கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Accident லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Accident லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அமைச்சரின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு



அமைச்சரின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு.


சென்னையை அடுத்த காட்டங்குளத்தூர் பகுதியில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி 26 வயது இளைஞர் உயிரிழப்பு.


ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தில் வந்த இறையன்பு என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.


சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க நேற்று (07-09-2026) காலை அமைச்சர் ஜெகதீஸ்வரி சென்னை வந்து கொண்டிருந்தார்.


அமைச்சர் அரசு வாகனத்தில் வந்துள்ளார்; அவருக்கு முன்னால் எஸ்கார்ட் வண்டியும்; அதற்கு பின்னால் அவரது சொந்த வாகனமும் வந்துள்ளது.


காட்டாங்குளத்தூர் சந்திப்பில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த காரான மாருதி எர்டிகா கார் மோதி இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு.


மறைமலைநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து ஏற்படுத்திய அமைச்சரின் சொந்த காரை பறிமுதல் செய்து விசாரணை.


வாகனம் மோதி 4 குழந்தைகள் உயிரிழப்பு



வாகனம் மோதி 4 சிறார்கள் உயிரிழப்பு


திண்டுக்கல் வடமதுரை அருகே வாகனம் மோதிய விபத்தில் 3 சிறுமிகள், 1 சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம்


திண்டுக்கல்லில் வடமதுரை அருகே கொல்லம்பட்டி பிரிவில் வாகனம் மோதி 4 சிறார் உயிரிழப்பு.


கொல்லம்பட்டி பிரிவில் விளையாடிய சிறுவர்கள் மீது பால் வேன் மோதி உயிரிழப்பு.


விபத்தில் தனுஸ்ரீ (5), யோக வர்ஷி (11), அனன்யா (6) மற்றும் மோசிகீரன் (6) உயிரிழப்பு; காவல் துறை விசாரணை.


9 மாணவர்கள் மின்சாரம் தாக்கி காயம் - தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

 


கழிவறைக்கு சென்ற 9 மாணவர்கள் மின்சாரம் தாக்கி காயம் - தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்


* தருமபுரி: தொப்பூர் அருகே அரசு பள்ளியின் கழிவறை கதவை திறந்த 9 மாணவர்களை மின்சாரம் தாக்கியதால் அதிர்ச்சி


* தேர்தல் பணிகளின் போது கொடுக்கப்பட்ட மின் இணைப்பை பராமரிக்காததால் இரும்பு கதவு வழியாக மின்சாரம் பாய்ந்துள்ளது. கவனக்குறைவாக இருந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்



Vietnam boat accident | Why did 15 people die?

 


வியட்நாம் படகு விபத்து : 15 பேர் உயிரிழந்தது ஏன்? உயிர் தப்பிய பயணி தகவல்


Vietnam boat accident: Why did 15 people die? Survivor shares details


வியட்நாம் படகு விபத்து: உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்தும்  15 பேர் உயிரிழந்தது ஏன்? உயிர் தப்பிய பயணி தகவல்


வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே நேற்று (ஜூலை 11) நடந்த படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உள்பட மொத்தம் 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர், கேரளாவை சேர்ந்த இருவர் மற்றும் ஆந்திராவை சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


உயிரிழந்தவர்கள் விவரம்




இந்திய தூதரகம் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்படுவது குறித்து தகவல் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது


இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், விபத்துக்கான காரணம் குறித்து அவசரமான விசாரணை நடத்தவும் வியட்நாம் பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் துணை பிரதமர் ஃபாம் கியா டுக் தெரிவித்துள்ளார்.


மேலும் இந்திய குடிமக்கள் தொடர்பாக விவகாரங்களைக் கையாள வியட்நாமில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து பணியாற்றுமாறு வியட்நாம் வெளியுறவு அமைச்சகத்துக்கு வியட்நாம் அரசு அறிவுறுத்தியுள்ளது.


உதவி எண்கள் அறிவித்த தமிழ்நாடு அரசு


இந்த விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக அதன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"வியட்நாமில் உள்ள தமிழ்ச் சங்கங்களைத் தொடர்புகொண்டு விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்கள் பற்றி கேட்கப்பட்டுள்ளன," என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க இந்திய தூதரகம் மற்றும் தமிழ்நாடு அயலக தமிழர் நலத்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.


அதன் செய்திக் குறிப்பில், "வியட்நாம் நாட்டின் படகு விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களோ, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடர்ப்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என்று தெரிவித்துள்ளது.


இந்தியாவிற்குள் - 1800 309 3793


வெளிநாடு - +91 80 6900 9900 (மிஸ்டு கால்)


தொடர்புக்கு - +91 80 6900 9901



இந்திய தூதரகத்தின் உதவி எண்கள்


பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் மற்றும் தேவையான உதவிகளை வழங்குவதற்காக, வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கட்டுப்பாட்டு அறை (Control Room) அமைக்கப்பட்டுள்ளது.


தொடர்பு எண்கள்:


+84 36 281 7930


+84 91 552 37 14


+84 33 452 0414


ஹனோயிலும் ஒரு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.


தொடர்பு எண்:


+84 91 308 9165



உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்தும் 15 பேர் உயிரிழந்தது ஏன்? 


வியட்நாமில் படகு விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பழனியைச் சேர்ந்த நிர்மல் குமாரிடம்  செய்தியாளர் பேசினார். 


அப்போது இந்த விபத்து நடந்த தருணம் குறித்துப் பகிர்ந்த நிர்மல் குமார், "மூடிய படகில் 39 பேர் பயணித்தோம். திடீரென வீசிய அலையால் படகு மூன்றே நிமிடங்களுக்குள் கவிழ்ந்துவிட்டது." என்று கூறினார்.


அதைத் தொடர்ந்து, படகின் முன்புறத்தில் இருந்தவர்கள் முன்புற வழியாகவும், ஜன்னல்கள் வழியாகவும் வெளியே வந்துவிட்டதாகவும், படகின் பின்புறத்தில் இருந்த 15 பேரும் உள்ளே சிக்கி கொண்டதாகவும் நிர்மல் குமார் கூறினார்.


நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சென்றவர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "சாதனை செய்தவர்களுக்காக எங்களது லாவா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா என்றும், அனைவரும் உயிர் காக்கும் கவசங்களை அணிந்து இருந்ததாகவும், மூடப்பட்ட படகு என்பதால், காற்றில் ஆடிய படகு எதிர்பாராமல் கவிழ்ந்துவிட்டது. ஆகையால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என்றும் தெரிவித்தார்.


தனது ஊரான பழனியைச் சேர்ந்த நண்பர் முருகதாஸும் இதில் பலியாகிவிட்டதாக அவர் தெரிவித்தார். எவ்வளவு உடல்கள் அடையாளம் காணப்பட்டன என்பது பற்றிப் பேசிய நிர்மல் குமார், "அனைவரின் உடலும் உடனடியாக மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டன. அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மீட்கப்பட்ட அனைவரும் பத்திரமாக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.


இந்திய தூதரகம் கூறியது என்ன?


வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கூடுதல் தகவல்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். உறுதி செய்யப்பட்டவுடன், மேலதிக தகவல்கள் பகிரப்படும்" என்று தெரிவித்துள்ள இந்திய தூதரகம், அந்த படகில் பயணித்த இந்திய சுற்றுலா பயணிகள் 32 பேரின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது.



பின்னர், உயிரிழந்த 10 பேரின் தகவல்களை உறுதி செய்து தனியாக எக்ஸ் தளப் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர், கேரளாவைச் சேர்ந்த இருவர் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர் என்பது தெரியவந்தது.


வியட்நாம் படகு விபத்து : லாவா நிறுவனம் அறிக்கை



வியட்நாம் படகு விபத்து : லாவா நிறுவனம் அறிக்கை


வியட்நாம் படகு விபத்தில் பாதிக்கப்பட்டோர் தங்களது ஊழியர்கள் என உறுதி செய்து லாவா நிறுவனம் அறிக்கை.


வியட்நாமில் நிகழ்ந்த துயரமான சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தமடைந்துள்ளோம்.


விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிகளை வழங்குவதே எங்களின் முன்னுரிமை.


பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் எங்களது குழுக்கள் தொடர்பில் இருந்து உதவிகளை செய்து வருகின்றன - லாவா நிறுவனம்.


Deaths inside cars – How to prevent them?



கார்களுக்குள் ஏற்படும் உயிரிழப்புகள் - தடுப்பது எப்படி?


சமீப காலமாக பூட்டிய காருக்குள் 

நிகழும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 


சமீபத்தில் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்  காருக்குள் தூங்கிய மருத்துவர் மரணமடைந்திருப்பதும் பெரும்

 துக்கம்


இப்படியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்து 

காருக்குள் நிகழும் மரணங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. 


தற்போதையை காலத்தில் 

மகிழுந்து எனும் கார் வைத்திருப்பது நம்மிடையே அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாம் அனைவரும் 

இது குறித்து விழிப்புணர்வு பெற்றிருப்பது காலத்தின் கட்டாயமாகவும் உயிர்களைக் காக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன் 


பூட்டிய கார்களுக்குள் ஏசி ஆன் செய்து விட்டு உறங்குவதும் ஆபத்து. 


வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தில் அதிக நேரம் நிற்க வந்தால் ஏசி ஆன் செய்திருந்தாலும் பல பேருடன் காருக்குள் இருப்பதும் ஆபத்து 


என்பதை பின்வரும் கட்டுரை ஆய்வுப் பூர்வமாக உங்களுக்கு விளக்கும் என்று நம்புகிறேன். 


பொதுவாக, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளே இவ்வாறு காருக்குள் விளையாடும் போது தெரியாமல் ஆட்டோமேட்டிக் சென்ட்ரல் லாக் ஆகி 

உள்ளேயே அடைபட்டு போய் அதிகமாக மரணிக்கின்றனர். 


அரிதாக பெரியவர்களும் குறிப்பாக அதீத போதையில் இருப்பவர்களும் மரணமடைகிறார்கள். 


இது எதனால் நிகழ்கிறது என்று பார்ப்போம். 


ஒரு சராசரி மனிதனுக்கு 

தினசரி 300 லிட்டர் ஆக்சிஜன் அவன் சுவாசிக்கத் தேவை. 


அதாவது ஒரு மணிநேரத்துக்கு 12.6 லிட்டர் ஆக்சிஜன் எனும் உயிர்வளி கட்டாயத் தேவையாகும். 


இப்போது முற்றிலும் பூட்டப்பட்ட ஜன்னல்கள்  மூடப்பட்ட காருக்குள் 

நான்கு குழந்தைகள் மாட்டிக் கொள்கின்றனர் என்பதைக் கற்பனை செய்வோம்.. 


பூட்டிய காருக்குள் சுமார் 3000 முதல் 4000 லிட்டர் காற்று அடைபட்டிருக்கும்.  

வெளியில் இருந்து காற்று உள்ளே வருவதற்கோ 

உள்ளே இருக்கும் காற்று வெளியே செல்வதற்கோ இயலாது. 


காற்றில் 21% ஆக்சிஜன் கலந்துள்ளது. 

அப்படியென்றால் காருக்குள் இருக்கும்   சுமார் 3500 லிட்டர் அடைபட்ட காற்றில் ,

735 லிட்டர் ஆக்சிஜன் இருக்கும். 


ஒரு குழந்தை ஒரு நிமிடத்திற்கு 

0.25 லிட்டர் ஆக்சிஜனை சுவாசிக்கும் என்றால் நான்கு குழந்தைகளும் ஒரு நிமிடத்திற்கு ஒரு லிட்டர் ஆக்சிஜன் என 

ஒரு மணிநேரத்திற்கு அறுபது லிட்டர் வீதம் 

அடுத்த பனிரெண்டரை மணிநேரம் அவர்கள் நால்வரும்  சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் உள்ளே இருக்கிறது. 


பிறகு ஏன் பூட்டப்பட்ட கார்களுக்குள் சென்ற குழந்தைகள் இரண்டு மூன்று மணிநேரங்களுக்குள் மூர்ச்சையாகி மரணமடைகின்றனர்? 


இதற்குக் காரணம் 

நாம் சுவாசத்தை உள்ளிழுக்கும் போது  

ஆக்சிஜனை வைத்துக் கொண்டு 

 சுவாசத்தை வெளிவிடும் போது 

கரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை மூச்சுக் காற்றில் வெளியேற்றுகிறோம். 


முறையாக ஜன்னல்கள் திறந்திருக்கும் காரில் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வெளியே சென்று, புதிய ஆக்சிஜன் உள்ள காற்று உள்ளே வந்து விடும். 


ஆனால் அடைக்கப்பட்ட காருக்குள் 

கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் வெளியிடும் மூச்சுக் காற்றின் கார்பன் டை ஆக்சைடு அளவுகள்  கூடிக் கொண்டே செல்லும். 


இது தான் உயிரைக் கொல்லும் முக்கிய ஆபத்து. 


ஒரு இடத்தில் நிலவும் காற்றில், கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 1000 பிபிஎம் (PPM) என்பதற்கு கீழ் இருப்பது உகந்தது என்கிறது உலக சுகாதார நிறுவனம். 


சென்ஸ் ஏர் எனப்படும் காருக்குள் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு சென்சார் தயாரிக்கும் நிறுவனம் இது குறித்து பல ஆய்வுகள் செய்துள்ளது. 


கதவுகள், ஜன்னல்கள் பூட்டப்பட்ட காருக்குள் நான்கு மனிதர்கள் ஏசி போட்டுக் கொண்டு பயணம் செய்யும் போது 


1½ நிமிடங்களிலேயே கார்பன் டை ஆக்சைடு - 1000 பிபிஎம் தொட்டு விடுகிறது

5 நிமிடங்களில் - 2500 பிபிஎம் 


(2000 பிபிஎம் தாண்டினாலே 

மயக்கம், தலை சுற்றல், தலைவலி, தூக்கம் வருவது போல் இருப்பது போன்ற அறிகுறிகள் தோன்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.)


22 நிமிடங்களில் - 6000 பிபிஎம் 


இத்தனைக்கும் ஏசியை  வெளிப்புறக் காற்று உள்ளே புகும் மோடில் வைத்துப் பயணிக்கும் போதே இத்தகைய நிலை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 


இதுவே கதவுகள் பூட்டப்பட்டு ஜன்னல்கள் மூடிய எஞ்சின் ஓடாத காருக்குள் நான்கு பேர் இருக்கும் போது 15 நிமிடங்களிலேயே கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 40000 பிபிஎம் தொட்டிருக்கின்றன. 


மற்றொரு ஆய்வில் 

இருவர் சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் காரில் ஏசி போட்டு பயணிக்கும் போது 

பிபிஎம் 1400 என்ற அளவில் உயர்ந்துள்ளது. 

பிறகு இந்த அளவுகள் 1000 க்கு கீழ் குறைவதற்கு அடுத்த நாள் காலை வரை அதாவது பனிரெண்டு மணிநேரங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டுள்ளது. 


இப்போது கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 

கூடக் கூட மனித உடலுக்கு என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம் 


2000-2500 பிபிஎம் வரை

-  சோர்வு 

- கவனச்சிதறல் 

- வேக்காடாக உணர்தல் 


2500-5000 பிபிஎம் 

- தலைவலி

- தலை சுற்றல் 

- உறக்கம் ஏற்படும் நிலை 


5000- 40,000 பிபிஎம் 

- மூச்சுத் திணறல் 

- மூர்ச்சை நிலை

- அதீத கவனக் குறைபாடு 


40,000 க்கு மேல்

- தீவிர மூச்சுத் திணறல் 

- கோமா 

- திடீர் மரணம் ஏற்படுதல் 


இதில் இருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் 

காருக்குள்  அடைபடும் போது காற்றில் இருக்கும் ஆக்சிஜன் நமக்கு பல மணிநேரங்களுப் போதுமானதாக இருந்தாலும் கூட 

நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் - மிகவும் வேகமாக உள்ளே அதன் அடர்த்தி அதிகமாகிக் கொண்டே செல்லும். 


இதனால் நாம் தேவைக்கும் அதிகமாக கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்கத் துவங்குவோம். அதனால் 

நமது உடலில் ஒரே நேரத்தில் 

ஆக்சிஜன் குறைபாடும் ( ஹைப்பாக்சியா) 

கூடவே ஹைப்பர் கேப்னியா ( கார்பன் டை ஆக்சைடு அதிகமாகும்) சூழ்நிலையும் தோன்றும் 


இதனால் உடல் அமிலத்தன்மைக்குச் செல்லும். 

பல உறுப்புகளும் செயலிழக்கும்.  

மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் 

மூர்ச்சை நிலைக்குச் சென்று 

சில நிமிடங்களிலேயே மரணம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. 


இதற்கடுத்தபடியாக 

நிற்கும் காரில் ஏசி போட்டுக் கொண்டு 

அனைத்து ஜன்னல்களையும் அடைத்துக் கொண்டு நீண்ட நேரம்  உறங்குவது சரியா? 


தவறு.. உயிருக்கு ஆபத்தானதும் கூட.. 


அதாவது கார் ஓடும் போதும் கூட 

ஏசியை காற்று உள் சுழற்சி மட்டும் ஆகும் மோடில் வைத்திருந்தால் 

வெளியே இருந்து புதிய காற்று உள்ளே வராது. 


மகிழுந்தை வெளிப்புறத்தில் நிறுத்தி வைத்திருக்கும் போது, 

வெளியில் இருந்து காற்று உள்ளே நுழையும் மோடில் வைத்திருந்தால் பெரிய பிரச்சனை இல்லை. 


 அதுவே கார்களை நிறுத்தும் கீழறைகள் (BASEMENT)  அல்லது சுற்றிலும் அடைக்கப்பட்ட அறை ஆகியவற்றில் காரை நிறுத்தி இஞ்சின் ஆன் செய்து உள்ளே உறங்குவது ஆபத்தானது. 


காரணம் - காருக்குள் செல்லும் காற்றானது, 

அந்தக் காரின் இஞ்சின் வெளியிடும் 

கார்பன்டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு கலந்த காற்றாக இருக்கும். 

தொடர்ந்து இந்த கலப்படமான காற்று காருக்குள் வரும் போது, இயல்பாகவே சுவாசிக்கும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் கூடிவிடும்.  

இது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும். 

அதிலும் குடி போதையில் இருக்கும் போது இதை கவனிக்கும் வாய்ப்பு குறைவு. 

இதனால் மரணம் நிகழும். 


இதைத் தவிர்க்க, 

காருக்குள் தூங்க வேண்டும் என்றால் 

பாதுகாப்பான திறந்த வெளியில் 

ஜன்னல்களை லேசாகத் திறந்து வைத்து விட்டு இஞ்சினை ஆன் செய்யாமல் உறங்குவது சிறந்தது. 


இன்னும் கார் சம்பந்தமான ஏசி இயக்கத்தில் பாதுகாப்புக்காக சில டிப்ஸ்கள் இதோ


ஏசி மோடில் இரண்டு வகை உண்டு


- நாம் சுவாசிக்கும் காற்று உள்ளேயே சுழற்சியில் இருக்கும் மோட் 

- வெளியில் இருந்து சுத்தமான காற்று உள்ளே வரும் மோட். 


காருக்குள் இருவருக்கு  மேல் 

நால்வர் மற்றும் அதற்கு மேல் நபர்கள் பயணிக்கும் போது 


வெளியில் இருந்து சுத்தமான காற்று உள்ளே புகும் ஏசி மோடில் பயணிப்பது நல்லது. இது உங்கள் காருக்குள் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் சரியாக இருப்பதை உறுதி செய்யும். 


நீண்ட நெடிய பயணங்கள் செல்லும் போது அவ்வப்போது கட்டாய ப்ரேக் எடுத்து 

சில நிமிடங்கள் அனைவரும் இறங்கி வெளிக்காற்றைப் பெறுவது கட்டாயமாகிறது 


வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்களில் அதிக நேரம் கார் நிற்க நேருமாயின், ஏசியை ஆஃப் செய்து விட்டு ஜன்னல்களைத் திறந்து கொண்டு நிற்பது நல்லது. காரணம் - நம்மைச் சுற்றி இருக்கும் காற்றில் வாகனங்களின் புகை அதிகமாக இருக்கும். குறிப்பாக நமக்கு முன் நிற்கும் கார்/ பேருந்தின் எக்ஸ் ஹார்ட் டில்லியில் இருந்து வெளிவரும் புகையில் உள்ள கார்பன் டை ஆக்சைடு/ கார்பன் மோனாக்சைடு அதிகம் உள்ள காற்றை நமது காருக்குள் ஏசி உள்ளிழுக்கும். இது நமக்கு ஊறு விளைவிக்கலாம். இது போன்ற சமயங்களில் காற்று உள் சுழற்சி மட்டும் ஆகுமாறு மோட் செட் செய்து கொள்ளவும். 


கட்டாயம் மூடிய காரில் ஏசி போட்டு உறங்கக் கூடாது. அதுவும் மது அருந்தி விட்டு உறங்கவே கூடாது.


பொதுவாக கார்களை நாம் லாக் செய்யும் போது ஜன்னல்களில்  ஒன்றோ இரண்டிலோ குறைந்தபட்சம் ஒரு செண்ட்டிமீட்டர்  இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொண்டால் 

தற்செயலாக விபரீதமாக  குழந்தைகள் உள்ளே சென்று விளையாடி கார் லாக் ஆனால் கூட 

அந்த ஒரு செண்டிமீட்டர் இடைவெளியானது உயிர்களைக் காப்பாற்றக் கூடும். 


நம் குழந்தைகளை கண்காணிப்புடன் வளர்த்து வருவோம்.

 என்றும் 

குழந்தைகள் காணவில்லை எனில் முதலில் சுற்றி இருக்கும் கார்களில் சென்று தேடுவதை வழக்கமாகக் கொள்வோம்.


காரணம் தற்காலக் குழந்தைகள்

கார்களின் சாவிகளை தானே எடுத்துக் கொண்டு அவற்றை சிறிய அழுத்தில் திறந்து உள்ளே சென்று விளையாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அவர்களிடம் கார் சாவி கிடைக்காமல் பார்த்துக் கொள்வதையும் உறுதி செய்யலாம். 


கார் - ஏசி - கார்பன் டை ஆக்சைடு - ஆக்சிஜன் - கார்பன் மோனாக்சைடு  என்று நாம் கற்றுக் கொண்ட இந்த விஷயங்களை நம் வாழ்க்கையில் பின்பற்றுவோம் 


இன்னுயிர்களைக் காப்போம்


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர்

சிவகங்கை


Wayanad Landslide | What is the cause?



வயநாடு நிலச்சரிவு - காரணம் என்ன?


 கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழப்பு; மண்ணில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம்


கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி அருகே உள்ள கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்ற இடத்தில் அண்மையில் மீண்டும் ஒரு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. 


கடந்த 2024-ஆம் ஆண்டு முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளின் சோகம் இன்னும் மறையாத நிலையில், அங்கு பெய்த தொடர் கனமழை காரணமாக இந்த புதிய பேரிடர் நிகழ்ந்தது.


சமீபத்திய நிலச்சரிவு விவரம்

கல்லாடி பகுதியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், சுரங்கப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தொழிலாளர் தங்குமிடங்கள் மற்றும் வாகனங்கள் மண்ணில் புதைந்தன.


பாதிப்புகள்: 

இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் வரை உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.


காரணம்: 

தொடர்ச்சியான கனமழையுடன், சுரங்கப் பணிகளுக்காக மலைப் பகுதியில் அகற்றப்பட்டு மலை போல் தேங்கியிருந்த மண் குவியல்கள் முறையாக அகற்றப்படாததே இந்த நிலச்சரிவுக்குக் காரணம் என்று உள்ளூர் மக்களும், கேரள அரசும் குற்றம் சாட்டுகின்றனர்.


மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கேரள முதல்வர் வி.டி.சதீசன் அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். 


இந்த நிலச்சரிவு விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை இந்த காணொளியில் காணலாம் (அதிர்ச்சியூட்டும் காணொளி - மென்மையான மனம் கொண்டவர்கள் காண வேண்டாம்)




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 


கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு



  கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை என்ற பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. மாலை பள்ளி முடிந்த நிலையில், மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் ஒன்று சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது வேகமாக மோதியது.


கார் மோதிய வேகத்தில் மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்தும், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் மோதி 4 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு.


விபத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 2 மாணவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி.


கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ; 20 மாணவர்கள் படுகாயம்



கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ; 20 மாணவர்கள் படுகாயம்


கரூர் மாவட்டம் வெள்ளியணைக்கு அருகில், நேற்று மாலை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த கல்லூரி பேருந்து ஒன்று ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக பேருந்து தண்டவாளத்தில் பழுதாகி நின்றபோது, சரக்கு ரயில் பேருந்தின் மீது மோதியதில் 18 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த விவரம் பின்வருமாறு;



கரூர் மாவட்டம் க‌.பரமத்தியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், நேற்று கல்லூரி பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஓட்டுனர் பெரியசாமி கல்லூரிப் பேருந்தை ஓட்டி வந்தார். ஜல்லிப்பட்டி பகுதியில் உள்ள ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது வந்த சரக்கு ரயில் , பேருந்தின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 18-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. பலருக்கு கை, கால் மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




விபத்து நடந்ததும், அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காயமடைந்த மாணவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்டதா அல்லது எதிர்பாராத விதமாக நடந்ததா என்பது குறித்து போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.




18 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


முதல் கட்ட விசாரணையில், சரக்கு ரயில் திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலி பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து சிமெண்ட் தயாரிக்கும் பவுடர் ஏற்றிக் கொண்டு, புலியூர் சிமெண்ட் ஆலைக்கு சென்று கொண்டிருந்தது.



குளத்தூர் பகுதி லெவல் கிராசிங் பகுதியில் ஆட்கள் இல்லாததால், பேருந்து அந்த லெவல் கிராசிங்கை கடந்துள்ளது. அப்போது ரயில் வருவதைக் கண்டு பீதியடைந்த மாணவர்கள், பஸ்ஸில் இருந்து அவசர அவசரமாக இறங்க முயன்றனர். அதற்குள் ரயில், பஸ் மீது மோதிவிட்டது. இதில், கல்லூரி பஸ் பலத்த சேதமடைந்தது. மேலும், அதில் இருந்த மாணவர்கள் 18 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள மாணவர்களை நேரில் சந்தித்து ஜோதிமணி எம்.பி. நலம் விசாரித்தார்.




பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டர் அழுத்திய மனைவி – தெப்பக்குளத்தில் பாய்ந்த கார்

 


மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்த கணவன்


பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டர் அழுத்திய மனைவி – தெப்பக்குளத்தில் பாய்ந்த கார்


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கல்லல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஜனவரி 31, 2026 அன்று தனது பிள்ளைகளை காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்று இறக்கி விட்டுள்ளார்.


 பின்னர், மனைவியுடன் வீட்டுக்கு திரும்பும் வழியில், தனக்கு கார் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என அவரது மனைவி ஆசை தெரிவித்துள்ளார்.


மனைவியின் விருப்பத்தை ஏற்று, அவர் கல்லல் தெப்பக்குளம் அருகே காரை நிறுத்தி, அவளுக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுக்கத் தொடங்கியுள்ளார்.


திடீர் தவறு… கட்டுப்பாட்டை இழந்த கார்

அவரது வழிகாட்டுதலுடன் கார் ஓட்டப் பழகிக் கொண்டிருந்த அவரது மனைவி, பிரேக் பிடிப்பதற்குப் பதிலாக தவறுதலாக ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையிலிருந்து கோயில் தெப்பக்குளத்தின் படித்துறை வழியாக நேராக தண்ணீருக்குள் பாய்ந்தது.


அப்போது தெப்பக்குளத்தில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால், கார் மெதுவாக மூழ்கத் தொடங்கியுள்ளது.


பொதுமக்கள் அதிர்ச்சி – தம்பதி உயிர் தப்பினர்

கார் தெப்பக்குளத்தில் விழுந்து மூழ்குவதை கண்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். காருக்குள் கணவன்–மனைவி இருப்பதை அறிந்த அவர்கள் உதவ முயன்றனர்.


இதற்கிடையில், நிலைமையை உணர்ந்த கணவன் மற்றும் மனைவி உடனடியாக காரின் கதவை திறந்து வெளியேறினர். இதனால் இருவரும் எந்தவித காயமும் இன்றி பாதுகாப்பாக உயிர் தப்பினர்.


தீயணைப்பு துறையினர் கார் மீட்பு

தம்பதி வெளியேறிய பின்னர், கார் தெப்பக்குளத்தின் மையப்பகுதிக்கு சென்று முழுவதுமாக மூழ்கியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.


மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்தபோது ஏற்பட்ட இந்த விபத்து, கல்லல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாதுகாப்பான பயணத்திற்கான ஆலோசனைகள்

 மதுரையில் பேருந்து, கார் இரண்டும் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து - பாதுகாப்பான பயணத்திற்கான ஆலோசனைகள்


மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்டபுலி நகர் பகுதியில்  நிகழ்ந்த சாலை விபத்து நம் அனைவரையும் மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்துகிறது. ஒருவருக்கொருவர் முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட இந்தத் தற்செயலான விபத்தில்  பேருந்து மற்றும் கார் இரண்டும் பலத்த சேதம் அடைந்துள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற விழைகிறோம்.


​ஒரே பகுதியில் அடுத்தடுத்து விபத்துகள் நடப்பது என்பது சாலை வடிவமைப்பு அல்லது வாகனங்களை கையாளும் விதம் குறித்த கூடுதல் கவனத்தைத் தூண்டுகிறது. 


​💡 பாதுகாப்பான பயணத்திற்கான ஆலோசனைகள்:


​கவனம் அவசியம்: நெடுஞ்சாலைகளில் மற்ற வாகனங்களை முந்திச் செல்லும்போது (Overtaking) அதிகப்படியான பொறுமையும், சரியான கணிப்பும் விபத்துகளைத் தவிர்க்கும்.

​வேகக் கட்டுப்பாடு: வளைவுகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வேகத்தைக் குறைத்துச் செல்வது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை அதிகரிக்க உதவும்.


​ஒத்துழைப்பு: அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் தனியார் வாகன ஓட்டிகள் ஒருவருக்கொருவர் சாலை விதிகளை மதித்துச் செயல்படுவதே பயணத்தை இனிதாக்கும்.


​சாலைப் பராமரிப்பு: இந்தப் பகுதியில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, விபத்துகளைத் தடுக்கத் தேவையான எச்சரைப் பலகைகள் அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வது சாலையோரப் பயணிகளுக்கு நம்பிக்கையளிக்கும்.


​அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், நமது சாலைகளை விபத்தில்லாச் சாலைகளாக மாற்ற முடியும்! 🙏





>>> Great Republic Day Sale 2026 Offer...



ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணி உயிரிழப்பு

 


ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணி உயிரிழப்பு


ஆந்திரா: அனகப்பள்ளி பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணி ஒருவர் உயிரிழப்பு.


அனகப்பள்ளி - எலமஞ்சிலி அருகே டாடா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.


டாடா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழப்பு.



>>> தீ விபத்து - காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




ஆந்திராவின் டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஏ.சி. பெட்டிகளில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஆந்திர மாநிலம் டாடா நகரில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் நோக்கி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (18189), நேற்று மாலை புறப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 12.45 மணியளவில் ரயில் எலமஞ்சிலி ரயில் நிலையம் அருகே வந்த போது, ஏசி பெட்டி ஒன்றில் கரும்புகை பரவியுள்ளது.


அப்போது பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் இதை யாரும் கவனிக்கவில்லை. சில பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, கண் விழித்த பயணிகள் பெட்டி முழுவதும் புகை மண்டலமாக மாறியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.


அவர்கள் சுதாரிப்பதற்குள்ளாக ரயில்பெட்டி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. தீயை பார்த்த பயணிகள் பயத்தில் அலறினர். பின்னர் இதுகுறித்து தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


ஆனால், அதற்குள்ளாக ரயிலின் B2 மற்றும் M 1 பெட்டிகள் தீயில் முழுவதுமாக கருகி உருக்குலைந்தன. பின்னர் உள்ளே சென்ற தீயணைப்பு படை வீரர்கள், அங்கிருந்த பயணிகளை மீட்டனர். எனினும், சந்திரசேகரன் சுந்தரம் என்ற ஒரு பயணி மட்டும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மற்றபடி, யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, அந்த இரண்டு பெட்டிகளும் ரயிலில் இருந்து விடுவிக்கப்பட்டு, ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.


தீ விபத்துக்குள்ளான பெட்டிகளில் இருந்த பயணிகள் அவர்கள் செல்லும் இடங்களுக்கு மாற்று ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவர் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்நிலையில், இந்த தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களை கண்டறிய இரண்டு தடயவியல் குழுக்களை தெற்கு ரயில்வே நியமித்துள்ளது.


உறவினர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்:


எலமஞ்சிலி - 7815909386


அனகபள்ளி - 7569305669


டூனி - 7815909479


சாமல்கோட் - 7382629990


ராஜமுந்திரி - 088 - 32420541; 088 - 32420543


எளூரு - 7569305268


விஜயவாடா - 0866 - 2575167




Tata Simply Better Pure and Unrefined Cold Pressed Groundnut (Peanut) Oil, Kolhu/Kacchi Ghani/Mara Chekku/Ganuga, Naturally Cholesterol Free, 5L, With Rich Aroma & Flavour of Real A1 Grade Groundnuts


https://amzn.to/4qs8X4D




ஆற்றுப் பாலத்தில் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு




ஆற்றுப் பாலத்தில் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு


 பீகாரில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஜமுய் மாவட்டத்தின் பருவா ஆற்றுப் பாலத்தில் தடம் புரண்டதால் பரபரப்பு


பீகாரில் ஆறுகளின் மீது கட்டப்பட்ட ரயில் பாலங்கள் ரயில் விபத்துகளின் வரலாற்றைக் கொண்டுள்ளன. தெல்வா பஜார் ஹால்ட் அருகே ஒரு சரக்கு ரயில் வேகன் படுவா ஆற்றில் விழுந்த சமீபத்திய சம்பவம், கடந்த கால துயர விபத்துகளின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளது. 


தற்செயலாக, இந்த முறை அது ஒரு பயணிகள் ரயில் அல்ல, மாறாக சிமென்ட் ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில். சில வேகன்கள் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்து ஒரு பயணிகள் ரயிலில் நடந்திருந்தால், பெரும் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாததாக இருந்திருக்கும். 


முன்னதாக, பீகாரில் ரயில் பாலங்களில் ஏற்பட்ட விபத்துகள் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. சரியாக 44 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 6, 1981 அன்று, ககாரியா மாவட்டத்தில் உள்ள தாமாரா காட் பாலத்தில் ஒரு பயங்கரமான விபத்து ஏற்பட்டது. பலத்த புயல் மற்றும் பலத்த மழைக்கு மத்தியில், பயணிகளுடன் நிரம்பிய ஒரு பயணிகள் ரயில் பாலத்திலிருந்து தவறி விழுந்து ஆற்றில் விழுந்தது. அதில் இருந்த கிட்டத்தட்ட அனைத்து பயணிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்னும் பீகாரின் மிகவும் கொடூரமான ரயில் விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 


இதேபோன்ற ஒரு பெரிய சம்பவம் 2002 ஆம் ஆண்டு அவுரங்காபாத் மாவட்டத்தில் நிகழ்ந்தது. ஹவுராவிலிருந்து புது தில்லிக்குச் சென்ற ராஜதானி எக்ஸ்பிரஸின் 13 பெட்டிகள் தாவா ஆற்றின் மீது இருந்த பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 200 பயணிகள் இறந்தனர். இந்த சம்பவம் ரயில் பாதுகாப்பு குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. 


இந்நிலையில், சனிக்கிழமை இரவு பாட்னா-ஹவுரா ரயில் பாதையில் தெல்வா பஜார் அருகே ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டது. படுவா நதி பாலம் அருகே வேகன்கள் தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக, பயணிகள் யாரும் காயமடையவில்லை. இருப்பினும், இந்த விபத்து ரயில்வே கட்டமைப்பு பாதுகாப்பு, பாலத்தின் வலிமை மற்றும் வழக்கமான ஆய்வுகள் குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.



இந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.. 

இப்போது மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்த சம்பவம் பாலத்திற்கு அருகில் எப்படி நடந்தது, அதற்கான காரணங்கள் என்ன என்பதுதான். தண்டவாளத்தில் தொழில்நுட்பக் கோளாறா அல்லது பாலத்தின் கட்டமைப்பில் ஏதேனும் பலவீனமா? இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே உத்தரவிட்டுள்ளது. 


விசாரணை அறிக்கை வெளியான பின்னரே விபத்துக்கான உண்மையான காரணங்கள் தெரியவரும். இப்போதைக்கு, எதிர்காலத்தில் பெரிய விபத்துகளைத் தவிர்க்க ரயில் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம் என்பதை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.



Facial Hair Remover Machine for Women - Face, Chin, Cheek, Eyebrow, Upper Lip Hair Remover, USB RECHARGEABLE Epilator Machine (White)


https://amzn.to/49d1sHU




அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு



அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு 



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




👆🏻 அதிர்ச்சியளிக்கும் காட்சிகள். இளகிய மனம் கொண்டவர்கள் காண வேண்டாம் 



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 11 பேர் பலி 


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 30-11-2025 மாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்தில், இரண்டு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். 


முதற்கட்ட தகவல்களின்படி, நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, பலத்த காயமடைந்த மேலும் ஏழு பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர். 


இறந்த 11 பேரில், நான்கு பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், நான்கு உடல்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கும், மூன்று உடல்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டுள்ளன. 


விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் தற்போது சிவகங்கை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்கள் அவர்களின் நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். 


108 அவசர சேவையிலிருந்து 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன, காயமடைந்தவர்கள் சிவகங்கை, காரைக்குடி மற்றும் திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயமடைந்தவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் விவரங்களைப் பெற்றார். மீட்பு மற்றும் மருத்துவ நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


விபத்து நடந்த இடத்திலும் மருத்துவமனைகளிலும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறை அதிகாரிகளும் இணைந்து தீவிர மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தார், காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி சம்பவ இடத்தையும் மருத்துவமனைகளையும் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தார். 


இதற்கிடையில், விபத்து தொடர்பான தகவல்களை வழங்க 04575-246233 என்ற அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


Head-on collision between government buses near Tirupattur in Sivagangai district: 11 killed


In a tragic road accident that occurred early this morning near Tiruppathur in Sivagangai district, 11 people lost their lives after two State Transport Corporation buses collided head-on.


According to initial reports, four people died on the spot. Subsequently, seven more victims who had sustained serious injuries succumbed while undergoing treatment in hospitals.


Of the 11 deceased, the bodies of four women have been sent to the Sivagangai Government Hospital for post-mortem examination, four bodies to the Karaikudi Government Hospital, and three bodies to the Tirupattur Government Hospital.


Five persons who sustained critical injuries in the accident are currently undergoing intensive treatment at the Sivagangai Government Hospital. Doctors are closely monitoring their condition.


 More than 10 ambulances from the 108 emergency service were pressed into service, and the injured were rushed to government hospitals in Sivagangai, Karaikudi, and Tiruppathur.


Sivagangai District Collector visited the Tirupattur Government Hospital in person, met the injured, consoled them, and obtained details from doctors regarding the treatment being provided. He also directed officials to expedite rescue and medical operations.


District administration and police officials are jointly carrying out intensive rescue and relief measures at both the accident site and the hospitals. Sivagangai Superintendent of Police Siva Prasad inspected the accident spot, while Karaikudi MLA Mangudi visited both the site and hospitals to review the situation.


Meanwhile, an emergency helpline number 04575-246233 has been announced to provide information related to the accident. Relatives of the victims have been advised to contact this number for further details, according to the Sivagangai District Police.


 


>>> Best SmartWatches குறித்த தகவல்கள்... 


இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர், மின்சாரக் கம்பியில் சிக்கி உயிரிழப்பு



இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர், மின்சாரக் கம்பியில் சிக்கி  உயிரிழப்பு


இளகிய மனம் கொண்டவர்கள் புகைப்படத்தை பார்ப்பதை தவிர்த்து விடவும்


அதி வேகமாக செல்லும் பைக் வாங்கி தரும் பெற்றோர்களே இதை பார்த்துவிட்டு வாங்கி கொடுங்கள்.


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்று எதிரே வந்த காரின் மீது மோதியதில் அந்தரத்தில் பறந்த வாலிபர், மின்சாரக் கம்பியில் சிக்கி தொங்கியபடி உயிரிழப்பு.





 


>>> Best SmartWatches குறித்த தகவல்கள்... 


அரியலூர் அருகே சிலிண்டர் வாகனம் வெடித்து விபத்து - போக்குவரத்துக்கு தடை



அரியலூர் அருகே சிலிண்டர் வாகனம் வெடித்து விபத்து - போக்குவரத்துக்கு தடை


பொதுமக்கள் கவனத்திற்கு


அரியலூர் அருகே சிலிண்டர் வெடி விபத்து காரணமாக - திருச்சி தஞ்சை மாவட்டங்களுக்கு  செல்லும் பேருந்துகள் நிறுத்தம் - போக்குவரத்துக்கு தடை


அரியலூர் To கீழப்பளூர்  வழியாக திருச்சி தஞ்சை மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்கும் தடை



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 





அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே சிலிண்டர் லாரி தீப்பிடித்து எரிந்து விபத்து



சிலிண்டர்கள் லாரியில் இருந்து வெடித்து சிதறியதன் சத்தம் பல கிலோமீட்டர் தொலைவிற்கு கேட்டுள்ளது



>>> காணொளி 2




Milton Aura 1000 Thermosteel Bottle, 1 Litre, Dark Blue | 24 Hours Hot and Cold | Easy to Carry | Rust & Leak Proof | Tea | Coffee | Office| Gym | Home | Kitchen | Hiking | Trekking | Travel Bottle




Amazon வலைதள முகவரி இணைப்பு:


https://amzn.to/3LyO48X


கார்களின் முன்சீட்டில் சிறுவர்களை அமர வைப்பதன் ஆபத்து

 


கார்களின் முன்சீட்டில்  சிறுவர்களை அமர வைப்பதன் ஆபத்து


கார்களின் முன்சீட்டில் எப்போதும் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை உட்கார வைக்க கூடாது. இதை கார் உற்பத்தியாளர்களே அந்த manual-களில் எச்சரிக்கையாக சொல்லியிருப்பார்கள்.


கார்கள் விபத்துக்குள்ளானால் காற்று பைகள் (airbags) ஒரு வெடிப்பு போல் தீவிர வேகத்துடன், அதாவது கிட்டத்தட்ட 250-300km/h வேகத்தில் வெளிப்படும்.


இந்த வேகத்தை இளம் வயதினர்களின் தலை மற்றும் நெஞ்சுப்பகுதி தாங்கிக் கொள்ளும். ஆனால், 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் தலை மற்றும் மார்பு தாங்காது. இந்த வேகத்தில் அடிக்கும்போது சிறுவர்களுக்கு பலத்த உள்காயங்களை உண்டாக்கி இப்படி மரணத்தை ஏற்படுத்தி விடும்.


பொதுவாக, காற்றுப் பைகள் டேஸ்போர்ட்டுக்குள் பல மடிப்புகளாக மடித்து வைக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு முனையில் சிறிய அளவிலான வெடியை உண்டாக்கும் வேதிக்கலவைகள் வைக்கப்பட்டிருக்கும்.



கார் விபத்துக்குள்ளானதும் சென்ஸார்கள் மூலம் கண நேரத்தில் இங்கே வெடிப்பு ஏற்பட்டு அந்த வேதிக்கலவைகள் எல்லாம் நைட்ரஜன் வாயுவாக மி.வினாடி நேரத்தில் மடிப்புகளுக்குள் நிரம்பி வெடித்து பெரிய பலூனாக வெளியே தள்ளப்படும். 


நன்கு வளர்ந்த நபர் இந்த வேகத்தை தாங்கிக்கொள்வார். சில வினாடிகளில் அந்த காற்றுப் பையில் உள்ள நுண்ணிய துளைகள் வழியாக வாயு வெளியேறும்போது காற்றுப்பை சிறிது ரிலாக்ஸ் ஆகும். இதனால், முன்னிருக்கையில் உள்ள நபர்களால் சுவாசிக்க முடியும்.



சுமார் 300km/h வேகத்தில் வெளிப்படும் காற்றுப்பையை இந்த 7 வயது சிறுவனின் தலை மற்றும் மார்பு எப்படி தாங்கும்...? 


முன் இருக்கையில் குழந்தைகளை அமர வைக்கும்போது காற்றுப்பைகள் செயல்படாதவாறு மேனுவலாக செயலிழக்க செய்யலாம். ஆனால், சாதாரண விபத்துக்களில் மட்டுமே இது பாதுகாப்பாக இருக்கும். மோசமான விபத்துகளில் எது வேண்டுமானாலும் நிகழலாம்.



எனவே, இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களை முன் சீட்டில் அமர வைப்பதை தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற விபத்துக்கள் மிக அரிது என்றாலும், எச்சரிக்கையாக இருப்பது நல்லது தானே!!






Indulekha Bringha, Ayurvedic Hair Oil, 250ml+250ml, for Hair Fall Control, with Amla & Coconut Oil, with Comb Applicator (Pack of 2)

Offer Price: Rs.778


Bundle List Price: ₹1,998

Combo Price: ₹778

You Save: ₹1,220 (61%) 


Amazon வலைதள முகவரி இணைப்பு : 

https://amzn.to/47c2PH6


தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வருவாய் ஈட்டும் பெற்றோர் விபத்தில் இறந்தால் வழங்கப்படும் ₹75,000 பெற, விண்ணப்பிக்கும் வழிமுறைகள்



வருவாய் ஈட்டும் தாய் / தந்தை விபத்தில் இறந்தால் வழங்கப்படும் ₹75,000 பெற, விண்ணப்பிக்கும் வழிமுறைகள், விண்ணப்பப் படிவம் & சரிபார்ப்புப் பட்டியல் : வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள் : 08-10-2025


Application Forms, Checklist & Procedures for applying for ₹75,000 in case of death of earning mother/ father in an accident: Proceedings of Vellore District Chief Education Officer, Date: 08-10-2025



மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் / தந்தை விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ வழங்கப்படும் ₹75,000/-க்கான விபத்துக் காப்பீடு பத்திரம் பெற, விண்ணப்பிக்கும் வழிமுறைகள், விண்ணப்பப் படிவம் & சரிபார்ப்புப் பட்டியல் குறித்து வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


எண்ணூர் BHEL நிறுவன விபத்தில் 9 அசாம் தொழிலாளர்கள் உயிரிழப்பு : தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

 


எண்ணூர் BHEL நிறுவன விபத்தில் 9 அசாம் தொழிலாளர்கள் உயிரிழப்பு : தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்


 மத்திய அரசின் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டுவரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமான பணியில் ஏற்பட்ட விபத்தில் அசாமைச் சேர்ந்த 9 பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.


உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீட்டை வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்லவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.


எண்ணூரில் #BHEL நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மாண்புமிகு மின்துறை அமைச்சர் திரு. @Sivasankar1ss அவர்களையும், @TANGEDCO_Offcl தலைவர் திரு. @Rakri1 அவர்களையும் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.


உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 இலட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-09-2026

      பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்