கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இணைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

B.Ed., கல்வித் தகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்களுக்கு NIOS வழங்கும் 6 மாத கால சான்றிதழ் படிப்பு இணைப்பு பயிற்சி - DEE Proceedings


B.Ed., கல்வித் தகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்று  பணிபுரியும் ஆசிரியர்களுக்கு NIOS வழங்கும் 6 மாத கால சான்றிதழ் படிப்பு இணைப்பு பயிற்சி - DEE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தேசிய திறந்த நிலைப் பள்ளி மாநில முதன்மை தொடர்பு அலுவலரின் தெயல்முறைகள், சென்னை – 6. 

 

ந.க.எண் : 13466 / டி 1 / 2025, நாள். 08.08.2025.

.............................

பொருள் : தொடக்கக் கல்வி – NIOS – B.Ed கல்வித் தகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனம் (NIOS) வழங்கும் 6 மாத கால சான்றிதழ் படிப்பு இணைப்பு பயிற்சி – தகவல் தெரிவித்தல் - ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் - தொடர்பாக

பார்வை : அரசுக் கடிதம் எண். efile/373/MS/2025-1, பள்ளிக் கல்வித் துறை, நாள். 07.08.2025.

.........................


உச்ச நீதிமன்ற வழக்கு எண். MA Dy.No.4303 of 2024க்கு மாண்பமை உச்ச நீதிமன்றம் பின்வருமாறு

"As it appears that a large number of candidates with B.Ed. degree had already been appointed on the basis of eligibility criteria specified by the educational authorities, we do not think it to be equitable to effect their removal. We, accordingly, hold that the judgment delivered by this Bench on 11th August, 2023 shall have prospective operation. But prospective operation of this judgment shall be only for those candidates who were appointed without any qualification or conditions imposed by any Court of Law to the effect that their appointment would be subject to final outcome of the case which might have had been instituted by them and such candidates were in regular employment without any disqualification and were appointed in pursuance of a notice of advertisement where B.Ed. was stipulated to be val valid qualification. Services of only such candidates shall not be disturbed because of this judgment. We make it clear that this benefit is only for the candidates who were appointed prior to the date our judgment was delivered, on 11th August, 2023.


Mere selection of such candidates or their participation in the process will not entitle them for a benefit under our present order. Moreover, the candidates having B.Ed. qualification whose appointments we are protecting in this judgment, will have to undergo a bridge course and we direct the educational authorities to devise such course, which would be applicable for each state and union territory, within a period of one year from today. This course shall he only for those appointees who have been engaged with B.Ed. degree only in the subject-posts under conditions stipulated in the earlier part of this order National Council for Teacher Education shall design such course under overall supervision of the Ministry of Education, Union of India. Upon formulation of such course, the same shall be publicly notified and a timeframe shall also be given within which the respective candidates shall participate therein. Failure of any candidate to participate and complete the course within the timeframe to be given by the concerned educational authorities will invalidate the appointment of such candidate.

We also make it clear that the directions contained in this order shall not be confined to the applicant state only and shall cover all cases which may be pending in different judicial fora in any State or Union territory on the same point of law. The present application stands disposed of in the above terms 

Pending application(s), if any, shall also stand disposed of"

8.4.2024 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்க திட்டம்...

 


மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளி களுடன் இணைக்க திட்டம்...



தொடக்கப் பள்ளிகள் மாணவர் எண்ணிக்கை 13, நடுநிலைப் பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை 59 க்கு குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Scheme to merge primary and middle schools with low student strength to nearby higher secondary schools... 


The education department plans to merge primary and middle schools with student strength of less than 13 primary schools and middle schools with less than 59 students...


பான் கார்டு - ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு (Deadline for PAN card-Aadhaar linking extended till 30th June 2023)...

 

>>> பான் கார்டு - ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு (Deadline for PAN card-Aadhaar linking extended till 30th June 2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பான் -ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு

Posted On: 28 MAR 2023 2:48PM by PIB Chennai

வரி செலுத்துபவர்களின் வசதியை கருத்தில் கொண்டு பான் -ஆதார் இணைப்புக்கான காலக்கெடு, 2023- ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்கப்படாத ஆதார் அட்டைத்தாரர்களுக்கு இது தொடர்பான விவரங்கள் தனித்தனியாக அனுப்பிவைக்கப்படும்.

வருமானவரி சட்டம் 1961-ன் படி ஒவ்வொரு நபருக்கும்  பான் எண் ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதியின் கீழ் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி  முதல் பான் எண் வழங்கும் பணி தொடங்கியது. அவ்வாறு பான் எண் வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டையை பெற தகுதிப்பெற்றவர்கள் ஆவர். 2023-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியோ அல்லது அதற்கு முன்போ, பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு  கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

அவ்வாறு பான் எண்ணுடன் ஆதார் எண்  இணைக்காதவர்கள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இணைப்பு செய்ய முன்வரும் பட்சத்தில்   பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஜூலை 1-ம் தேதி முதல்  பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்களின் பான் எண் செயலற்றதாக மாற்றப்படும். அவ்வாறு பான் எண் செயலற்றதாக மாறிவிடும் பட்சத்தில், இந்த பான் எண் அடிப்படையில், வருமானவரித் தாக்கல் செலுத்தி டிடிஎஸ் பெறுவோருக்கு அந்தத் தொகை திருப்பி செலுத்தப்பட மாட்டாது. பான் எண் செயல்படும் விதத்தில் மாற்றப்படும் வரை டிடிஎஸ்-க்கான வட்டித்தொகையும் வழங்கப்படாது.  ஆனால் அதே நேரத்தில்  வருமான வரி விதிகளின்படி, டிடிஎஸ் மற்றும்  டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.

ரூ.1000 கட்டணம் செலுத்தி பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த 30 நாட்களுக்கு பின்பே அவர்களது பான் அட்டை செயல்பட துவங்கும்.

இதுவரை 51 ஆயிரம் கோடி பான் அட்டைகள்  ஆதார் எண்ணுடன் இணைப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பை மேற்கொள்ள விரும்புவோர் பின்வரும் லிங்க்-கை பயன்படுத்திக்கொள்ளவும்.

https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar .



Last date for linking of PAN-Aadhaar extended

Posted On: 28 MAR 2023 2:48PM by PIB Delhi

In order to provide some more time to the taxpayers, the date for linking PAN and Aadhaar has been extended to 30th June, 2023, whereby persons can intimate their Aadhaar to the prescribed authority for Aadhaar-PAN linking without facing repercussions. Notification to this effect is being issued separately.

Under the provisions of the Income-tax Act, 1961(the ‘Act’) every person who has been allotted a PAN as on 1st July, 2017 and is eligible to obtain Aadhaar Number, is required to intimate his Aadhaar to the prescribed authority on or before 31st March, 2023, on payment of a prescribed fee. Failure to do so shall attract certain repercussions under the Act w.e.f. 1st April, 2023. The date for intimating Aadhaar to the prescribed authority for the purpose of linking PAN and Aadhaar has now been extended to 30th June, 2023.

From 1st July, 2023, the PAN of taxpayers who have failed to intimate their Aadhaar, as required, shall become inoperative and the consequences during the period that PAN remains inoperative will be as follows:

  1. no refund shall be made against such PANs;
  2. interest shall not be payable on such refund for the period during which PAN remains inoperative;  and
  3. TDS and TCS shall be deducted /collected at higher rate, as provided in the Act.

The PAN can be made operative again in 30 days, upon intimation of Aadhaar to the prescribed authority after payment of fee of Rs.1,000.

Those persons who have been exempted from PAN-Aadhaar linking will not be liable to the consequences mentioned above. This category includes those residing in specified States, a non-resident as per the Act, an individual who is not a citizen of India or individuals of the age of eighty years or more at any time during the previous year.

It is stated that more than 51 crore PANs have already been linked with Aadhaar till date. PAN can be linked with Aadhaar by accessing the following link https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar .


பான்-ஆதார் இணைக்கவில்லை என்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? (What are the consequences of not linking PAN-Aadhaar?)...



 பான்-ஆதார் இணைக்கவில்லை என்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? (What are the consequences of not linking PAN-Aadhaar?)...


1.ஒரு நபரின் பான் கார்டு ஆதார் கார்டுடன் இணைக்கப்படாதபோது அது செயலிழந்துவிடும்.


2. ஏப்ரல் 1 முதல் எந்த ஒரு வங்கிகளும் உங்களால் கணக்கு புதிதாக தொடங்க முடியாது. 


3. ஏற்கனவே இருந்த வங்கிக் கணக்கில் உங்களது டெபிட் கார்டு வேலிடிட்டி முடிவடைந்து விட்டால் புதிய கார்டு வழங்குவதில் சிக்கல் ஏற்படும்


4.பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், மானியம் பெறுதல் போன்ற அரசு சேவைகளை பெறுவது கடினம்.


5.பேங்கிலேயே அல்லது போஸ்ட் ஆபீஸ்லயோ, ஒரு நாளைக்கு50,000 ரூபாய்க்கு மேல் உங்களால் டெபாசிட் பண்ண முடியாது 


6.பான்-ஆதார் இணைக்கப்படாதபோது, ​​புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் என்பதால், பழையது சேதமடைந்தாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ புதிய பான் கார்டைப் பெறுவது கடினமாக இருக்கலாம்.


7.வருமான வரி தாக்கல் செய்ய முடியாது.வரி செலுத்துவோர் ITR ஐ தாக்கல் செய்யவோ அல்லது செயல்படாத PAN கார்டுகளுடன் ITR ஐ கோரவோ முடியாது.

நிலுவையில் உள்ள வருமானங்கள் செயலாக்கப்படாது, மேலும் செயல்படாத பான் கார்டுகளுக்கு நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப்பெற முடியாது. TCS/TDS அதிக விகிதத்தில் பொருந்தும்.


8.அபராதமும் விதிக்கப்படும்


பான்-ஆதார் இணைப்பிற்கான விலக்கு வகையின் கீழ் யார் வருவார்கள்?


ஜம்மு மற்றும் காஷ்மீர், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் நபர்கள்.


வருமான வரிச் சட்டம், 1961 இன் படி குடியுரிமை பெறாத வரி விதிக்கக்கூடிய நபர்.


80 வயதுக்கு மேற்பட்டவர்கள் (சூப்பர் மூத்த குடிமக்கள்).


இந்திய குடிமக்கள் அல்லாத நபர்கள்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


PAN வைத்திருப்பவர்கள் அனைவரும் 31.3.2023க்கு முன் ஆதாருடன் (Aadhar) தங்கள் PANஐ இணைப்பது கட்டாயமாகும் - 01.04.2023 முதல், ஆதாருடன் இணைக்கப்படாத PAN செயலிழக்கப்படும் - வருமானவரித்துறை (It is mandatory for all PAN holders to link their PAN with Aadhaar before 31.3.2023 - From 01.04.2023, PAN not linked with Aadhaar will be deactivated - Income Tax Department)...



PAN வைத்திருப்பவர்கள் அனைவரும் 31.3.2023க்கு முன் ஆதாருடன் (Aadhar) தங்கள் PANஐ இணைப்பது கட்டாயமாகும் - 01.04.2023 முதல், ஆதாருடன் இணைக்கப்படாத PAN செயலிழக்கப்படும் - வருமானவரித்துறை (It is mandatory for all PAN holders to link their PAN with Aadhaar before 31.3.2023 - From 01.04.2023, PAN not linked with Aadhaar will be deactivated - Income Tax Department)...


 வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து நிரந்தரக் கணக்கு எண் (PAN) வைத்திருப்பவர்களும் 31.3.2023க்கு முன் ஆதாருடன் தங்கள் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். 1.04.2023 முதல், ஆதாருடன் இணைக்கப்படாத PAN செயலிழக்கப்படும். இது கட்டாயம், அவசியம். தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்!


As per Income-tax Act, 1961, it is mandatory for all PAN holders, who do not fall under the exempt category, to link their PAN with Aadhaar before 31.3.2023.  

From 1.04.2023, the unlinked PAN shall become inoperative. 

What is mandatory, is necessary. Don’t delay, link it today!


மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பு - எழும் ஐயங்களும் பதில்களும் (FAQs) - ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கலாமா? - முழு விவரம் (EB Power Connection - Aadhaar Number Linking - Frequently Asked Questions and Answers (FAQs) - Can more than one EB power connection be linked to the same Aadhaar number? - Full Details)...



>>> மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பு - எழும் ஐயங்களும் பதில்களும் (FAQs) -  ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கலாமா? - முழு விவரம் (EB Power Connection - Aadhaar Number Linking - Frequently Asked Questions and Answers (FAQs) - Can more than one EB power connection be linked to the same Aadhaar number? - Full Details)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.


இதனிடையே நுகர்வோர்களுக்கு இந்த இணைப்பு குறித்து எழும் சில கேள்விகளுக்கான பதில்களை இங்கு பார்க்கலாம்.


1. மின் இணைப்புடன் ஆதாரை எப்படி இணைப்பது?


ஆதாரை இணைக்க https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்களின் மின் இணைப்பு பதிவை உள்ளிட்டு ஆதார் எண்ணை இணைக்கலாம் அல்லது மின் வாரிய அலுவலகத்துக்கு நீங்களே நேரில் சென்று ஆதார் எண்ணை இணைக்கலாம்.


2. இணையம் மூலம் எவ்வாறு ஆதார் எண்ணை இணைப்பது?


Step 1 : ஆதாரை இணைக்க https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யவும்.


Step 2 : உங்கள் மின் இணைப்பில் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும். அந்த OTPயை பதிவிட்ட பிறகு, உங்களின் ஆதார் கார்டையும், ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும்.


Step 3 : நீங்கள் அந்த வீட்டிற்கு உரிமையாளரா அல்லது வாடகைக்கு குடியிருப்போரா அல்லது நீங்கள் அந்த வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா என்ற ஆப்ஷன்களை தோன்றும். அதில் உங்களுக்கான விருப்பத்தை தேர்வு செய்து சப்மிட் செய்தால் போதும். உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைத்துவிடலாம். இதையடுத்து ஒப்புகை ரசீது வரும். அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


3. நான் வாடகை வீட்டில் உள்ளேன். என் ஆதாரை நான் குடியிருக்கும் வீட்டின் மின் இணைப்போடு இணைக்க வேண்டுமா?


வீட்டின் உரிமையாளர் அனுமதி தந்தால் வாடகை வீட்டில் உள்ளவரே பதிவு செய்துகொள்ள முடியும்.


4. யாரெல்லாம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?


வீடு, விசைத்தறி, விவசாயம் மற்றும் குடிசை வீட்டு மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.


5. வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை இணைத்தால், மின் இணைப்பு அவரது பெயருக்கு மாறிவிடுமா?


இல்லை. ஆதார் இணைப்பு என்பது ஒரு விவரம் மட்டுமே. வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பின் பெயரில் மாற்றம் செய்ய முடியும்.


6. வாடகைதாரர் மாறும்பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?


வாடகைதாரர் மாறும்போது, புதிதாக குடியிருக்க வருவோரின் ஆதாரை இணைக்கலாம்.


7. நான் 5 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித் தனி மீட்டர்கள் உள்ளன. நான் எப்படி ஆதாரை இணைப்பது?


உங்கள் ஆதார் எண்ணையே அனைத்து இணைப்புகளுக்கும் வழங்க முடியும். அதனால், எந்தப் பாதிப்பும் இல்லை.


8. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்னவாகும்?


ஆதாரை இணைக்க காலக்கெடு இல்லை; ஆனால் மானியம் பெறுபவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


9. ஆதார் எண்ணை இணைத்தால்தான் நான் மின் கட்டணத்தை செலுத்த முடியுமா?


ஒரே நேரத்தில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க அதிக நுகர்வோர் முயற்சித்ததால், சர்வர் முடங்கியது. இதையடுத்து, 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி மின் வாரியம் உத்தரவிட்டது. மேலும், ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே, ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.


10. என் தாத்தா/அப்பா பெயரில் மின் இணைப்பு உள்ளது. ஆனால், அவர் இறந்துவிட்டார். நான் எப்படி ஆதாரை இணைப்பது?


மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யாவிட்டாலும், யார் பெயரில் மாற்றம் செய்ய உள்ளீர்களோ அவரது பெயரில் உள்ள ஆதார் எண்ணை இணைக்கலாம். உங்களுடைய பெயரில் நீங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமானால், உங்களுடைய ஆதார் கார்டை பதிவேற்றம் செய்தால் போதும்.


11. ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமா?


கட்டாயம் ரத்து செய்யப்படபடாது. அப்படி யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


12. ஆதாரை எவ்வளவு நாளில் இணைக்க வேண்டும்?


ஆதாரை இணைக்க காலக்கெடு எதுவும் இல்லை. ஆனால், கட்டாயம் இணைக்க வேண்டும்.


13. எங்களிடம் இணையதள வசதி இல்லை. நான் எப்படி இணைப்பது?


டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம்.


அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதைத் தடுத்தல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 01547/ எம்/ இ1/ 2022, நாள்: 19-03-2022 - இணைப்பு: பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் வழித்தடம் மற்றும் பள்ளிகளின் விவரம் (மாவட்ட வாரியாக) [ Preventing unsafe amd footboard travel of school students on government and private buses - Proceedings of the Commissioner of School Education - Attachment: Bus Route of footboard travelling and School Details (District wise)]...



>>> அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதைத் தடுத்தல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 01547/ எம்/ இ1/ 2022, நாள்: 19-03-2022 - இணைப்பு: பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் வழித்தடம் மற்றும் பள்ளிகளின் விவரம் (மாவட்ட வாரியாக) [ Preventing unsafe amd footboard travel of school students on government and private buses - Proceedings of the Commissioner of School Education - Attachment: Bus Route of footboard travelling and School Details (District wise)]...

உள்ளடக்கிய வகுப்பறைகளை உருவாக்குவது குறித்த கடந்த சனிக்கிழமை (26.02.2022) அன்று நடந்த நமது பயிற்சியைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் கற்றுக்கொண்ட உத்திகளை உங்களது வகுப்பறைகளில் நடைமுறைப்படுத்த சில குறிப்புகள் (Building Inclusive Classrooms techniques learned by teachers in your classrooms)...

 


மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் அனைவருக்கும் *Sol’s ARCன்* வணக்கங்கள்!


உள்ளடக்கிய வகுப்பறைகளை உருவாக்குவது குறித்த கடந்த சனிக்கிழமை (26.02.2022) அன்று நடந்த நமது பயிற்சியைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் கற்றுக்கொண்ட உத்திகளை உங்களது வகுப்பறைகளில் நடைமுறைப்படுத்த சில குறிப்புகளை வழங்க விரும்புகிறோம்.


கரும்பலகை உத்திகள் விளக்கப்பட்டுள்ள  காணொளியை காண இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும். 


https://linktr.ee/iedsa


நமது ஆசிரியர்கள் சிலரால் செய்யப்பட்ட வகுப்பறை கரும்பலகையின் சில மாதிரிகளும் உங்களின் புரிதலுக்காக கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் வகுப்பறையில் இதே போன்ற கரும்பலகை அமைப்பை பயிற்சி செய்யுங்கள். அதை படம் எடுத்து அதே இணைப்பில் படத்தை நாளை மதியம் 01.00 மணிக்குள் பதிவேற்றவும்.


(https://linktr.ee/iedsa)


 உங்கள் தொடர் ஒத்துழைப்புக்கு நன்றி!!


உள்ளடக்கிய வகுப்பறைகளை உருவாக்குவதற்கான உங்கள் முயற்சிகளுக்கு  நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

Eye Screening பதிவிடுவதற்கான TNEMIS Appன் முந்தைய Version 0.0.50 Download Link...



Eye Screening பதிவிடுவதற்கான TNEMIS Appன் முந்தைய Version 0.0.50 Download Link...


https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools


Google Play Storeல் உள்ள மேற்கண்ட Link TNEMIS App ன் Version 0.0.52 ஆகும். இதில் "Eye Screening" Option நீக்கப்பட்டுள்ளது. 


TNEMIS Appன் முந்தைய Version 0.0.50ல் "Eye Screening" Option உள்ளது.


அதனை Download செய்வதற்கான Link:

>>> Click Here...


இந்த இணைப்பை தொட்டவுடன் அதனை Install செய்வதற்கு Install from unknown source என Permission கேட்கும். அதற்கு அனுமதி கொடுத்து Install செய்து கொள்ளலாம்.


இதில் ஆசிரியர்கள் தங்கள் தனிப்பட்ட User Name, Password கொடுத்து உள்ளே சென்றால் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கான கண் பார்வை குறித்த வினாக்களுக்குரிய விடைகளை பதிவு செய்து Save கொடுக்கலாம்.



👁️ தங்கள் வகுப்பு மாணவர்களின் eye screening விவரங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்


1.ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு வருகை பதிவு செய்த old tn emis mobile app-யில் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய user id & password பயன்படுத்தி login செய்யவும்.


2.login செய்தபின் eye screening என்ற option-ஐ click செய்யவும்.


3.நீங்கள் ஏற்கனவே உங்கள் பள்ளியின் emis portal-லில் எந்த வகுப்பிற்கு class teacher என assign செய்துள்ளீர்களோ அந்த வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் open ஆகும்.


4.ஒவ்வொரு மாணவனையும் click செய்து கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு ஆம்/இல்லை என பதிவு செய்து save செய்யவும்.


5. ஒருமுறை save செய்தபின் பிறகு திருத்தம் செய்ய இயலாது.


6.மேலும் முக்கிய குறிப்பு  old tn emis mobile app update செய்யாமல் இருந்தால் மட்டுமே இந்த eye screening option enable-ஆக இருக்கும்.


நீங்கள் old tn emis mobile app-ஐ தற்போது update செய்திருந்தால் அந்த option disable -ஆகி இருக்கும்.


7.உங்களது ஆசிரிய நண்பர்கள் யாராவது  update செய்யாமல் இருந்தால் அதில் உங்களது id -யை பயன்படுத்தி மாணவர்களின் கண் பரிசோதனை விவரங்களை பதிவு செய்துகொள்ளவும்.


அல்லது 


TNEMIS Appன் முந்தைய Version 0.0.50ல் "Eye Screening" Option உள்ளது.


அதனை Download செய்வதற்கான Link:

>>> Click Here...


இந்த இணைப்பை தொட்டவுடன் அதனை Install செய்வதற்கு Install from unknown source என Permission கேட்கும். அதற்கு அனுமதி கொடுத்து Install செய்து கொள்ளலாம்.


இதில் ஆசிரியர்கள் தங்கள் தனிப்பட்ட User Name, Password கொடுத்து உள்ளே சென்றால் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கான கண் பார்வை குறித்த வினாக்களுக்குரிய விடைகளை பதிவு செய்து Save கொடுக்கலாம்.


INTERACTIVE SMART BOARD TRAINING - SCHEDULE & DIRECT LINKS...

 



அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ICT - SMART BOARD குறித்த பயிற்சி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அமைந்துள்ள Hi-Tech Labல்  17.2.2022 மற்றும் 3.3.2022 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.


INTERACTIVE SMART BOARD TRAINING - SCHEDULE & DIRECT LINKS...


>>> [10:00 - 10:45] YouTube LIVE | Introduction to the training


>>> [11:00 - 12:30] Video based training | YouTube playlist


>>> [11:00 - 12:30] Video based training | Google Drive


>>> [03:30 - 04:00] YouTube LIVE | Q&A



Access all the training videos links in one-go - linktr.ee/smartboard


எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான இணைப்பு (Ennum Ezhuthum Online Training Link)...

 


எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான இணைப்பு...


http://tntp.tnschools.gov.in


மேற்கண்ட இணையதளம் வாயிலாக தங்களுடைய எட்டு இலக்க ஐடியை பயன்படுத்தி எண்ணும் எழுத்தும் பயிற்சியைத் தொடரலாம்.


 எண்ணும் எழுத்தும் Online பயிற்சி EMIS website ல் தற்போது update  செய்யப்பட்டுள்ளது.


(பயிற்சியானது  TNEMIS appல் அல்ல)


பயிற்சி பெற Google chromeல் சென்று கீழ்கண்ட link ஐ பயன்படுத்தி


👇👇👇👇👇👇👇👇👇👇


http://tntp.tnschools.gov.in 


அவரவர் User ID , Password கொண்டு  Login செய்யவும்.


Login செய்தபின் Dashboardல் தமிழில் எண்ணும் எழுத்தும் பயிற்சி என இருக்கும்.


அதை Click செய்தால் வீடியோ இருக்கும். அதன் பின் Questions இருக்கும்.


அதை படித்து Save கொடுத்தால் Completed என வரும்.


ஒவ்வொரு கட்டகம் முடிக்கவும் 2 முதல் 4 நாட்கள் வரை Time உள்ளது.


எனவே எப்போது வேண்டுமானாலும் முடிக்கலாம். எந்த நேரத்திலும் Attend செய்யலாம்.


💡💡💡💡💡💡💡💡💡💡


*எண்ணும், எழுத்தும் பயிற்சி கட்டகம்


*மொத்தம் 13 படிகள் உள்ளன..


👁️‍🗨️👁️‍🗨️ *இதை போன்ற நீல நிற கண்களை தெரிவு செய்து ஒவ்வொரு நிலையாக கடக்க வேண்டும்!


*4 வது படிநிலை video மற்றும் 9 வது படிநிலை VIDEO இடையில் 8 - choose the best answer type questions.. கேள்விகளுக்கு பதில் கொடுக்க வேண்டும்


*13 படிகள் முடிந்த பிறகு QUIZ இதில் 19 கேள்விகள் பதில் அளித்து save & submit கொடுத்தால் முடிந்தது!

உங்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் மற்றும் நாள் பற்றி அறிய இணைப்பு ( Polling Personnel Training Details - Link to find out the place and day of the election training class for you)...



தங்கள் அலைபேசி எண்ணுக்கு கீழே உள்ளது போன்று SMS வரும்.

"Dear Raj K (PP id : 123456),It is informed that you are appointed as Polling Officer - 1 for Urban Local Body Elections - 2022. Your 1st Training Class on 31-01-2022 02:30 PM  For further info.: https://tnsec.tn.nic.in/sl/ppps.html - DEO/District Collector , TNSEC:"


கீழேயுள்ள Link மூலம் உங்கள் அலைபேசி எண்ணுக்கு வரும் PP id எண்ணைப் பதிவு செய்து உங்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் மற்றும் நாள் பற்றி அறிந்து கொள்ளலாம்...


https://tnsec.tn.nic.in/sl/ppps.html 

TN EMIS School Attendance App Download Link. அனைத்து ஆசிரியர்களும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 10.01.2022 முதல் இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும்...

 


TN EMIS School Attendance App புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்களும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 10.01.2022 முதல் இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும்.


New EMIS Attendance app Link...


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis


>>> TN EMIS School Attendance New Appல் பதிவு மேற்கொள்வது குறித்த விளக்கம் (காணொளி)...




ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி

EMIS இணையதளத்தில்  ஆசிரியர் மாணவர் Local body ஆகியோரின் வருகையை குறித்தல் TN EMIS SCHOOL  APP புதியதாக உருவாக்கப்பட்டுள்ள  செயலியை எவ்வாறு கையாளுதல் என்பதற்கான 


பள்ளி வேலைநாளைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகள்

👇👇👇👇👇👇👇👇👇👇

*🎯🎯Today Status என்பதை Click* செய்து பள்ளியின் வேலை நாளை உறுதி செய்தல் வேண்டும்
இதில் உள்நுழைந்து *Fully Working* என்பதை Click செயதால் அனைத்து மாணவர்களுக்கும் வருகையை பதிவு செய்ய இயலும் இந்த Option ஐ தேர்வு செய்தால் அனைத்து வகுப்புகளுக்கும் கடடாயம் விடுபடாமல் வருகையை பதிவு செய்தல் வேண்டும்

*🎯🎯Fully not working* என்பதை  தேர்வு செயதால் உரிய காரணத்தை வழங்க வேண்டும் இதில் ஆசிரியர் வருகையை மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் மாணவர்களுக்கு பதிவு செய்ய இயலாது

*🎯🎯Partially Working* என்பதை தேர்வு செய்தால் அன்றைய தினத்தில் நடைபெற இருக்கும் வகுப்புகளை மட்டும் தேர்வு செய்து அவ்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் எனவே பள்ளி தலைமையாசிரியர்கள் அன்றைய தினத்தில் செயல்படும் வகுப்புகளை கவனமாக தேர்வு செய்தல் வேண்டும் மேலும் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு Save செய்தல் வேண்டும்

🎯🎯மேலே குறிப்பிட்ட  Today Status பதிவு செய்தால் மட்டுமே மாணவர்கள் வருகை ஆசிரியர் வருகை மற்றும் Local body வருகையை பதிவு செய்ய இயலும்

🎯🎯Staff Attendance வருகையை பதிவு செய்ய Click செய்யும் போது Automatic Sync setting open ஆகும் அதில் School Information Todays Status Staff List Students List அனைத்து Sync குறியுடன் இருக்கும் இந்த நான்கு விவரங்கள் அனைத்தையும் ஒரு முறை Click செய்து Sync செய்து கொள்ள வேண்டும்
School Information Sync செய்த பின்பு Today Status Sync செய்யும் போது Information Box Display வந்தால் மீண்டும் Home page உள்ள Today Status ல் Save செய்த  பின்பு  தான்  பள்ளி விவரங்கள் Sync ஆகும்
அடுத்து Staff List Sync செய்தால் அனைத்து ஆசிரியர்கள் பெயர் Sync ஆகும்
பின்பு Students List Sync செய்தல் வேண்டும் பள்ளி தலைமையாசிரியர் Todays Status ல் Partially Working என பதிவு செய்திருந்தால்  எந்தெந்த  வகுப்புகளுக்கு இன்று வேலை நாள் என்பதை குறிப்பிட்டுள்ளாரோ அந்த வகுப்புகளை Select செய்து Sync செய்தல் வேண்டும்

🎯🎯உதாரணமாக ஒரு உயர் நிலைப்பள்ளியானது  அன்றைய தினத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி வேலை நாள் என குறிப்பிட்டு இருந்தால் 10 ஆம் வகுப்பு மற்றும் அதன் Sectionயையும்  select செய்து Sync கொடுத்தல் வேண்டும் தற்போது மாணவர்கள் விவரமும் Sync செய்யப்பட்டிருக்கும்

*🎯🎯Teachers Attendance School Login*

ஆசிரியர்கள் வருகையை TN EMIS School App ல் School Login ஐ மட்டும் பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும்

Teacher List Strudent List Stored Locally என வரும்  Sync Setting ல் அனைத்து முடித்த பின்பு Home page ல் Staff Attendance Click செய்து Open செய்தால் Sync ஆன அணைத்து ஆசிரியர்கள் பெயர்கள் உள்ள பட்டியல் Display ஆகும் இதில் ஆசிரியர் வருகை புரிந்தால் P Present எனவும் இன்றைய நாளில் அவருக்கு Work Allotment இல்லை எனில் ஒரு முறை Click செய்து N/A எனவும் மற்றொரு  முறை Click செய்து OD Training Dt Deputation A  Absent ( CL ML Half day CL EL RH LOP UEL Parttime Maternity Leave Study Leave Special Leave Un Authorise N/A No Duty Teaching Staff Non Teaching Basic Staff ( Lab Asst Cleark ) இவ்வாறாக வருகையை பள்ளி Login ல் பதிவு செய்தல் வேண்டும்

*🎯🎯Students Attendance Teacher Individual Login*

மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் Teacher Login ஐ மட்டும்பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும்
வருகை புரிந்த மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் ஆசிரியர்கள் தங்களது EMIS ID Password கொடுத்து Open செய்யவும் Students Attendance Class Teacher Login ல் Open செய்து Student List Sync செய்தல் வேண்டும் பின்பு  Students Attendance Click செய்து வருகை புரிந்த மாணவர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும்

*🎯🎯Local body Attendance School Login*

பள்ளிக்கு நகராட்சி மற்றும் பஞ்சாயத்து மூலம் வகுப்பறை மற்றும் கழிவறை சுத்தம் செய்வதற்காக வருகை புரியும் Sweepers மற்றும் Scvengers ன் எண்ணிக்கை மற்றும் பணிபுரிந்த நேரத்தையும் குறிப்பிட்டு  Save செய்தல் வேண்டும்

*🎯🎯குறிப்பு*

Save செய்த விவரங்கள் ஆரஞ்ச் கலர் காண்பித்தால் Network கிடைக்கும் நேரங்களில் Open செய்து  பச்சை  கலர் மாறும் வண்ணம் Save செய்தல் வேண்டும்.

____ * _____

அனைத்து அரசு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) கவனத்திற்கு

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை பதிவினை மேற்கொள்ள TN EMIS school app புதிதாக துவக்கப்பட்டுள்ளது. 10.01.2022 முதல் இந்த செயலியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். 09.01.2022 -க்குள் அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்..

தலைமை ஆசிரியர்கள் பள்ளியின் login-யை பயன்படுத்தி login செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள் தங்களது Teacher Login-யை பயன்படுத்தி login செய்ய வேண்டும்.


மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி 09.01.2022 -க்குள் அனைத்து ஆசிரியர்களும் ஒரு முறை login செய்து பயன்படுத்த வேண்டும்.


New EMIS Attendance app Link

👇🏻👇🏻👇🏻


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis


குறிப்பு: 

09.01.22 வரை தற்போது பயன்படுத்தும் TN EMIS school app பயன்படுத்தி வருகைப்பதிவு மேற்கொள்ளவும். - முதன்மைக் கல்வி அலுவலர்,கரூர்.

இல்லம் தேடி கல்வி (Illam Thedi Kalvi) - Mobile Application Updated version 0.0.17 - Download Link...



இல்லம் தேடி கல்வி Mobile Application Updated version 0.0.17


Download Link 👇🏻


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk


தங்களது பள்ளியின் குடியிருப்பு பகுதிகளில் பதிவு செய்த அனைத்து தன்னார்வலர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வி திட்டம் - தன்னார்வலர்களுக்கான டெலிகிராம் குழு (Illam Thedi Kalvi - Official Telegram Group for Volunteers)...

 


இல்லம் தேடிக் கல்வி திட்டம் - தன்னார்வலர்களுக்கான டெலிகிராம் குழு...


இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், தன்னார்வலர்கள் தங்களது கல்வி செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளவும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் டெலகிராம் குழு  ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இதில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டார நிலை அலுவலர்கள், ஆசிரியர்கள், சமூகப்பணி அமைப்பின் பிரதிநிதிகள், இணைந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன். 


இந்த குழுவின் நோக்கங்கள்:-


1. தன்னார்வலர்களுக்கு புதிய கல்வி உத்திகளை பகிர்வது.


2. தன்னார்வலர்கள் தாங்கள் செய்யும் சிறப்பான கற்பித்தல் செயல்பாடுகளைப் பகிர்வது.


3. சிறந்த தன்னார்வலர்களை ஊக்கப்படுத்துவது.


4. மாநில திட்ட இயக்குனரகத்திலிருந்து  தகவல்களை நேரடியாக தன்னார்வலர்களுக்கு தெரியப்படுத்துவது.


5. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை மேலும் செம்மைப்படுத்த களத்தில் இருந்து ஆலோசனைகள் பெறுவது.


6. தன்னார்வலர்களின் குறை தீர்த்தல். 


இந்த டெலிகிராம் குழுவில் இணைந்து கொள்ள Telegram ஆப்பை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும். பிறகு கீழிருக்கும் லிங்க் வழியாக இந்தக் குழுவில் இணையலாம். 


இந்த தகவலை அனைத்து தன்னார்வலர்களுக்குத் தெரியப்படுத்தி டெலிகிராம் குழுவில் இணைக்கவும். 


Link: 

https://t.me/+h4DsqIH4cUw3NGFl


அன்புடன்...


க.இளம்பகவத், இ.ஆ.ப.,

சிறப்புப் பணி அலுவலர்,

இல்லம் தேடிக் கல்வி.

ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய இணை அமைச்சர் அறிவிப்பு...



 நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளையும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு மேலும் செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக இணை அமைச்சர் அறிவித்துள்ளார்.


கால அவகாசம் நீட்டிப்பு: 

நாடு முழுவதுமுள்ள 5.4 லட்சம் நியாய விலைக் கடைகளின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்திற்காக அனைத்து ரேஷன் அட்டைகளையும் ஆதார் அட்டையுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு மாநிலத்தின் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பலனடையும் ஒருவர் இரு மாநிலங்களில் ரேஷன் அட்டையைப் பெற முடியாது. 


அந்தந்த மாநிலங்களில் வசிப்பவர்கள், வழக்கம்போல உணவுப் பொருட்களை பெறலாம். தங்களுக்கான ரேஷன் பொருளை மாநிலத்தில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரேஷன் கார்டுகள் குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். மொத்தமுள்ள 23 கோடி அட்டைகளில் இதுவரை 85 சதவீதம் பேர் மட்டுமே இணைத்துள்ளனர்.


இந்நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அறிவித்துள்ளார். மேலும், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2020ல் தமிழகத்திற்கு ரூ.6,317.64 கோடியும், கர்நாடகத்திற்கு ரூ.3,993.80 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது. 2021ம் நிதியாண்டில் தமிழகத்திற்கு ரூ.1,169.38 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.1,276.03 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.


PAN உடன் AADHAR இணைக்கும் கால அவகாசம் மேலும்3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது...

 


PAN உடன் AADHAR இணைக்கும் கால அவகாசம் மேலும்3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது...

பான் எண்ணுடன் ஆதார் இணைக்கும் (PAN - Aadhar Link) கால அவகாசம் நீட்டிப்பு .
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. பிறகு பல்வேறு காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எதிர்வரும் 2021 ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதாரிடன் பான் கார்டை இணைப்பது அவசிமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் ஜூலை 1 ஆம் தேதிக்கு பிறகும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. மேலும், ஜூன் 30க்குல் பான் - ஆதார் இணைக்கவில்லை என்றால் முதலீட்டிற்கு பாதிப்பு ஏற்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதை இணைக்கத் தவறினால் மியூச்சுவல் பண்ட் எஸ்பிஐ பாதிக்கும் எனவும், ஃபிக்ஸ்ட் டெபாசிஸ் போட்டிருப்பவர்களுக்கு 10%குப் பதில் 20% டிடிஎஸ் பிடிக்கப்படும் எனவும், 15G, 15H படிவங்களை சமர்பிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில். பான் எண்ணுடன் ஆதார் இணைக்க மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 30 ஆம் தேதியுடன் இந்த அவகாசம் முடியவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் மேலும் 3 மாதம் அவகாசம் அளித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

30-06-2021க்குள் PAN – Aadhar Number இணைக்க வேண்டும் - தவறினால் முதலீட்டுக்கு பாதிப்பு ஏற்படும், அபராதங்கள் விதிக்கப்படும் - ஆன்லைனில் PAN எண் உடன் ஆதார் எண் இணைக்க வலைதள முகவரி...



 ஜூன் 30க்குள் பான் – ஆதார் எண் இணைக்க வேண்டும் - தவறினால் முதலீட்டுக்கு பாதிப்பு ஏற்படும், அபராதங்கள் விதிக்கப்படும்...


*மேலும், வருமான வரி தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும்...

 ➖➖➖➖➖➖➖➖➖



PAN  எண் உடன் AADHAR எண் இணைப்பு STASTUS அறிந்து உறுதி செய்ய...

 >>> Click Here to Know PAN - Aadhar Number Linking Status...




ஆன்லைனில் PAN எண் உடன் ஆதார் எண் இணைக்க...

 >>> Click Here to Link PAN with Aadhar Number...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்