கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

HI TECH LAB - BATCH II ( 23.08.2021 - 27.08.2021) பயிற்சியில் பங்கேற்க EMIS Websiteல் ஆசிரியர்கள் சுய பதிவு செய்வதற்கான வழிமுறைகள்(Self Registration Process)...



 HI TECH LAB - BATCH II ( 23.08.2021 - 27.08.2021) பயிற்சியில் பங்கேற்க EMIS Websiteல் ஆசிரியர்கள் சுய பதிவு செய்வதற்கான வழிமுறைகள்(Self Registration Process)...


ஆசிரியர்கள் இப்பயிற்சியில் பங்கேற்க EMISல் தாங்களாகவே பதிவு செய்ய வேண்டும்...


அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு : 

* Android கைப்பேசியில் TN EMIS App யினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 


* TN EMIS App யில் Teacher ID ( 8 digit ) மற்றும் password யினை பயன்படுத்தி login செய்ய வேண்டும் . Password: EMIS யில் பதிவு செய்யப்பட்ட கைப்பேசியின் முதல் நான்கு இலக்கங்கள் @ பிறந்த வருடம்.


* Login செய்ததும் click Teacher Training Module  Select training யினை Click செய்யவும். அதில் தற்பொழுது கலந்துக் கொள்ளும் பயிற்சியின் தலைப்பினை ( ICT Training ) தெரிவு ( Select ) செய்ய வேண்டும்.


* பின்பு பயிற்சி மையத்தினை ( Training venue ) Click செய்யவும் . ஒன்றியத்திலுள்ள ( Block ) அனைத்து உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் உள்ள ( Hi - Tech Lab ) பள்ளியின் பெயர்கள் காட்சிபடுத்தப்படும் . அதில் பயிற்சியில் கலந்துக் கொள்ள தங்கள் பள்ளி மையமாக இருப்பின் அப்பள்ளியினை தெரிவு ( select ) செய்து submit / save செய்ய வேண்டும் . தங்கள் பள்ளி பயிற்சி மையமாக இல்லை எனில் அருகிலுள்ள பள்ளியின் பெயரை தெரிவு ( select ) செய்து submit / save செய்ய வேண்டும்.


 * அவ்வாறு submit /save செய்யும் பொழுது அம்மையத்தில் பயிற்சியில் கலந்துக் கொள்ள காலியிடம் இருக்கும் பட்சத்தில் Registered successfully என காண்பிக்கப்படும்.


* இவ்வாறு ஆசிரியர்கள் தங்களுக்கான பயிற்சி மையங்களை தெரிவு செய்து வரும் பொழுது அம்மையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வரும்.


 * எனவே ஆசிரியர்கள் login செய்யும் பொழுது உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் உள்ள கணினி இணைப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலியாக இருக்கும் பயிற்சி மையங்களின் பெயர் மட்டுமே காண்பிக்கப்படும்.


>>> இந்த தகவலை PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...