சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின். பின்னர் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:
எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது. விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஒய்வூதியத்தொகை இன்று முதல் 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
குடும்ப ஒய்வூதியம் ரூ.9,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். வழித் தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஒய்வூதியம் ரூ 9,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஒய்வூதியர்களுக்கு 1.07.22 முதல் அகவிலைப்படி 31% இருந்து 34% உயர்த்தி வழங்கப்படும்.
இதன்மூலம் 16 இலட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,947 கோடி கூடுதலாக செலவாகும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பு குறித்து எதிர்கால இளம் சமுதாயம் அறிந்துகொள்ளும் வகையில் விடுதலை நாள் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.
எளிமை, இனிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தியடிகள்.
இன்றைக்கு நாட்டுக்கு அவசிய, அவசரமான கொள்கைகள் இவைதான். இத்தகைய அனைத்து மனித நேயக் கொள்கைகளும் கொண்ட திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம்.
சென்னையில் விடுதலை நாள் அரங்காட்சியகம் அமைக்கப்படும்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுகக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும். அவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இனி ரூ.10ஆயிரம் வழங்கப்படும். காசியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும்.
கடந்த ஓராண்டில் தமிழக பல்துறை சார்ந்த வளர்ச்சியை சந்தித்து வருகிறது. மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என உள்ளிட்ட சாதனைகளை திமுக அரசு நிகழ்த்தி வருகிறது. செஸ் விளையாட்டுப் போட்டியையும் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கிறோம் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் சில:
சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில், தேசியக் கொடியேற்று விழாவிற்கு வருகை தந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு முப்படைகளின் உயர் அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரை தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்தார்...
சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில், துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதினை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி பா. எழிலரசி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்...
சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு தகைசால் தமிழர் விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்...
பரிசுத்தொகை ரூ.10,00,000உடன் ரூ.5000 சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்தார் திரு.நல்லகண்ணு அவர்கள்...
சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில், டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் விருதுக்கான தங்கப் பதக்கம், காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரி, சவேரியார் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ச. இஞ்ஞாசிமுத்து அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்...
அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு 01.07.22 முதல் அகவிலைப்படியானது 3% உயர்த்தி 31%ல் இருந்து 34% ஆக வழங்க உத்தரவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் 76ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, போர் நினைவுச்சின்னத்தில் இருந்து அவரது காரின் முன்னாலும் பின்னாலும் சென்னை போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர். கோட்டை கொத்தளத்தின் முன் அணிவகுப்பு மரியாதை மேடை அருகே இறங்கிய ஸ்டாலினை பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு வரவேற்றார்.
தமிழ்நாடு காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தென்னிந்திய தலைமை படைத்தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத்தளம் விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதலமைச்சருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிமுகம் செய்துவைத்தார்.
பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தவெளி ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு திரும்பிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அப்போது மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டு, போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது , 'மாநில அரசின் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை, ஆகஸ்ட் - 15 ஆம் நாள் முதல், ரூபாய் 18 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருதுபாண்டியர் சகோதரர்களின் வழித்தோன்றல்கள், சிவகங்கை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்பையும் இந்த இனிய தருணத்தில் வெளியிட விரும்புகிறேன்.
ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 16 இலட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு 1,947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவாகும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டு கால தொடர் பங்களிப்பு குறித்து, எதிர்கால இளம் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ‘விடுதலை நாள் அருங்காட்சியகம்’ ஒன்று சென்னையில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
எளிமை - இனிமை - நேர்மை - ஒழுக்கம் - மனித நேயம் - மதச்சார்பின்மை - சமத்துவம் - சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தி அவர்கள். இன்றைக்கு நாட்டுக்கு அவசிய, அவசரமான கொள்கைகள் இவைதான். இத்தகைய அனைத்து மனிதநேயக் கொள்கைகளும் கொண்ட "திராவிட மாடல்" ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம்.
சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த அடிப்படையில்தான் ஆட்சியும் அமைந்துள்ளது. வளர்ச்சி என்பதும் இதனை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறோம்.தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி" என்று முதலமைச்சர் தெரிவித்தார்.