https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html
பள்ளிக் கல்வி - அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக் கல்வித் ப௧5(2) துறை, அரசாணை (நிலை) எண். 17 நாள்: 07.02.2018. (திருவள்ளுவராண்டு 2049 தை 25)
படிக்கப்பட்டவை:-
பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.019344/எம்/இ2/2017, நாள் 08.05.2017.
ஆணை:
மேலே படிக்கப்பட்ட கடிதத்தில், 2016-17ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 37,201 அரசுப் பள்ளிகளும் மற்றும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 8,402 அரசு உதவி பெறும் பள்ளிகளும், ஆக மொத்தம் 45,603 பள்ளிகள் செயல்படுகின்றன எனவும், மேற்படி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை 55,73,217 மாணாக்கர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 29,51,084 மாணாக்கர்களும் பயின்று வருகின்றனர் எனவும், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் தரமான கல்வி பயில்வதற்கும், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதிப்படுத்திடவும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது எனவும், பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பச் செல்லும் போதும், உரிய பாதுகாப்புடன் சென்றுவரும் பொருட்டு, பள்ளிக் கல்வி இயக்ககத்திலிருந்து அவ்வப்போது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு வருகின்றன எனவும், இருப்பினும் இடைப்பட்ட பள்ளி நேரத்தில் கீழ்க்காணும் எதிர்பாராத விபத்துக்களினால் பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு பலத்த காயங்கள் அல்லது உயிர் சேதம் ஏற்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார் :-
💥 மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் போது ஏற்படும் விபத்து.
💥 கல்விச் சுற்றுலா செல்லும் போது ஏற்படும் விபத்து.
https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html
💥 நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, ஜுனியர் ரெட் கிராஸ், பாரத சாரண / சாரணிய இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் மூலமாக நடைபெறும் முகாம் மற்றும் பேரணிகளில் கலந்து கொள்ளும் போது ஏற்படும் விபத்து.
💥 விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும்போது ஏற்படும் விபத்து.
💥 மின்கசிவு மற்றும் ஆய்வகங்களில் ஏற்படும் விபத்து.
https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html
💥 விஷஜந்துக்களால் ஏற்படும் விபத்து.
💥 மாணவர்கள் விடுமுறை நாள்களில் வெளியே செல்லும் போது நீர்நிலைகளால் ஏற்படும் விபத்து போன்றவை.
https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html
2) மேற்காணும் சூழ்நிலையில் தவிர்க்க முடியாமல் மாணவ / மாணவியருக்கு விபத்துகள் ஏற்பட்டு பாதிப்பு உண்டாகிறது எனவும், இதனால் குழந்தையை இழந்து பெற்றோர்கள் மிகவும் வேதனை அடைகின்றனர் எனவும், எனவே குழந்தையை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டியது அவசியமாகிறது எனவும், இத்தகைய நிகழ்வுகளின் போது பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களுக்கும் அல்லது உயிர்சேதம் ஏற்படின் அவர்களின் குடும்பத்திற்கும் உதவித் தொகை வழங்குவது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையுமென்பதால், விபத்தில் காயம் அடையும் அல்லது மரணமடையும் பள்ளி மாணவர்களுக்கு பின்வருமாறு நிவாரணத் தொகை நிர்ணயம் செய்து மாணவ / மாணவியர்களின் பெற்றோர்களுக்கும் / பாதுகாவலர்களுக்கும் அரசிடம் பெற்று பள்ளிக் கல்வி துறையின் மூலம் நிவாரணம் வழங்கிட ஆணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்:-
https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html
வ. விபத்தின் தன்மை இழப்பீடு
எண்
1) விபத்தில் மரணமடைந்த மாணவர்களுக்கு ரூ.1,00,000/-
https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html
2) விபத்தில் பலத்த காயம் அடைந்த மாணவர்களுக்கு ரூ.50,000/-
https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html
3) விபத்தில் சிறிய காயம் அடைந்த மாணவர்களுக்கு ரூ.25,000/-
https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html
3. பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து அதனை ஏற்று, அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை நிர்ணயம் செய்து உயிரிழந்த / காயம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் / பாதுகாவலர்களுக்கு கீழ்க்கண்டவாறு நிவாரணத் தொகை வழங்கலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது :-
https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html
(I) அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் மரணம் அடைந்தால் ரூ.1,00,000/-ம் (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்), பலத்த காயமடைந்தால் ரூ.50,000/-ம் (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும் மற்றும் சிறிய காயம் அடைந்தால் ரூ.25,000/-ம் (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) என உயிரிழந்த / காயம் அடைந்த மாணவர்களுடைய பெற்றோர்கள் / பாதுகாவலர்களுக்கு நிவாரணத் தொகை பள்ளிக் கல்வித் துறை மூலம் வழங்கப்பட வேண்டும்.
https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html
॥) மாணவ / மாணவியர்களுக்கு, பள்ளிகளிலும் / பள்ளி செல்லும் போதும் / சுற்றுலா செல்லும் போதும் / பள்ளியின் செயல்பாடுகளின் போதும் / எதிர்பாராத விதமாக, விபத்துக்களினால் மரணம் / காயம் ஏற்பட்டால் நிவாரணம் வழங்கப் படவேண்டும்.
https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html