கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 - மீனம் (Guru Peyarchi Palangal - Meenam)...

 


 குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023  - மீனம் (Guru Peyarchi Palangal - Meenam)...




மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்பவர்களே...!



தனக்கென எதையும் எடுத்து வைத்துக் கொள்ளாதவர்களே! மூட நம்பிக்கைகளில் மூழ்காமல் அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டிலும், 12-ம் வீட்டிலும் அமர்ந்து வீண்பழி, விரக்தி, விரயச் செலவு என்று உங்கள் நிம்மதியைக் குலைத்த குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை ராசிக்குள்ளேயே ஆட்சிப் பெற்று அமர்ந்து ஜென்மகுருவாக நீடிப்பதால் மன உளைச்சல், டென்ஷன், வேலைச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் பெரிய நோய்கள் இருப்பது போன்ற பயம் வந்து போகும். அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.



குரு பகவான் 7-ம் வீட்டையும் பார்ப்பதால் கணவன் - மனைவிக்குள் அன்பு குறையாது. சோர்ந்து கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. குரு பகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை பாக்யம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்திலேயே வேலை கிடைக்கும். மகளின் கல்யாணம் தடபுடலாக நடந்து முடியும். வழக்குகள் சாதகமாக அமையும். குலதெய்வம் கோயிலை புதுப்பிப்பீர்கள். குருபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். தந்தைவழி பாட்டன் சொத்துகள் வந்து சேரும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.



பெரிய முடிவுகள் எடுக்கும்போது உணர்ச்சிவசப்படவேண்டாம். குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகளை எல்லாம் பெரிதாக்க வேண்டாம். அவசரப்பட்டு யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். குறுக்கு வழிகளைத் தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் அவ்வப்போது கருத்துவேறுபாடுகள் நிலவி வந்ததே, இனி பாசமாக பேசுவார்கள். என்றாலும் அவர்களால் கொஞ்சம் செலவுகளும் இருக்கும். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அவரின் உடல்நிலை சீராகும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் ஆசி கிட்டும். அக்கம் பக்க வீட்டார்கள் அன்பாக பேசுகிறார்களே என்று குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.



குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:



14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் எந்த வேலையையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் கவுரவப் பதவி வரும்.



30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் லாப, விரயாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தடைகள் நீங்கும். வீடு வாங்க, கட்ட லோன் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.



24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் சுக, சப்தமாதி பதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் நண்பர்கள் உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புதன் பாதகாதிபதியாக இருப்பதால் தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரிகளே, போட்டியாளர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு பெரிய முதலீடுகளைப் போடாதீர்கள். அனுபவமில்லாத புதுத் துறையில் கால்பதிக்க வேண்டாம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, கமிஷன், ஷேர் மூலம் லாபமுண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அவ்வப்போது பிரச்சினை செய்தாலும் இறுதியில் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள்.



உத்யோகஸ்தர்களே, மேலதிகாரியுடன் இருந்து வந்த பனிப்போர் மறையும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி மதிப்பார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். இந்த குரு பெயர்ச்சி வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை கற்றுத் தருவதுடன், அவ்வப்போது வெற்றியையும் தருவதாக அமையும்.



பரிகாரம்: சென்னை திருவலிதாயத்தில் (பாடி) அருள்பாலிக்கும் ஸ்ரீகுருபகவானை அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு உதவுங்கள். நல்லது நடக்கும்.




குருப்பெயர்ச்சி பலன் - மீனம்

குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


குருதேவர் தான் நின்ற ராசியிலிருந்து

ஐந்தாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தையும், 

ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும்,

ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார்.
பொறுமை குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே...!
இந்த வருட குருபெயர்ச்சியில் இதுவரையில் மீன ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் ஜென்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

குருவானவர் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.
பலன்கள் :

திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இதுவரை மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி புத்துணர்ச்சியும், தெளிவும் பிறக்கும். குடும்பத்துடன் இணைய நினைத்தவர்களுக்கு எண்ணங்கள் கைகூடும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகளும், கருத்து வேறுபாடுகளும் குறையும். திருப்பணி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும். உத்தியோகம் நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பொருளாதாரம் :

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். உறவினர்கள் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
உடல் ஆரோக்கியம் :

உடல் ஆரோக்கியம் மற்றும் பயணம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பெண்களுக்கு :

சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் வழியில் மேன்மை உண்டாகும்.
மாணவர்களுக்கு :

அன்றைய பாடங்களை அன்றே படித்து முடிப்பது நல்லது. தேவையில்லாத விஷயங்களை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களிடம் அளவுடன் பழகுவது நல்லது. நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி தகுதிக்கேற்ற உத்தியோக வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோக பணிகளில் வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். பணிபுரியும் இடத்தில் ஊதிய உயர்வுகளும், பொறுப்புகளும் அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கு :

பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் ஆதாயமடைவீர்கள். அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.
விவசாயிகளுக்கு :

விவசாயம் சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். அரசு தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு :

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மாவட்டம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.
கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறைகளில் அனுகூலமான சூழ்நிலைகள் காணப்படும். உயர்மட்ட மக்களிடத்தில் பிரபலம் அடைவீர்கள். திறமைக்குண்டான விருதுகளும், பாராட்டுகளும் சாதகமாக அமையும். 
நன்மைகள் :

வர இருக்கின்ற குருபெயர்ச்சியின் மூலமாக மனதில் தோன்றும் புதுவிதமான சிந்தனைகளை செயல்வடிவமாக மாற்றுவதற்கு உண்டான வாய்ப்புகளும், பெரியோர்களின் அரவணைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள்.
கவனம் :

வர இருக்கின்ற குருபெயர்ச்சியில் தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது.
வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...