கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தரம் உயர்த்தப்படும், விரிவாக்கம் செய்யப்படும் பேரூராட்சிகள்(Town Panchayat), நகராட்சிகள்(Municipality), மாநகராட்சிகள்(City) - அமைச்சர் அறிவிப்பு (முழு விவரம்)...



தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் அறிவிப்பு...


>>> தரம் உயர்த்தப்படும், விரிவாக்கம் செய்யப்படும் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் - அமைச்சர் அறிவிப்பு (முழு விவரம்)...



தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் அறிவித்தார். தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைந்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும். மேலும் காஞ்சிபுரம். கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைந்து மாநகராட்சிகளாக உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.



புதிய மாநகராட்சிகள்:

பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோழிங்கர், இடங்கனசாலை, தாராமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதினாம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு, முசிறி, இலால்குடி ஆகிய பேரூராட்சிகள் அதன் அருகே வளர்ச்சியடைந்துள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புஞ்சை புகளூர் மற்றும் TNPL புகளூர் ஆகிய 2 பேரூராட்சிகளையும் இணைத்து புகளூர் நகராட்சியாக அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


விரிவாக்கம்:

திருச்சிராப்பள்ளி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளும், செங்கல்பட்டு, பூவிரந்தவல்லி, மன்னார்குடி ஆகிய நகராட்சிகளும் அவற்றைச் கூற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும், ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...