கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அண்டை மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாமா?அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்ப்பு...

தலைமை செயலகத்தில் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கேரளாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பாதிப்பு அதிகரிக்காமல் இருப்பது குறித்தும் , கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் , பள்ளி ,கல்லூரிகள் திறப்பு மற்றும் எல்லைகளில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.


கேரளாவிலிருந்து தமிழகத்திலுள்ள எல்லையோர மாவட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


இதனால் அண்டை மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கலாமா?


 அல்லது ஒத்தி வைக்கலாமா என்பது குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.


 அதேசமயம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு என்பது சற்று தள்ளி போக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns