இடுகைகள்

பாடநூல் கழகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு தமிழில் பாடபுத்தகங்கள் – பாடநூல் கழக தலைவர் தகவல்...

படம்
  தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயா்கல்விக்கான பாடப் புத்தகங்களை தமிழ் மொழியில் அச்சிடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவா் ஐ.லியோனி தெரிவித்துள்ளார். தமிழில் உயர்கல்வி பாடநூல்கள் : தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற உயர்கல்வி பாடநூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. இதனால் தமிழ் வழியில் கல்வி பயின்று கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். 12ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்து விட்டு கல்லூரியில் முழுவதும் ஆங்கிலத்தில் இருப்பதால் அவர்களால் கருத்துகளை முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை, இதனால் கற்றலில் பாதிப்பு ஏற்படுவதாக கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற உயர்கல்வி பாட திட்டங்களை தமிழில் மொழி பெயர்க்க தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது. ஆங்கில வழியில் மருத்துவம், பொறியியல் படிக்கும் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்கும் நோக்கில், தமிழ் வழியில் மருத்துவம், பொறியியல் பாடங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் மருத்த

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியினை நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...

படம்
  தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், கல்வியியல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறது. இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி அவர்களை நியமித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஐ.லியோனி மேடைப் பேச்சாளராகவும், நகைச்சுவை பட்டிமன்ற  நடுவராக அறியப்பட்டுவராவார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டிற்கான  கலைமாமணி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தி வெளியீடு எண்: 400, நாள்: 07-07-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...