கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"பள்ளிக் கல்வியில் ஊராட்சி மன்றங்களின் பங்கும் பொறுப்பும்" என்ற தலைப்பில் கிராம ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி கையேட்டினை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வெளியிட்டார் (Education Minister Anbil Mahesh has released a training guide for village panchayat Presidents on "The Role and Responsibility of Panchayat Councils in School Education")...

 "பள்ளிக் கல்வியில் ஊராட்சி மன்றங்களின் பங்கும் பொறுப்பும்" என்ற தலைப்பில் கிராம ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி கையேட்டினை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வெளியிட்டார் (Education Minister Anbil Mahesh has released a training guide for village panchayat Presidents on "The Role and Responsibility of Panchayat Councils in School Education")...


‘பள்ளிக் கல்வியில் ஊராட்சி மன்றங்களின் பங்கும் பொறுப்பும்’ என்ற தலைப்பில், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாமை மறைமலை நகரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தொடங்கிவைத்தார்.


‘பள்ளிக் கல்வியில் ஊராட்சி மன்றங்களின் பங்கும் பொறுப்பும்’ என்ற தலைப்பில் நடைபெறு்ம் இந்த2 நாள் பயிற்சி முகாம் தொடக்கவிழா பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லாஉஷா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, பயிற்சி கையேட்டை வெளியிட்டார்.



 


மேலும், ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.


பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து வசதிகளும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில், பள்ளிக்கல்வித் துறையுடன் ஊரக உள்ளாட்சித் துறை இணைந்து செயல்படுகிறது. இதைத் தொடர்ந்து, பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு, 20 நபர்கள் கொண்ட ஒவ்வொரு பள்ளி மேலாண்மைக் குழுவிலும் 2 ஊராட்சி மன்றத்தினர் உறுப்பினராக உள்ளனர். இந்த மேலாண்மைக் குழுவுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்த பயிற்சி அமையும்.

 


இதன்மூலம் மாநில, மத்திய அரசுகளின் திட்டம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிந்துகொண்டு, அவற்றை தங்களது பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு கிடைக்க செய்ய முடியும். மாணவர்களின் கல்வி தரமும் உயரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய முயற்சிகளை ஊக்குவிக்க அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் - அரசாணை (நிலை) எண்: 125, நாள் : 21-05-2025 வெளியீடு

  G.O. (Ms) No. 125, Dated: 21-05-2025 அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர...