கல்வி அஞ்சல்கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...கல்வி அஞ்சல்கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்... கல்வி அஞ்சல்தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...கல்வி அஞ்சல்கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...கல்வி அஞ்சல்கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்... கல்வி அஞ்சல்தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...கல்வி அஞ்சல்
திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம் சார்பில் எழுச்சியோடு நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்றோம்.
“மதயானை நூலை எழுதி வெளியிட்டதற்காக பாராட்டு விழா, நல்லாசிரியர் மற்றும் பொதுத் தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, பொதுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளில் சாதனைப் படைத்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா” என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
“உங்கள் குடும்பத்தின் ஒருவராக இங்கு வந்துள்ளேன். எப்போதும் உங்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்பேன்” என உரையாற்றி மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் பரிசுகள் வழங்கினோம்.
எழுச்சிமிகு இவ்விழாவை ஒருங்கிணைத்த அனைவருக்கும் அன்பும். நன்றியும்.
SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 5 திருப்பூரில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடினோம்.
5 கல்வி வட்டாரங்களில் இருந்து 600 பள்ளித் தலைமையாசிரியர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட #SLAS அறிக்கையின் அடிப்படையில், தேர்ச்சி விகிதம் மற்றும் கற்றல் கற்பித்தல் மேம்பாட்டிற்காக எடுத்துவரும் முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தார்கள். அவர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள் கூறி நம்பிக்கையளித்தோம்.
மாவட்டம் வாரியாக நடத்துகின்ற ஆய்வுக் கூட்டத்தின் 5ஆவது மாவட்டமாக திருப்பூர் அமைந்தது.
NMMS தேர்வில் 18 மாணவர்கள் வெற்றி - தலைமை ஆசிரியர் & ஆசிரியருக்கு அமைச்சர் பாராட்டு
திருச்சி மாவட்டம் ஊருடையாப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 18 மாணவர்கள் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் (National Means-cum-Merit Scholarship-NMMS) வெற்றி பெற்றுள்ளார்கள்.
இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்த அப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு.ராணி அவர்களையும், பயிற்சியளித்த ஆசிரியர் திருமிகு.மணிகண்டன் அவர்களையும் திருச்சியில் நடைபெற்ற பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கெளரவித்தோம்.
SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 4 தர்மபுரியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு
முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுடனான இரண்டு நாள் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி முடித்த மறுநாளே, மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களை நேரடியாகச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.
அந்த வரிசையில் 4-ஆவது ஆய்வுக் கூட்டத்தை தர்மபுரியில் நடத்தினோம். “தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு எனும் ஒற்றை குறிக்கோளை நோக்கி ஓராண்டு பயணிப்போம். தங்களின் முயற்சிகளும், உற்சாகமும் பெரும் நம்பிக்கை அளிக்கிறது” என உரையாற்றினோம்.
#SLAS அறிக்கையை கையிலெடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கவுள்ளோம். இப்பயணம் நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கானது!
SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 3 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு
மாவட்ட வாரியாக பள்ளித் தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டத்தின் 3ஆவது சந்திப்பு ஓசூரில் எனது தலைமையில் இன்று நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். #SLAS அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை முன்வைத்து, மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டோம்.
“அடுத்தாண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் கற்றல் அடைவுகளில் முன்னேறியுள்ளது என #SLAS அறிக்கையின் முடிவுகளில் வர வேண்டும். அதற்கான முயற்சிகளை இன்றிலிருந்தே மேற்கொள்ளுங்கள். உங்களின் முயற்சிகளுக்கு துணை நிற்போம்” என ஊக்கமளித்து விடைபெற்றோம்.
SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 2 நாகையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு
திருச்சி மாவட்டத்தைத் தொடர்ந்து 2ஆவது மாவட்டமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்களுடன் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினோம்.
மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட கற்றல் அடைவு #SLAS அறிக்கையை முன்வைத்து இந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். 2 கல்வி வட்டாரங்களில் இருந்து மொத்தம் 170 தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டு, கற்பித்தல் முறைகளில் தாங்கள் அடுத்து மேற்கொள்ளவுள்ள முயற்சிகள் பற்றி எடுத்துரைத்தார்கள்.
‘நாகை மாவட்டம் கற்றல் கற்பித்தலில் முன்னேறியுள்ளது’ என அடுத்தாண்டு #SLAS அறிக்கை தெரிவிக்க வேண்டும்’ என ஊக்கமளித்து விடைபெற்றோம்.
SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 1 திருச்சியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு
ஜூன் 23, 24 ஆகிய இரண்டு நாட்களும் 38 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அலுவலர்களுடன் ஒவ்வொரு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி குறித்தும் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினோம். அதில் மாநிலத் திட்டக்குழு நடத்திய SLAS (State Level Achievement Survey) மூலம் பெறப்பட்ட ஆய்வறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
“இதன் அடுத்த கட்டமாக மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும்” என அறிவித்திருந்தோம். அவ்வகையில் முதல் ஆய்வுக்கூட்டம் #திருச்சி -யில் எனது தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் SLAS அறிக்கையில் தரப்பட்டுள்ள புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கலந்தாலோசித்தோம்.
மாவட்டத்தின் 5 கல்வி வட்டாரங்களில் இருந்து 463 தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். 2025-26 கல்வியாண்டில் சிறப்பான தேர்ச்சி விகிதத்தைப் பெறுவதற்கான அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கி, நம்பிக்கையோடு விடைபெற்றோம்.
குடியரசுத் தலைவருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு
School Education Minister Mr. Anbil Mahesh meeting with the President
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு.
ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை மணப்பாறையில் நடைபெற உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தார்.
மக்களின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நடவடிக்கை
Panchayat Union Primary School whose name was changed in response to people's demand - Minister Anbil Mahesh's action
நாமக்கல்: மக்கள் கோரிக்கையை ஏற்று ‘அரிசன் காலனி’ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என்ற பெயரை ‘மல்லசமுத்திரம் கிழக்கு’ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என பெயர் மாற்றம் செய்து வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.
‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என்ற மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வரிகளையும் குறிப்பிட்டு பெயர் மாற்றம் செய்து வைத்த அமைச்சர்
பள்ளியின் பெயரில் இருந்த ‘அரிசன் காலனி’ - நடவடிக்கை எடுத்த அமைச்சர் மகேஷ்
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் பெயரில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் எனும் பகுதியில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்தப் பள்ளியின் பெயர், ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி’ என்று இருந்தது. இதில், ‘அரிசன் காலனி’ என்பதை நீக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்களும், அந்த ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவரும் தொடர்ந்து போராடி வந்தனர். இவர்களின் போராட்டத்தை வழக்கறிஞர் அன்பழகன் என்பவர், அரசுக்கும் பள்ளிக்கல்வித் துறைக்கும் எடுத்துச் சென்றார்.
இதனையடுத்து முதலமைச்சரின் உத்தரவின்படி அந்தப் பள்ளியின் பெயரை ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ என மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது.
பெயர் மாற்றத்திற்காக போராடிய ஊர்ப் பெரியவர் கணேசனுக்கு பொன்னாடை அணிவித்த அமைச்சர், இதற்கான அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
பெரியவர் கணேசன் மற்றும் வழக்கறிஞர் அன்பழகன் ஆகியோரை பாராட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நிதிசார்ந்த கோரிக்கைகளை முதலமைச்சர் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறியுள்ளார் - இன்றைய (10.11.2024) நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பேச்சு...
The Chief Minister has said that he will take care of the financial demands - Hon'ble Education Minister's speech in today's (10.11.2024) program...
சாக்லெட் கொடுத்த பிறந்தநாள் கொண்டாடிய மாணவிக்கு வாழ்த்து - பிழை இல்லாமல் வாய்ப்பாடு சொல்லி அசத்திய மாணவர்கள் - மதிய உணவு சாப்பிட்டு ஆய்வு - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...
பதவி உயர்வு தொடர்பான வழக்கில் அக்டோபர் 15அன்று உச்சநீதிமன்றத்தில் இருந்து நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள்...
On October 15th, we expect good news from the Supreme Court in the promotion case - Hon'ble Minister for School Education, Mr. Anbil Mahesh...