கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 - கும்பம் (Guru Peyarchi Palangal - Kumbam)...

 


 குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023  - கும்பம் (Guru Peyarchi Palangal - Kumbam)...




எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே...!



புரட்சிகரமான முடிவும், தொலை நோக்குச் சிந்தனையும் கொண்டவர்களே, மந்திரியாக இருந்தாலும் மனசில் பட்டதை பளிச்சென பேசுபவர்களே. இதுவரை உங்கள் ராசிக்குள் 12-ல் குருவாகவும், ஜென்ம குருவாகவும், அமர்ந்து நல்லதையும், கெட்டதையும் கலந்து கொடுத்த குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை 2-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்து பலன் தரப் போகிறார். உங்களின் அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். இனி எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும். உங்கள் ராசிக்கு 2-ம் வீடான குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப் போய்க்கொண்டிருந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள் வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள்.



குரு பகவான் உங்களின் ஆறாவது வீட்டை பார்ப்பதால் உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குருபகவான் உங்களின் எட்டாவது வீட்டை பார்ப்பதால் வராது என்றிருந்த பணம்கைக்கு வந்து சேரும். குரு உங்களின் பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். அரசாங்க காரியங்களில் இருந்த தடுமாற்றம் நீங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பழமையான புத்தகங்கள், நாவல்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். ஆன்மிக வழிபாட்டில் மனம் லயிக்கும். குலதெய்வம் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.



எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவுகள் வந்ததே! இனி அந்த அவலநிலை மாறும். செரிமானக் கோளாறு, தூக்கமின்மை, கை, கால் வலி, முதுகுவலி என அவஸ்தைப் பட்டீர்களே! இனி எல்லாம் சரியாகும். தேவையில்லாமல் பேசி சில நல்ல நட்புகளையெல்லாம் இழந்தீர்களே, இனி நிதானித்துப் பேசுவீர்கள். சகோதர, சகோதரிகளிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பாசமழை பொழிவார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு. உங்களை கண்டும் காணாமல் போன உறவினர்கள் இனி தேடி வந்து உறவாடுவார்கள்.



குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:



14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் தன, லாபாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். சுபநிகழ்ச்சிகளால் குடும்பத்தில் சந்தோஷம் பொங்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். பழைய சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.



30.04.2022 முதல் 24.02.2023: மேற்கண்ட நாட்களில் உங்களின் ராசிநாதனும், விரயாதி பதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தடைபட்டசில வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் செல்வீர்கள்.



24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்களின் பூர்வ புண்யாதிபதியும், அஷ்டமாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் மகளின் கல் யாணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வியாபாரிகளே, போட்டியாளர்களை சமாளிக்கும் அளவுக்கு புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். மருந்து, கமிஷன், மர வகைகளால் லாபமடைவீர்கள். டிசம்பர், ஜனவரி, மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பத்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகஸ்தர்களே, உங்களின் கடின உழைப்பையும், திறமையையும் பயன்படுத்திக் கொண்டு மற்றவர்கள் நல்ல பெயர் எடுத்தார்களே! அந்த அவலநிலை மாறும். இனி மேலதிகாரியின் கனிவு பார்வை உங்கள் மீது விழும். உங்களின் சம்பளம் உயரும். இந்த குரு மாற்றம் எங்கும் எதிலும் முன்னேற் றத்தையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவ தாக அமையும்.



பரிகாரம்: விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீவிருத்தகிரிஸ்வரரையும், விபசித்து முனிவர் மற்றும் தட்சிணாமூர்த்தியையும் மூலம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு மாங்கல்யம் வாங்கிக் கொடுங்கள். சுபிட்சம் உண்டாகும்.



 

குருப்பெயர்ச்சி பலன் - கும்பம்

குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


குருதேவர் தான் நின்ற ராசியிலிருந்து

ஐந்தாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தையும்,

ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும், 

ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார். 
நிதானமான செயல்பாடுகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய கும்ப ராசி அன்பர்களே...!
இந்த வருட குருபெயர்ச்சியில் உங்களுடைய ராசியில் இருந்துவந்த குருவானவர் தன ஸ்தானமான இரண்டாம் பாவகத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார்.

குருவானவர் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.
பலன்கள் :

மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தடைபட்ட உத்தியோகம் தொடர்பான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பொருளாதாரம் :

பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். பணவரவுகளில் இருந்துவந்து தடை, தாமதங்கள் நீங்கும். சேமிப்பினை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மூத்த சகோதரர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.
உடல் ஆரோக்கியம் :

உடல் ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்கள் குறையும். வாழ்க்கை துணைவர் வழியில் வரவுகளும், ஒத்துழைப்புகளும் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.
பெண்களுக்கு :

தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் மற்றும் சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். புதுவிதமான ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
மாணவர்களுக்கு :

மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி வாய்ப்புகளை பெறுவீர்கள். வெளிநாடு மற்றும் வெளியூர் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேளாண்மை மற்றும் வங்கி சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :

உபரி வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். வங்கி தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு :

புதிய தொழில் தொடங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். பெரிய அளவிலான முதலீடுகள் அதிகரிக்கும். தொழிலை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். வியாபார நுட்பங்களை மற்றவரிடம் பகிராமல் இருப்பது நல்லது.
விவசாயிகளுக்கு :

கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் உருவாகும். பூக்கள் மற்றும் வாசனை திரவியங்களின் மூலம் மேன்மை ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், கௌரவப் பதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.
கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிறு மற்றும் பெரும் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், கீர்த்திகளும் ஏற்படும்.
நன்மைகள் :

வர இருக்கின்ற குருபெயர்ச்சியின் மூலமாக தமக்கு எதிராக செயல்பட்டவர்களை வீழ்த்தி, பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டு புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.
கவனம் :

வர இருக்கின்ற குருபெயர்ச்சியில் புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்களை பகிர்வதையும், வாக்குறுதிகள் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது.
வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்துவர முன்னேற்றமான சிந்தனைகளும், அதற்குண்டான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...