கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 15.08.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 15.08.2022 - School Morning Prayer Activities...

 திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: குடி செயல் வகை


குறள் : 1027


அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்

ஆற்றுவார் மேற்றே பொறை.


பொருள்:

போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு


பழமொழி :

The end must justify the means.

இலட்சியத்தை அடைவதில் நேர்மை வேண்டும்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. நமக்கு சுதந்திரம் பெற்று தந்த தியாகிகள் குறித்து அறிந்து கொள்ள முயல்வேன்.


2.அவர்களின் தியாகம் மற்றும் ஒழுக்கம் நிறைந்த வாழ்வை போலவே நானும் வாழ முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


நாம் எப்போதும் நம்பிக்கையை

தளரவிடாமல்.. மேலும் நல்லதை

செய்ய முயற்சிக்க வேண்டும்..!


பொது அறிவு :


 1. சுதந்திர தினத்தன்று இந்திய படைவீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் யாவை


போர்கால வீரதீர விருது:


பரம் வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா



  அமைதிகால வீரதீர விருது :

அசோக சக்ரா , கீர்த்தி சக்ரா , செளரியா சக்ரா


2. ஆகஸ்ட் - 15 ஆம் சுதந்திர தினத்தை அனுசரிக்கும் மற்ற நாடுகள் எவை?


தென்கொரியா , காங்கோ , பஹ்ரைன்


English words & meanings :


re·flec·tiv·i·ty - the ability to reflect something. எதிரொளிக்க கூடிய அல்லது அமைதியாக சிந்திக்க கூடிய தன்மை


ஆரோக்ய வாழ்வு :


நாவல் மரத்தின் பழம் ,இலை ,மரப்பட்டை  மற்றும்  விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை ஆகும் .


NMMS Q 41:


தாஜ்மஹாலின் தலைமை சிற்பி யார்? 


விடை : உஸ்தத் இஷா


ஆகஸ்ட்  15


இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.


இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.


ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.[


நீதிக்கதை


பூவா தலையா


ஒரு முறை ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து போருக்கு தயாரானார். அவர் எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். அனைவரும் சோர்ந்து போய் நம்பிக்கையின்றி இருந்தார்கள். 


இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார். 


அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார். அது என்னவென்றால்,


அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து விட்டு ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் காண்பித்து நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம் என்று துறவி சொன்னதைச் சொன்னார். 


வீரர்களிடம் நம் தலை விதியை இந்த நாணயம் நிர்ணயிக்கட்டும் என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர். 


அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்க தயாரானார்கள். 


யுத்தத்தில் வெற்றியும் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி விதியை யாராலும் மாற்ற முடியாது என்று ராஜாவிடம் சொல்ல ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை காண்பித்தார். 


நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.


இன்றைய செய்திகள்


15.08.22


# நம் இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


# பள்ளிகளில் காலை உணவு திட்டத்துக்கு ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.


# 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுச் சேவைக்கான பதக்கங்கள் மற்றும், காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்களை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


# உலகின் மிக உயரமானதாக கருதப்படும் செனாப் ரயில்வே பாலம்  ஜம்மு காஷ்மீரில் திறப்பு.


# நமது தேசிய கீதம் ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்டு, அதனை ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் ஆங்கிலத்தில் ‘மார்னிங் சாங் ஆஃப் இந்தியா’ என மொழி பெயர்க்கப்பட்டு, அவர் மூலமாகவே பாடப்பட்டு 104 ஆண்டுகள் ஆகின்றன.


# சர்ச்சையை ஏற்படுத்திய சீன உளவுக் கப்பலான யுவான் வாங்க்-5 வருகைக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.


# ரஷ்யாவின் சொத்துகளை அமெரிக்கா முடக்கும் பட்சத்தில் அந்த நாட்டுடனான உறவை முறித்துக் கொள்ள  தயங்காது என ரஷ்யா எச்சரிக்கை.


# ஆசிய ஜூனியர் கைப்பந்து: இந்திய அணி அறிவிப்பு.


# உலக ஸ்னூக்கர் போட்டியில் சென்னை வீரர், வீராங்கனை பங்கேற்பு.


# கேலோ இந்தியா யு-16 மகளிர் ஹாக்கி லீக் - ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடக்கம்.


Today's Headlines


# Today the 75th Independence Day of our country India is being celebrated with great fervor across the country.


# Government of Tamil Nadu has issued an order appointing a coordination officer for the breakfast program in schools.


 # The Tamil Nadu government has issued a notification announcing the public service medals and special service medals for the police investigation to 15 police officers on the eve of Independence Day 2022.


 # Chenab Railway Bridge, considered to be the highest in the world was inaugurated in Jammu and Kashmir.


# It has been 104 years since our National Anthem was composed by Rabindranath Tagore, translated into English as 'Morning Song of India' in Madanapally, Andhra Pradesh, and sung by him.


 # The Sri Lankan government has given permission for the visit of the controversial Chinese spy ship Yuan Wang-5.


 # Russia has warned that it will not hesitate to cut its relationship with the country if the US freezes its assets.


 # Asian Junior Volleyball: Indian Team Announcement


 # Chennai player participated in world snooker tournament.


 # Gallow India U-16 Women's Hockey League - Starts on 16th August.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...