கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Staff Fixation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Staff Fixation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Aided School Staff Fixation | DEE Proceedings



அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2026-2027ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - இயக்குநரின் செயல்முறைகள்


Aided School Staff Fixation | DEE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





Xiaomi Power Bank 4i 20000mAh 33W Super Fast Charging PD 


https://link.amazon/B0ik5kVpv




//பணியாளர் நிர்ணயம்//


//சுற்றறிக்கை//


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06


ந.க.எண் 012581/ஜி/எச்/2026 , நாள். 21.08.2026


பொருள் :-


தொடக்கக் கல்வி- உதவி பெறும் பள்ளிகள்-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்திட அறிவுரை வழங்கப்பட்டது-பணியாளர் நிர்ணய ஆணைகள் வழங்கப்பட்ட விவரங்கள் கோருதல்-சார்ந்து


பார்வை 1


தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும்) சட்டம்-1973 மற்றும் விதிகள் 1974


2- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009, விதிகள் -2011


3:- தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும்) சட்டம்-2018, விதிகள்-2023.


4 அரசாணை (நிலை) எண் 231 பள்ளிக் கல்வித்துறை நாள்.11.08.2010


5- மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பாணை WA.(MD) No's 76 of 2019, etc., batches.


6-அரசாணை (நிலை) எண் 139 பள்ளிக் கல்வித்துறை , நாள்-19.06.2024


7:- மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பாணை W.P. (MD) No. 3824 of 2026 நாள்.03.07.2026


8:- இவ்வியக்கக இதே எண்ணிட்ட செயல்முறைகள் நாள்.13.07.2026


9: மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இடைக்கால தீர்ப்பாணை W.P.(MD) No's. 5419,5489,17747,23963 of 2025 நாள்.18.08.2026


தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 பிரிவு -25 ன்படியும். இச்சட்டத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்பெற்ற அரசாணை (நிலை) எண் 231 பள்ளிக் கல்வித்துறை , நாள்.11.08.2010 ன்படியும், மேற்படி பள்ளிகளில் ஆகஸ்டு 1 ஆம் தேதியில் EMIS - ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையினைக் கணக்கில் கொண்டு, ஆண்டுதோறும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் (தொடக்கக் கல்வி) ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.


மேலும், பார்வை 4 இல் காணும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும்) விதிகள்-2023, 32(A) -ல் பணியாளர் நிர்ணயம் தொடர்பாகவும், 32 (B) -ல் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பாகவும் கால வரையறை நிர்ணயம் செய்யப்பட்டு மேற்குறிபிட்ட கால வரையறைக்குள் மேற்படி பணியாளர் நிர்ணயப் பணிகளை (Staff Fixation) முடித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், பணிநிரவல் (Deployment) தொடர்பாக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பாணை W.P(MD) No. 3824 of 2026, நாள். 03.07.2026 இல் கீழ்க்காணுமாறு ஆணையிடப்பட்டது.


17.Recording such report, this Court directs the Secretary, Department of School Education, to examine the reasons for issuing the deployment orders in a delayed manner, not only to this petitioner but also to the other 52 surplus teachers. If it is found that the delay was attributable to any lapse or dereliction on the part of the second respondent or any other officer, the sixth respondent shall ensure that appropriate action is taken on the erring officers in accordance with law, including initiation of disciplinary proceedings and recovery of the salary which was paid to all the surplus teachers during this period, from such officer(s). The Secretary shall also ensure that the statutory time line prescribed under Rule 32(B) is strictly complied with.


எனவே, பணியாளர் நிர்ணயம் தொடர்பாகவும், உபரி ஆசிரியர்களை பணிநிரவல்/மாற்றுப்பணி செய்வது தொடர்பாகவும், மேற்படி தனியார் பள்ளி விதி 32 (A) மற்றும் 32(B) இல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, முடித்திட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் பார்வை 9 இல் காணும் இவ்வியக்கக செயல்முறைகளின் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.


இந்நிலையில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இடைக்கால தீர்ப்பாணை W.P.(MD) No's. 5419,5489,17747,23963 நாள்.18.08.2026 இல் கீழ்க்காணுமாறு ஆணையிடப்பட்டுள்ளது. of 2025


11.Considering the rival submissions made, this Court is of the view that even though Rule 32 of the Tamil Nadu Private Schools (Regulation) Rules 2023 provides a strict timeline, staff fixation has been done in a delayed manner, for the reasons best known to the officers concerned and thereby huge loss has been caused to the government exchequer. Therefore, disciplinary proceedings have to be initiated as against the District Educational Officers /Chief Educational Officers concerned, who have violated Rule 32 and fixed the staff strength belatedly. The CEOs who have to monitor the functions of the DEO, have also failed in their duty. The Government has also been forced to incur expenditure on the teachers, already identified as surplus. Therefore, the salary, if any, paid to the teachers, who were found to be surplus, also has to be recovered from the DEOS/ CEOs concerned.


எனவே, அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரத்தின்படி. 2026-2027 ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயம் தொடர்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும்) விதிகள் 2023, விதி 32(B) -இல் கீழ்க்காணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ள காலவரையறைக்குள் மேற்படி பணிகளை முடித்திட மீளவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


B. Deployment of surplus staff,-(1) The District Educational Officer concerned in respect of Primary and Middle schools, the Chief Educational Officer concerned in respect of High and Higher Secondary schools and the Joint Director concerned in respect of Anglo-Indian schools shall fix the strength of the staff based on the strength of the pupils updated in the Educational Management Information System (EMIS) as on the 1stday of August of every academic year and shall complete the assessment process on or before the 12th day of August of that academic year.


(2) The staff fixation statement along with the list of surplus staff identified shall be forwarded to the Secretary of the school committee or the management of the school concerned on or before the 15th day of August of that academic year.


மேற்படி பணியாளர் நிர்ணயம் மற்றும் உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் / மாற்றுப்பணி ஆணை வழங்குவது தொடர்பான பணிகளை உரிய கால வரையறைக்குள் முடிக்கத் தவறும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை. மேற்கொள்ளப்படும். மேலும், அதனால் ஏற்படும் நிதியிழப்பை உரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


எனவே, அரசின் நிதி ஆதாரங்கள் முறையாக பயன்படுத்தப்டுவதை உறுதி செய்திடும் வகையிலும், மாணவர்களின் கல்வி நலன் கருதியும், இப்பணியில் சிறப்புக் கவனம் செலுத்தி செயல்படுமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குநர் கடக்கக் கல்வி


பெறுநர்


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)


ileke


(மின்னஞ்சல் மூலமாக)


நகல்:


1. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் (மா.க.அ. மூலமாக)


2. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை தலைமைச் செயலகம் தகவலின் பொருட்டு பணிந்தனுப்பலாகிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை நிர்ணயம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு


அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை நிர்ணயம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு


பள்​ளிக்​கல்​வித்​துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்​பிய சுற்றறிக்கையில் கூறி​யிருப்​ப​தாவது:


​கமிழ்நாட்டில் அரசுப் பள்​ளி​களில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், மாணவர் எண்​ணிக்கை அடிப்​படை​யில் பணி​யாளர்  நிர்ணயம் செய்​யப்​பட்டு வரு​கிறது. அதன்​படி நடப்பு கல்​வி​யாண்​டில் (2025-26) கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நில​வரப்​படி பள்​ளி​களில் உள்ள மாணவர் எண்​ணிக்​கைக்​கேற்ப  முதுநிலை ஆசிரியர் பணி இடங்​கள் நிர்ணயம் செய்​யப்பட வேண்​டும். அதற்​கான வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.


அதன்​படி தமிழ் மற்​றும் ஆங்​கில பாட ஆசிரியர்​களுக்கு வாரத்​துக்கு 24 பாடவேளைகளும், இதர பாட ஆசிரியர்களுக்கு வாரத்​துக்கு 28 பாட​வேளைகளும் குறைந்​த​பட்​சம் வரு​மாறு பணியாளர் நிர்​ண​யம் செய்​யப்​படு​கிறது. 11, 12ஆம் வகுப்​புக்கு 1:40 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதத்​தைப் பின்​பற்ற வேண்​டும். மேல்​நிலைப் பள்ளி அமைந்​துள்ள பகுதி மாநக​ராட்​சி, நகராட்​சி​யாக இருப்​பின் 30 மாணவர்​களும், ஊரகப் பகு​தி​யாக இருந்​தால் மாணவர் எண்​ணிக்கை 15 ஆகவும் குறைந்தபட்​சம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.


ஒரு​முறை பணிநிர​வல் செய்த ஆசிரியர்களை அடுத்த 3 ஆண்​டு​களுக்கு மீண்​டும் மாற்​றம் செய்​யக்​கூ​டாது. அதே​நேரம், பணிநிர​வல் நடவடிக்​கைக்கு உள்​ளான ஆசிரியர் இந்த ஆண்​டும் விருப்​பம் தெரிவித்தால் அவரை தற்​போதைய பணியாளர் நிர்​ண​யித்​தின்​போது உபரி​யாகக் காண்​பிக்​கலாம்.


இந்த வழி​முறை​களைப் பின்​பற்றி முது​நிலை ஆசிரியர்​களை பணி நிர்​ண​யம் செய்​து, அதன் விவரங்​களை இயக்​குநரகத்​துக்கு அனுப்பி வைக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டு உள்​ளது.



>>> இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


01.08.2024 இல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


நிகழ் கல்வி ஆண்டுக்கான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 01-08-2024 உள்ள ஆசிரியர்-மாணவர் விகிதாச்சார அடிப்படையில் பணியிட நிர்ணயம் செய்தல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு...



01.08.2024 இல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் Post Fixation செய்ய தொடக்க கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு நிதி உதவி பள்ளிகள் - பணியாளர் நிர்ணயம் சார்ந்து இணை இயக்குநர் கடிதம் ந.க.எண்: 48834/ டி1/ இ4/ 2023, நாள்: 04-08-2023 (Government Aided Schools - Joint Director's Letter No: 48834/ D1/ E4/ 2023, Dated: 04-08-2023 regarding Staff Fixation)...


>>> அரசு நிதி உதவி பள்ளிகள் - பணியாளர் நிர்ணயம் சார்ந்து இணை இயக்குநர் கடிதம் ந.க.எண்: 48834/ டி1/ இ4/ 2023, நாள்: 04-08-2023 (Government Aided Schools - Joint Director's Letter No: 48834/ D1/ E4/ 2023, Dated: 04-08-2023 regarding Staff Fixation)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

01.08.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - மாணவர் எண்ணிக்கைக்கு தகுந்த பிரிவுகளின் எண்ணிக்கை - நிர்ணயம் செய்தல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Post Graduate Teachers Posts as on 01.08.2022 - Number of Sections corresponding to the number of students - Post Fixation - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்‌ 046429/டபிள்யு2/இ3/2022, நாள்‌: 09.09.2022...



>>> 01.08.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - மாணவர் எண்ணிக்கைக்கு தகுந்த பிரிவுகளின் எண்ணிக்கை - நிர்ணயம் செய்தல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Post Graduate Teachers Posts as on 01.08.2022 - Number of Sections corresponding to the number of students - Post Fixation - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்‌ 046429/டபிள்யு2/இ3/2022, நாள்‌: 09.09.2022...




தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (மேல்நிலைக்கல்வி)
செயல்முறைகள்‌, சென்னை -600 006.
ந.க.எண்‌ 046429/டபிள்யு2/இ3/2022, நாள்‌: 09.09.2022...


பொருள்‌:  
தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி-1.8.2022 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில்‌ உள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையின்‌  அடிப்படையில்‌ முதுகலை ஆசிரியர்‌  பணியிடங்கள்‌ நிர்ணயம்‌  செய்தல்‌ அறிவுரைகள்‌ வழங்குதல்‌ சார்ந்து.


பார்வை:
1. அரசாணை எண்‌ 525, பள்ளிக்‌ கல்வி (டி1) துறை, நாள்‌ 29.12.1997. 
2. அரசாணை எண்‌ 46 பள்ளிக்‌ கல்வி (க்யூ2) துறை, நாள்‌ 14.05.2004.
3. அரசாணை எண்‌ 231, பள்ளிக்‌ கல்வி (சி2) துறை, நாள்‌ 11.08.2010.
4. அரசாணை (1டி) எண்‌ 217, பள்ளிக்‌ கல்வி (ப௧5(1)) துறை, நாள்‌ 20.06.2019.
5. அரசாணை எண்‌ 176, பள்ளிக்‌ கல்வி (பக5(1)) துறை, நாள்‌ 17.12.2021.

 

 அரசாணை எண்‌ 525ன்படி மாணாக்கர்களின்‌ எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு  ஆசிரியர்‌ மாணவர்‌ விகிதாச்சாரத்தின்‌ அடிப்படையில்‌ பணியாளர் நிர்ணயம்‌ செய்யப்படுகிறது. அதாவது 01.08.2021 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள்‌ பணியிடங்கள்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கேற்ப பணியாளர்‌ நிர்ணயம்‌ (Staff Fixation) செய்யப்பட்டது. அதே போன்று நடப்புக்‌ கல்வியாண்டிலும்‌ 01.08.2022 நிலவரப்படி பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்வதற்கு 31.08.2022 அன்று EMIS இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையினை பதிவிறக்கம்‌ செய்து (Download) அதனடிப்படையில்‌ முதுகலையாசிரியர்கள்‌ பணியிடங்கள்‌ நிர்ணயம்‌ செய்தல்‌ சார்பாக கீழ்க்காணும்‌ அறிவுரைகளைப்‌ பின்பற்றி பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ தெரிவிக்கப்படுகிறது.

   

முதலாவதாக 1 முதல்‌ 60 மாணவர்களுக்கு 1 ஒரு பிரிவும்‌ அதற்கடுத்து ஒவ்வொரு 40 மாணவர்களுக்கு ஒரு கூடுதல்‌ பிரிவும்‌, (Bifurcation) என்ற அடிப்படையில்‌ நிர்ணயம்‌ செய்யப்பட வேண்டும்‌.

பார்வை 2ல்‌ காண்‌ அரசாணை 46ன்படி ஆசிரியர்கள்‌ பாடவேளைகள்‌ அடிப்படையில்‌
பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்யப்படுகிறது. அதாவது தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலப்பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 4 பாட வேளைகள்‌ என வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 24 பாடவேளைகள்‌ எனவும்‌, இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 7 பாடவேளைகள்‌ என வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 28 பாடவேளைகள்‌ என்ற அடிப்படையிலும்‌ பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்யப்படுகிறது.

பார்வை 4ல்‌ காண்‌ அரசாணை 217ல்‌ கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பிரிவுகளைப்‌ பொறுத்தவரை 11 மற்றும்‌ 12ம்‌ வகுப்புகளுக்கு 1:40 என்ற. ஆசிரியர்‌-மாணவர்‌ விகிதாச்சாரத்தினையே பின்பற்ற வேண்டும்‌.

மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்‌சி/ மாநகராட்‌சி பகுதியாக இருப்பின்‌ குறைந்த பட்சம்‌ 30 மாணவர்களும்‌, ஏனைய ஊரக பகுதியாக இருப்பின்‌ குறைந்த பட்ச மாணவர்‌ எண்ணிக்கை 15 ஆக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. மேல்நிலைப்பிரிவில்‌ 60 மாணவர்கள்‌ வரை ஒரு பிரிவாகவும்‌, 61-100 மாணவர்கள்‌ வரை ஒரு பிரிவாகவும்‌, ஒவ்வொரு கூடுதல்‌ 40 மாணவர்களுக்கும்‌ கூடுதல்‌ பிரிவும்‌ ஏற்படுத்திடவும்‌ அனுமதிக்கப்படுகிறது. குறைந்த பட்ச மாணவர்கள்‌ இல்லாமல்‌ நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு,  அதில்‌ பயிலும்‌ மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாற்றம்‌ செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.


பாடவேளைகள்‌ கணக்கிடுதல்‌.

ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ நிர்ணயம்‌ செய்யும்போது ஓராசிரியருக்கு, வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 28 பாடவேளைகள்‌ ஒதுக்கீடு உள்ளதா என்பதையும்‌ கணக்கில்‌ கொள்ள வேண்டும்‌.

முதுகலை ஆசிரியராகப்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்கள்‌ மேல்நிலை வகுப்புகளில்‌ மொழிப்பாடத்தில்‌ வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 24 பாடவேளைகள்‌ எனவும்‌, இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 28 பாடவேளைகள்‌ என்ற அடிப்படையிலும்‌ கணக்கீடு செய்ய வேண்டும்‌. அவ்வாறு போதிய பாடவேளை இன்றி உள்ள முதுகலை ஆசிரியரை உரிய முறையில்‌ கீழ்நிலை வகுப்புகளுக்கு (9,10ம்‌ வகுப்பு) கற்பிக்க பாடவேளைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்‌.


கூடுதல் தேவை பணியிடங்கள்‌.

மொழிப்பாடத்தில்‌ 24பாட வேளைக்கும்‌, முதன்மைப்‌ பாடத்தில்‌ 28 பாடவேளைகளுக்கும்‌ கூடுதலாக இருப்பின்‌ இதற்கென ஒரு ஆசிரியரை கூடுதலாக நிர்ணயம்‌ செய்யலாம்‌.


ஆசிரியருடன்‌ உபரி பணியிடங்கள்‌

ஆசிரியர்‌ மாணவர்‌ விகிதாச்சாரத்தின்‌ அடிப்படையில்‌ பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்யும்போது ஒரு குறிப்பிட்ட பாடத்தில்‌ ஒன்றுக்கும்‌ மேற்பட்ட ஆசிரியர்கள்‌ பணிபுரிந்து, அதில்‌ ஒரு பணியிடம்‌ ஆசிரியருடன்‌ உபரி பணியிடமாக இருக்குமாயின்‌ அப்பாடத்தில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்களில்‌ இளையோரை ஆசிரியருடன்‌ உபரியாக காண்பிக்கப்பட வேண்டும்‌. பார்வை 5ல்‌ காண்‌ அரசாணையில்‌ ஒருமுறை பணிநிரவல்‌ மூலம்‌ மாறுதல்‌ செய்யப்பட்டவர்களை அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கு மீண்டும்‌ பணிநிரவல்‌
செய்யக்கூடாது. அவ்வாறான நிகழ்வுகள்‌ எழும்போது சார்ந்த ஆசிரியர்‌ பணிநிரவலுக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை முன்னிலைப்படுத்தி மீண்டும்‌ பணிநிரவல்‌ செய்யப்படுவதிலிருந்து தவிர்ப்பு பெறலாம்‌.

எனினும்‌, சென்ற ஆண்டு ஆசிரியருடன்‌ உபரியாக கண்டறியப்பட்டு, பணிநிரவல்மூலம்‌ தற்போதைய பள்ளியில்‌ பணிபுரியும்‌ மேற்காண்‌ ஆசிரியர்‌, 'இந்த ஆண்டில்‌ தயார்‌ செய்யப்படும்‌ பணியாளர்‌ நிர்ணயத்தின்போதும்‌ ஆசிரியருடன்‌ உபரியாக காண்பிப்பதற்கு விருப்பம்‌ தெரிவித்தால்‌ அன்னாரை தற்போதைய பணியாளர்‌ நிர்ணயத்தின்போது ஆசிரியருடன்‌ உபரியாகக்‌ காண்பிக்கப்படவேண்டும்‌.

மேற்கண்ட அறிவுரைகளை தவறாது பின்பற்றி 01.08.2022 அன்றுள்ள நிலவரப்படி 31.08.2022 அன்று EMIS இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையினை பதிவிறக்கம்‌ செய்து (Download) அதனடிப்படையில்‌ அனைத்துவகை அரசு /நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ முதுகலை ஆசிரியர்கள்‌ சார்பான
பணியாளர்‌ நிர்ணய விவரங்களை இத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ள படிவத்தில்‌ பூர்த்தி செய்து கீழ்க்கண்ட தேதிகளில்‌ நேரில்‌ உரிய பிரிவில்‌ (w2) ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும்‌ அறிவுறுத்தப்படுகிறது. மேலும்‌ EMIS இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையினை பதிவிறக்கம்‌ செய்யப்பட்டதன்‌ (Download) நகலினை கண்டிப்பாக இத்துடன்‌ இணைத்து அனுப்பப்படவேண்டும்‌.



ஊராட்சி ஒன்றிய / நகராட்சி/ மாநகராட்சி /அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2022ல் உள்ளவாறு ஆசிரியர்/ மாணவர்கள் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education regarding the Fixation and inspection of posts of Teachers/ Students in Panchayat Union / Municipality / Corporation / Government Primary and Middle Schools as on 01.08.2022) ந.க.எண்: 015500/ இ1/ 2022, நாள்: 17-08-2022...



>>>  ஊராட்சி ஒன்றிய / நகராட்சி/ மாநகராட்சி /அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2022ல் உள்ளவாறு ஆசிரியர்/ மாணவர்கள் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education regarding the Fixation and inspection of posts of Teachers/ Students in Panchayat Union / Municipality / Corporation / Government Primary and Middle Schools as on 01.08.2022) ந.க.எண்: 015500/ இ1/ 2022, நாள்: 17-08-2022...



அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் (உபரி, தேவை) சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் (Fixation of Non-Teaching Posts in Government High and Higher Secondary Schools (Surplus, Need) - Joint Director of School Education (Staff Block) Proceedings No: 24689/ A4/ E1/ 2019, Dated: 12-08-2022) ந.க.எண்: 24689/ அ4/ இ1/ 2019, நாள்: 12-08-2022...



>>> அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் (உபரி, தேவை) சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் (Fixation of Non-Teaching Posts in Government High and Higher Secondary Schools (Surplus, Need) - Joint Director of School Education (Staff Block) Proceedings No: 24689/ A4/ E1/ 2019, Dated: 12-08-2022) ந.க.எண்: 24689/ அ4/ இ1/ 2019, நாள்: 12-08-2022...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...


பள்ளிக்கல்வி - 01.08.2021 நிலவரப்படி அரசு/ நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் (பட்டதாரி ஆசிரியர்கள்) மேற்கொண்டமை - 6 முதல் 10 வரை வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் 150 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுக்கு ஒரு பணியிடம் அனுமதித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள் (School Education - Staff Fixation (Graduate Teachers) based on the number of students in Government / Municipal High / Higher Secondary Schools as on 01.08.2021 - Proceedings of the Joint Director of School Education for Allowing a Post for English Medium in Schools with less than 150 students in Classes 6 to 10) ந.க.எண்: 040678/ சி3/ இ1/ 2021, நாள்: 12-03-2022...



>>> பள்ளிக்கல்வி - 01.08.2021 நிலவரப்படி அரசு/ நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் (பட்டதாரி ஆசிரியர்கள்) மேற்கொண்டமை - 6 முதல் 10 வரை வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் 150 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுக்கு ஒரு பணியிடம் அனுமதித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள் (School Education - Staff Fixation (Graduate Teachers) based on the number of students in Government / Municipal High / Higher Secondary Schools as on 01.08.2021 - Proceedings of the Joint Director of School Education for Allowing a Post for English Medium in Schools with less than 150 students in Classes 6 to 10) ந.க.எண்: 040678/ சி3/ இ1/ 2021, நாள்: 12-03-2022...



>>> பள்ளிக்கல்வித்துறை - 2022  - உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விவரம் (பாட வாரியாக)...


தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2021இல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education Staff Fixation based on Teacher / Students Strength inspection as on 01.08.2021 in Primary / Middle Schools) ந.க.எண்: 009736/இ1/2021, நாள்: 18-11-2021...



>>> தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2021இல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education Staff Fixation based on Teacher / Students Strength inspection as on 01.08.2021 in Primary / Middle Schools) ந.க.எண்: 009736/இ1/2021, நாள்: 18-11-2021...

பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம்(BT / SGT Staff Fixation) செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்(Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 040678/சி3/இ1/2021, நாள்: 02-11-2021 - இணைப்பு: கணக்கீட்டு படிவம்...



01.08.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம்(BT / SGT Staff Fixation) செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்(Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 040678/சி3/இ1/2021, நாள்: 02-11-2021 - இணைப்பு: கணக்கீட்டு படிவம்...



>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 040678/சி3/இ1/2021, நாள்: 02-11-2021...



>>> பணியிடங்கள் நிர்ணயம் கணக்கீட்டு படிவம்...

ஆசிரியர் பணியிட விவரங்களை EMIS இணையத்தில் DSE Staff fixation-ல் பதிவேற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்:040678/சி3/இ1/2021, நாள்:02-09-2021......


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்:040678/சி3/இ1/2021, நாள்:02-09-2021...


 2021-22ம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சார்பாக கல்வி மேலாண்மைத் தகவல் முகமை இணையதளத்தில் மாணவர்களின் சேர்க்கை விவரம் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பெற்று வருகின்றன.


 தற்போது கல்வி மேலாண்மைத் தகவல் முகமை இணையதளத்தில் ( EMIS ) அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் ( Sanctioned Posts ) சார்பான விவரங்களைப் பதிவேற்றம் செய்திட ஏதுவாக உள்ளீடு செய்ய DSE Staff fixation என்ற தலைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


எனவே , சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை ( Sanctioned Posts )  ( Scale Register ) ஒப்பிட்டு சரிபார்த்து மேற்படி இணையத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


 அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது இப்பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்டு ( Surplus post without person ) இயக்குநரின் பொதுத்தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டிருந்தால் அப்பணியிடங்களை எக்காரணம் கொண்டும் மீளவும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகக் கருதி பதிவேற்றம் செய்தல் கூடாது.



தொடக்கக்கல்வி - அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள்(Aided School) - 2021-2022ஆம் கல்வியாண்டுக்கான பணியாளர் நிர்ணயம்(Staff Fixation) - 25.09.2021க்குள் பணி நிரவல் பணியை முடிக்க தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்(DEE Proceedings) ந.க.எண்:002108/எச்/எப்/ஜி/2021, நாள்:27-08-2021...

 


 தொடக்கக்கல்வி - அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் - 2021-2022ஆம் கல்வியாண்டுக்கான பணியாளர் நிர்ணயம் - 25.09.2021க்குள் பணி நிரவல் பணியை முடிக்க தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்:002108/எச்/எப்/ஜி/2021, நாள்:27-08-2021...


>>> தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்:002108/எச்/எப்/ஜி/2021, நாள்:27-08-2021...



01-08-2021 நிலவரப்படி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் செய்தல்(Teacher Post Fixation in Elementary and Middle Schools based on Number of Students) சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்(Proceedings of the Director of Elementary Education)ந.க.எண்:9736/இ1/2021, நாள்:13-08-2021...



 01-08-2021 நிலவரப்படி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் செய்தல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:9736/இ1/2021, நாள்:13-08-2021...





மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் எவ்வாறு நிர்ணயம்(PG Posts Fixation) செய்வது? - படிவங்கள், Illustrations & Formula - வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:2419/அ4/2021, நாள்: 09.08.2021...



 மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் எவ்வாறு நிர்ணயம் செய்வது? - படிவங்கள், Illustrations & Formula - வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:2419/அ4/2021, நாள்: 09.08.2021...


>>> வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:2419/அ4/2021, நாள்: 09.08.2021...


>>> படிவங்கள், Illustrations & Formula...




அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2021 நிலவரப் படி முதுகலை ஆசிரியர்கள் நிர்ணயம்(PG Staff Fixation) செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மே.நி.க.) செயல்முறைகள் ந.க.எண்:039965/டபிள்யு2/இ3/2021, நாள்:05-08-2021...

 


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2021 நிலவரப் படி முதுகலை ஆசிரியர்கள் நிர்ணயம்(PG Staff Fixation) செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மே.நி.க.) செயல்முறைகள் ந.க.எண்:039965/டபிள்யு2/இ3/2021, நாள்:05-08-2021...


>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மே.நி.க.) செயல்முறைகள் ந.க.எண்:039965/டபிள்யு2/இ3/2021, நாள்:05-08-2021...


Pupil Teacher Ratio Fixation - G.O.Ms.No.231, Dated: 11-08-2010 - மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் - அரசாணை எண். 231, பள்ளிக்கல்வி(சி2)த்துறை நாள். 11.08.2010...


Pupil Teacher Ratio Fixation - G.O.Ms.No.231, Dated: 11-08-2010...

 மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் - அரசாணை எண். 231, பள்ளிக்கல்வி(சி2)த்துறை நாள். 11.08.2010...


>>> Click here to Download G.O.Ms.No.231, Dated: 11-08-2010...


>>> Click here to Download Pupil Teacher Ratio Fixation as per G.O.Ms.No.231, Dated: 11-08-2010...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்