கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடந்த 9 மாதங்களாக இல்லாத அளவிற்கு சரிந்த ஜூம் செயலியின்(Zoom App) பங்குகள்...



 கொரோனா காலத்தில் ஊழியர்களை ஒருங்கிணைக்க முக்கிய பங்காற்றிய ஜூம் செயலியின் பங்குகள் வெகுவாக சரிந்துள்ளன.


கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோய் என்பதால் பெரிய  நிறுவனங்கள் ஊழியர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பி, வீட்டில் இருந்து பணிபுரிய வைத்தன.


ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருந்து பணிபுரிய ஆரம்பித்தனர். வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள் அலுவலக மானேஜர், அதிகாரிகளுடன் மீட்டிங்  கலந்து கொள்ள ஜூம், கூகுள் மீட், மைக்ரோசாப்ட் டீம்ஸ், ஸ்லாக் போன்ற வீடியோ கம்யூனிகேசன் செயலிகள் பெரிதும் உதவின.


இதனால் ஜூம் உலகளவில் லட்சக்கணக்கான பயனாளர்களை பெற்றது. ஆகவே பங்கு சந்தையில் ஜூம் செயலியின் பங்குகள் மளமளவென உயர்ந்தன. நடப்பு காலாண்டு நிதியாண்டில் ஜூம் செயலின் வருமானம் 1.015 பில்லியன் டாலரில் இருந்து 1.020 பில்லியன் டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு வருமானத்தைக் காட்டிலும் 31 சதவீதம் அதிகமாகும்.


ஆனால், நேற்று பங்கு சந்தையில் இதன் பங்கு கடந்த 9 மாதங்களாக இல்லாத அளவிற்கு மிக மோசமாக சரிந்துள்ளது. ஒரு பங்கின் விலை 289.50 டாலராக முடிவடைந்துள்ளது.


கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து ஜெட் வேகத்தில் உயர்ந்த ஜூம் செயலின் பங்கு அக்டோபரில் 175 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது அதில் இருந்து பாதியாக குறைந்துள்ளது.


இதற்கு காரணம் பெரும்பாலான நிறுவனங்கள் அலுவலகத்தில் வந்து வேலை செய்ய தங்களது ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளன. இதனால் ஜூம் மீட்டிங் தேவைப்படாது. ஆகவே, பங்குகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.


இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் சென்றால்தான் ஜூம் செயலின் உண்மையான மதிப்பு தெரிய வரும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தனது மதிப்பை உயர்த்த ஜூம் செயலி நிறுவனம் மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns