கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வித்துறை - மானியக் கோரிக்கை எண்: 43 - புதிய அறிவிப்புகள் 2022-2023 (School Education Department - Grants Request No: 43 - New Announcements 2022-2023)...

 


>>> பள்ளிக்கல்வித்துறை -  மானியக் கோரிக்கை எண்: 43 - புதிய அறிவிப்புகள் 2022-2023 (School Education Department - Grants Request No: 43 - New Announcements 2022-2023)...


பள்ளி கல்வித் துறை புதிய அறிவிப்புகள்:

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது, 47 லட்சத்தில் இருந்து 53 லட்சமாக உயர்ந்துள்ளது.

6 லட்சம் பேர் கூடுதலாக அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

4 ஆண்டுகளில் அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்; 

மாணவர்களின் கலைத் திறனை மேம்படுத்தும் வகையில் கலைத் திருவிழா நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத 4.8 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்க 9.83 கோடி மதிப்பீட்டில் புதிய எழுத்தறிவுத் திட்டம்.

அரசுப் பள்ளிகளில் ரூ.25 லட்சம் செலவில் காய்கறித் தோட்டம் அமைக்கப்படும்; 

பள்ளிகளில் மாதந்தோறும் பெற்றோர் கூட்டம்.

கிராம, நகர பகுதிகளில் நூலக சேவை பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம், தன்னார்வலர்கள் வாயிலாக நூலக சேவை;

15 லட்சம் வாசகர்கள் பயன்பெறும் வகையில் 56.25 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். 

அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 -23ம் கல்வி ஆண்டில் இருந்து ரூ.200 தனி கட்டணம் வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...