கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய இணை அமைச்சர் அறிவிப்பு...



 நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளையும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு மேலும் செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக இணை அமைச்சர் அறிவித்துள்ளார்.


கால அவகாசம் நீட்டிப்பு: 

நாடு முழுவதுமுள்ள 5.4 லட்சம் நியாய விலைக் கடைகளின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்திற்காக அனைத்து ரேஷன் அட்டைகளையும் ஆதார் அட்டையுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு மாநிலத்தின் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பலனடையும் ஒருவர் இரு மாநிலங்களில் ரேஷன் அட்டையைப் பெற முடியாது. 


அந்தந்த மாநிலங்களில் வசிப்பவர்கள், வழக்கம்போல உணவுப் பொருட்களை பெறலாம். தங்களுக்கான ரேஷன் பொருளை மாநிலத்தில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரேஷன் கார்டுகள் குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். மொத்தமுள்ள 23 கோடி அட்டைகளில் இதுவரை 85 சதவீதம் பேர் மட்டுமே இணைத்துள்ளனர்.


இந்நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அறிவித்துள்ளார். மேலும், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2020ல் தமிழகத்திற்கு ரூ.6,317.64 கோடியும், கர்நாடகத்திற்கு ரூ.3,993.80 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது. 2021ம் நிதியாண்டில் தமிழகத்திற்கு ரூ.1,169.38 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.1,276.03 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Anna University has withdrawn the notification of 'Professors appointment in Consolidated Pay'

 'தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அண்ணா பல்கலைக்கழகம் Anna University has withdrawn the ...