கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வித் தொலைக்காட்சி பயன்பாடு: வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் கல்வித்துறை அலுவலர்...



 கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கல்வி கற்பது குறித்து புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகிறார்.


தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று கல்வி கற்க முடியாத சூழல் உள்ளதால், கல்வித் தொலைக்காட்சி வாயிலாகக் கற்பிக்கப்படுகிறது.


புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் கல்வித் தொலைக்காட்சி வகுப்பு நடைபெறும்போது மாணவர்கள் கவனிக்கிறார்களா என்பதை மாணவர்களின் வீடுகளுக்கே சென்று மாவட்டக் கல்வி அலுவலர் ப.சண்முகநாதன் ஆய்வு செய்து வருகிறார்.


அதன்படி, இலுப்பூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி லத்திகா சரணின் வீட்டுக்கு  (ஜூலை 1 அன்று) சென்று மாணவியுடன் ஆலோசனை செய்தார்.


அப்போது, பள்ளித் துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.தமிழ்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆய்வுப் பணி மேற்கொண்டு வரும் மாவட்டக் கல்வி அலுவலரை, பெற்றோர்கள் வரவேற்றனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...