிற்கு பாதிப்பு ஏற்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதை இணைக்கத் தவறினால் மியூச்சுவல் பண்ட் எஸ்பிஐ பாதிக்கும் எனவும், ஃபிக்ஸ்ட் டெபாசிஸ் போட்டிருப்பவர்களுக்கு 10%குப் பதில் 20% டிடிஎஸ் பிடிக்கப்படும் எனவும், 15G, 15H படிவங்களை சமர்பிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில். பான் எண்ணுடன் ஆதார் இணைக்க மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 30 ஆம் தேதியுடன் இந்த அவகாசம் முடியவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் மேலும் 3 மாதம் அவகாசம் அளித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns