கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இந்தாண்டு முதல் மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் EWS (OC) 10% இடஒதுக்கீடு...

 


சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நடப்பு ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கான முக்கிய முடிவை எடுத்துள்ளது.


இதுதொடர்பாக கடந்த 26ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த பிரச்சினைக்கு ஒரு பயனுள்ள தீர்வை அளிக்க சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, இந்த முடிவு அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, எம்.பி.பி.எஸ், எம்.டி, எம்.எஸ், டிப்ளமோ, பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த முடிவால் ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை மருத்துவப் படிப்பில் கிட்டத்தட்ட 1,500 இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், முதுகலை பட்டப்படிப்பில் 2,500 இதரபிற்படுத்தப்பட்ட மாணவர்களும், இளங்கலை மருத்துவப் படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 550 முன்னேறிய வகுப்பு மாணவர்களும், முதுகலைப் பட்டப்படிப்பில் சுமார் 1,000 பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு மாணவர்களும் பலன் பெற உள்ளனர்.


இதனால், மொத்தமாக கிட்டதட்ட 5,550 மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் பின்தங்கிய பிரிவினருக்கும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு பிரிவினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...