கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மதிப்பெண்கள்.. வைரலாகும் குஜராத் இ.ஆ.ப. அலுவலரின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (35 marks in English and 36 marks in Mathematics. IAS Officer's 10th Standard Mark List - Viral in Social Media)...



ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மதிப்பெண்கள்.. வைரலாகும் குஜராத் இ.ஆ.ப. அலுவலரின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (35 marks in English and 36 marks in Mathematics. IAS Officer's 10th Standard Mark List - Viral in Social Media)...


வரும் நாட்களில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மதிப்பெண்கள் குறைவதால், சில மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். 


ஒரு தேர்வின் மதிப்பெண் மட்டும் நம் வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லை என்பதை உணர்த்தும் வகையில் குஜராத் இ.ஆ.ப. அலுவலரின்  ஒருவரின், 10ஆம் வகுப்பு பள்ளி மதிப்பெண் பட்டியல் படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.


குஜராத், பருச் மாவட்ட கலெக்டர் துஷார் சுமேரா தனது 10ஆம் வகுப்பு தேர்வில், ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மதிப்பெண் எடுத்ததை பகிர்ந்துள்ளார்.


துஷார் சுமேரா கலைப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்து, 2012ல் இ.ஆ.ப. அலுவலரானார். யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன், அவர் சில ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார். குறைந்த மதிப்பெண் எடுப்போருக்கு துஷார் சுமேரா வாழ்க்கை ஒரு முன்மாதிரி.


விடாமுயற்சி உடன் தொடர்ந்து கடினமாக உழைத்தால் எந்தவொரு உயரத்தையும் எளிதாக எட்டிவிடலாம். இந்த பதிவை இணையத்தில் பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர்.



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...