கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்தியாவிலேயே முதன் முறையாக அசாம் பெண் டாக்டருக்கு ‘இருவகை’ கொரோனா தொற்று : ICMR மூத்த விஞ்ஞானி தகவல்...



 இந்தியாவிலேயே முதன் முறையாக அசாம் பெண் டாக்டருக்கு ‘இருவகை’ கொரோனா தொற்று : ஐசிஎம்ஆர் மூத்த விஞ்ஞானி தகவல்...

அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் மருத்துவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு வகையான கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் உருமாறிய வைரசான டெல்டா, ஆல்பா உள்ளிட்ட வகையான வைரசுகள் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் மருத்துவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு வகையான கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக இதுபோன்ற பாதிப்பு உறுதியாகி உள்ளது. 

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (ஆர்.எம்.ஆர்.சி) மூத்த விஞ்ஞானி டாக்டர் பி.போர்ககோட்டி கூறுகையில், ‘கொரோனா தொற்று எதிர்ப்பு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்ட போதிலும், உருமாறிய வைரஸ்களான டெல்டா, ஆல்பா போன்ற தொற்றுகளால் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

கடந்த மே மாதத்தில், ஆர்.எம்.ஆர்.சி.யின் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பெண் மருத்துவ நோயாளிக்கு இரட்டை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பிரிட்டன், பிரேசில் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் சிலருக்கு இரட்டை நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளது போன்று, இந்தியாவிலும் இந்த இரட்டை நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவில் இதுபோன்ற பாதிப்பு எவருக்கும் ஏற்படவில்லை. 

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுள்ளார். தற்போது இவர் உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கணவரும் (மருத்துவர்) கொரோனா வைரஸின் ஆல்பா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்கள், கோவிட் பராமரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தனர். தற்போது அந்த பெண் மருத்துவருக்கு லேசான தொண்டை வலி, உடல் வலி ஆரம்பத்தில் இருந்தது. இருந்தாலும், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை’ என்றார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns