கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியினை நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...

 


தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், கல்வியியல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறது. இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன.


இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி அவர்களை நியமித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஐ.லியோனி மேடைப் பேச்சாளராகவும், நகைச்சுவை பட்டிமன்ற  நடுவராக அறியப்பட்டுவராவார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டிற்கான  கலைமாமணி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி வெளியீடு எண்: 400, நாள்: 07-07-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தந்தை பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் - UPSC தேர்வில் சர்ச்சை கேள்வி

யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின் ஜாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்டுள்ளதால் சர்ச்சை சாதியை ஒழிக்க பாடுபட்ட தந...