கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

போராட்டத்தில் ஈடுபடும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு - உயர்நீதிமன்றம்...

 தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே மானம்காத்தான் கிராமத்திற்கான சாலை பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. சாலையை சீரமைக்கக் கோரி அக்கிராமத்தினர் கடந்த 6.3.2017ல் கயத்தாறு - தேவர்குளம் மெயின்ரோட்டில் மானம்காத்தான் பேருந்து நிறுத்தம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கயத்தாறு போலீசார் மானம்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த பலர் மீது சட்டவிரோதமாக கூடுதல், முறையற்ற வகையில் தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கின் இறுதி அறிக்கை கோவில்பட்டி ஜேஎம் 2வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இறுதி அறிக்கையை ரத்து செய்யக் கோரி 8 பேர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.


மனுவை விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் பொது சாலையை சீரமைக்கவும், செப்பனிடவும் கோரித்தான் போராட்டத்தில் 7ஈடுபட்டுள்ளனர். இது கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நடந்த போராட்டம் என்பதால் இதை சட்டவிரோதம் என்று கூற முடியாது. தங்களின் நேர்மையான  கோரிக்கைக்காகவே போராடியுள்ளனர். தங்களின் பொதுத்தேவைக்காக போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. எனவே, இவர்கள் அனைவரும் கூடியது சட்டவிரோதம் அல்ல என்ற முடிவுக்கு இந்த நீதிமன்றம் வருகிறது.

குடிநீர், உணவுப்பொருள் தேவை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக அமைதியான முறையில் நடக்கும் போராட்டங்களை சட்டவிரோதமானதாக கருத முடியாது என ஏற்கனவே ஐகோர்ட் கூறியுள்ளது. சாலையை சீரமைக்க பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். பிறகு, போராடியுள்ளனர். இதை சட்டவிரோதம் என கூற முடியாது என்பதால், கோவில்பட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

____________________________________________________

Crl.O.P.(MD)No.7846 of 2021

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

DATE ON WHICH RESERVED : 16.06.2021

DATE ON WHICH PRONOUNCED : 24.06.2021

CORAM:

THE HON'BLE MR JUSTICE G.ILANGOVAN 

Crl.O.P.(MD)No.7846 of 2021

and

Crl.MP(MD)Nos.4015 & 4017 of 2021

1.Beer Mydeen

2.Beer Mydeen

3.Alla Pitchai

4.Beer Mydeen

5.Beer Mohammed

6.Syed Ali

7.Hussain

8.Rajendran ... Petitioners/Accused Nos.1,2,3,7,8,10,11& 13 

Vs.

1.State rep by

 The Inspector of Police,

 Kayathar Police Station,

 Thoothukudi District.

 (Crime No.69 of 2017) ... 1st Respondent/Complainant

2.Karuthapandiyan ... 2nd Respondent/Defacto 

 Complainant

____



The facts and circumstances of the case shows that the petitioners  were not intended to assemble in the place of occurrence,  for the purpose of obstructing the public transport or movement  of the public through that portion, a similar situation in Crl.OP.No.21965  of 2019, dated 21.08.2019 in M.Nithyanandam Vs. State  and Other, this Court has quashed the final report, which was filed  under Sections 143, 341 and 283 IPC. In that case, the village people  gathered in the place of occurrence and sat on the public road  and staged a road roko agitation demanding supply of water.

This  Court by observing that food, water and shelter are the basic necessities  for human life. Protesting and demanding for basic amenities  through a peaceful agitation cannot be construed as unlawful.  Here, the demand made by the petitioners is repairing the village  road. As mentioned earlier, it may not be construed or considered  as illegal demand. 

11. So, I am of the considered view that it is a fit case to quash  the proceedings initiated by the first respondent and taken cognizance  by the learned Judicial Magistrate No.II, Kovilpatti.

12. In view of the above, proceedings in S.T.C.No.607 of 2017 on  the filed of the learned Judicial Magistrate No.II, Kovilpatti, is  quashed and the Criminal Original Petition is allowed. Consequently,  the connected miscellaneous petitions are closed.



>>> Click here to Download Judgement Copy...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Hon'ble Finance Minister's announcement regarding implementation of Unified Pension Scheme which has created disappointment and dissatisfaction among Teachers and Government Employees - Hon'ble Chief Minister should issue notification for immediate implementation of old pension scheme - TNTF insists

 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளத்தில் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தல் தொட...