கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுக்க உத்தரவு...



 அரசு பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையை, மாணவர் விகிதத்துக்கு ஏற்ப கணக்கெடுத்து பட்டியல் அனுப்புமாறு, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, கற்பித்தல் பயிற்சிகள் வழங்கவும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தவும், பள்ளி கல்வி இயக்குனரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


இந்நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக மற்றும் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கண்டறிய, கணக்கெடுப்பு பணிகளை, பள்ளிக்கல்வி துறை துவங்கியுள்ளது. பள்ளிக்கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர் பொன்னையா, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.


அதில் கூறியிருப்பதாவது:

அனைத்து அரசு பள்ளிகளிலும் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை, ஆக., 1ம் தேதி நிலவரப்படி,மாணவர் எண்ணிக்கை விகிதத்தின் படி,கணக்கெடுக்க வேண்டும். வகுப்பு வாரியாகவும்,தமிழ், ஆங்கில வழி மாணவர் எண்ணிக்கையிலும் கணக்கிட வேண்டும். முந்தைய ஆண்டுகளில் உபரியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை, பள்ளி கல்வி துறையிடம் ஒப்படைத்திருந்தால், அந்த இடங்களை கணக்கில் எடுக்கக் கூடாது.


இந்த விபரங்கள் அனைத்தையும், பள்ளி கல்வி துறையில், கல்வி மேலாண்மை, 'டிஜிட்டல்' தளமான, 'EMIS' வழியாக, 'ஆன்லைனில்' பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Anna University has withdrawn the notification of 'Professors appointment in Consolidated Pay'

 'தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அண்ணா பல்கலைக்கழகம் Anna University has withdrawn the ...