கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் தற்போதுள்ள பாடத்திட்டம் CBSE பாடத்திட்டத்திற்கு இணையாக உள்ளது; அமைச்சர் அன்பில் மகேஷ்...



தொகுப்பூதிய ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.


தமிழகத்தில் தற்போதுள்ள பாடத்திட்டம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு இணையாக உள்ளது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  ஆய்வு மேற்கொண்டார்.


பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள், கட்டிடங்கள், ஆய்வகம் உள்ளிட்டவைகளையும், பள்ளியில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியதாவது, தொகுப்பூதிய ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும்.


கடந்த காலங்களில் பாடத்திட்டத்தை பொறுத்த வரை 10, 12 ஆண்டுகளுக்கு ஒரே பாடத்திட்டம் என்ற அளவில் தான் இருந்துள்ளது. இப்போதும் கூட கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாடத்திட்டம் தான் இருந்து வந்துள்ளது.


ஆனால் இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரை இன்றைய காலத்திற்கு எற்றார் போல் பாடதிட்டம் இருக்க வேண்டும். அதன்படி தான் தற்போது சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு இணையாக நம் பாடத்திட்டம் உள்ளது. இதே போல் ஆசியர்களுக்கு இன்னும் அதிகமாக பயிற்சி கொடுக்க வேண்டும்.


அது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். வரும் காலங்களில் தமிழக பாடத்திட்டம் சிறப்பிற்குரிய வகையில் இருக்கும். இதே போல் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.


இதே போல் தனியார் பள்ளி மீதான புகாரில் அரசு விசாரித்து கண்டிப்பான நடவடிக்கை எடுக்கும். அச்சமின்றி புகார் அளிக்கலாம் என்றும் கூறினார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns