கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Insurance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Insurance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

குழுக் காப்பீட்டுத் திட்டம் – தீர்வு – காலதாமத்தினால் குழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை பெறப்படாமை – சிறப்பு நிகழ்வாக குழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை வழங்குதல் – தொகை பெறப்படாமல் இருப்பின் LIC யில் கோரி ரூ.3இலட்சம் அல்லது அதற்கு குறைவான தொகையைப் பெற்றுக் கொள்ளுதல் - பள்ளிக்கல்வி இயக்கக நிதி கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் மற்றும் கருவூல கணக்குத் துறை ஆணையரின் கடிதம் ந.க.எண் : 20898/ 2023/ K2, நாள்: 20-07-2023 (Group Insurance Scheme - Settlement of time barred claims under Group Insurance Scheme - Provided a one time provision as a special case to settle the time barred death claims - requested to send claims for Rs.3 lakh or less to LIC - Regarding - LIC of India Letter, Dated: 21-06-2023 – Proceedings of Financial Control Officer, Directorate of School Education and Letter from Commissioner of Treasuries and Accounts Department Rc.No.: 20898/ 2023/ K2, Dated: 20-07-2023)...



>>> குழுக் காப்பீட்டுத் திட்டம் – தீர்வு – காலதாமத்தினால் குழு காப்பீட்டுத்  திட்டத்தில் தொகை பெறப்படாமை – சிறப்பு நிகழ்வாக குழு  காப்பீட்டுத் திட்டத்தில் தொகை வழங்குதல் – தொகை பெறப்படாமல் இருப்பின் LIC யில் கோரி ரூ.3இலட்சம் அல்லது அதற்கு குறைவான தொகையைப் பெற்றுக் கொள்ளுதல் - பள்ளிக்கல்வி இயக்கக நிதி கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் மற்றும் கருவூல கணக்குத் துறை ஆணையரின் கடிதம் ந.க.எண் : 20898/ 2023/ K2, நாள்: 20-07-2023 (Group Insurance Scheme - Settlement of time barred claims under Group Insurance Scheme - Provided a one time provision as a special case to settle the time barred death claims - requested to send claims for Rs.3 lakh or less to LIC - Regarding - LIC of India Letter, Dated: 21-06-2023 – Proceedings of Financial Control Officer, Directorate of School Education and Letter from Commissioner of Treasuries and Accounts Department Rc.No.: 20898/ 2023/ K2, Dated: 20-07-2023)...



ரயில் பயணம் - 35 பைசாவில் ரூ.10 இலட்சம் விபத்து காப்பீடு குறித்த தகவல்கள் (Train Travel - Rs.10 Lakh Accident Insurance at 35 Paisa - Details)...





ரயில் பயணம் - 35 பைசாவில் ரூ.10 இலட்சம் விபத்து காப்பீடு குறித்த தகவல்கள் (Train Travel - Rs.10 Lakh Accident Insurance at 35 Paisa - Details)...


 ஒடிசா இரயில் விபத்துக்கு பிறகு, பயணச் சீட்டுடன் பலரும் 35 பைசா விபத்து காப்பீடு குறித்து விழிப்புணர்வு பதிவு இட்டு வருகிறார்கள். அதில் இன்னும் ஒரு விஷயத்தை அதிகப்படியாக சேர்த்து கொண்டால், இழப்பீடு பெறுவது எளிதாக இருக்கும்.


இரயில் பயணம் செய்ய ஆன்லைன் புக்கிங் செய்யும் போது, விபத்து காப்பீடாக 0.35 பைசா கட்டிய பின்னர்  உங்கள் ஆன்லைன் டிக்கெட் காப்பி உங்கள் இ-மெயிலுக்கு வருமல்லவா, அதை அடுத்து நீங்கள் எடுத்த அந்த இன்சூரன்ஸ் சம்பந்தமாக HAT என்று ஒரு தனி இ-மெயிலும் உங்கள் இன்பாக்ஸுக்கு வரும். 


பின்னர் அதனுள் சென்று உங்கள் பிஎன்ஆர் நம்பர் மற்றும் உங்கள் மொபைல் நம்பரை இட்டால், அடுத்ததாக ஒரு திரை விரியும். அதில் உங்கள் இன்சூரன்ஸ்க்கான நாமினியை பதிவு செய்து முடித்து வைத்தால்தான் அந்த இன்சூரன்ஸ் முழுமை பெறும். 


எனவே முப்பத்தைந்து பைசா கட்டுவதுடன் கையோடு நாமினியாக குடும்ப உறுப்பினர்கள் யாரையாவது பதிந்தும் வைத்து விடுங்கள்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (NHIS) - செலவழிக்கப்பட்ட தொகையை மீளக் கோரும் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பட்டியல் & காப்பீட்டு நிறுவன முகவரி(List of documents to be attached with applications claiming reimbursement of amount spent & Insurance Company Address)...




>>> புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (NHIS) - செலவழிக்கப்பட்ட தொகையை மீளக் கோரும் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பட்டியல் & காப்பீட்டு நிறுவன முகவரி(List of documents to be attached with applications claiming reimbursement of amount spent & Insurance Company Address)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு - அரசாணை (நிலை) எண் : 17, பள்ளிக்கல்வித் துறை, நாள்: 07-02-2018 - வெளியீடு (Accident Insurance for School Students - G.O. (Ms) No : 17, Department of School Education, Dated: 07-02-2018 - Issued)...



>>> பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு - அரசாணை (நிலை) எண் : 17, பள்ளிக்கல்வித் துறை,  நாள்: 07-02-2018 -  வெளியீடு (Accident Insurance for School Students - G.O. (Ms) No : 17, Department of School Education, Dated: 07-02-2018 - Issued)...




https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

பள்ளிக்‌ கல்வி - அரசு/ அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ / மாணவியர்கள்‌ எதிர்பாராத விபத்துக்களினால்‌ இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள்‌ ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும்‌ மாணவ / மாணவியர்களின்‌ குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல்‌ - ஆணை வெளியிடப்படுகிறது.


பள்ளிக்‌ கல்வித்‌ ப௧5(2) துறை,  அரசாணை (நிலை) எண்‌. 17 நாள்‌: 07.02.2018. (திருவள்ளுவராண்டு 2049 தை 25)


படிக்கப்பட்டவை:-

பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ கடித ந.க.எண்‌.019344/எம்‌/இ2/2017, நாள்‌ 08.05.2017.


ஆணை:

மேலே படிக்கப்பட்ட கடிதத்தில்‌, 2016-17ஆம்‌ கல்வியாண்டில்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கட்டுப்பாட்டின் கீழ்‌ தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ என மொத்தம்‌ 37,201 அரசுப்‌ பள்ளிகளும்‌ மற்றும்‌ தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ என மொத்தம்‌ 8,402 அரசு உதவி பெறும்‌ பள்ளிகளும்‌, ஆக மொத்தம்‌ 45,603 பள்ளிகள்‌ செயல்படுகின்றன எனவும்‌, மேற்படி அரசுப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை 55,73,217 மாணாக்கர்களும்‌, அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில் ‌29,51,084 மாணாக்கர்களும்‌ பயின்று வருகின்றனர்‌ எனவும்‌, தமிழகத்தில்‌ உள்ள பள்ளி மாணவர்கள்‌ தரமான கல்வி பயில்வதற்கும்‌, மாணவர்களின்‌ பாதுகாப்பு மற்றும்‌ நலன்களை உறுதிப்படுத்திடவும்‌ தமிழக அரசின்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது எனவும்‌, பள்ளி மாணவர்கள்‌ வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும்‌ போதும்,‌ பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பச்‌ செல்லும்‌ போதும்‌, உரிய பாதுகாப்புடன்‌ சென்றுவரும்‌ பொருட்டு, பள்ளிக்‌ கல்வி இயக்ககத்திலிருந்து அவ்வப்போது அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலகங்களுக்கும்‌ சுற்றறிக்கைகள்‌ அனுப்பப்பட்டு வருகின்றன எனவும்‌, இருப்பினும்‌ இடைப்பட்ட பள்ளி நேரத்தில்‌ கீழ்க்காணும்‌ எதிர்பாராத விபத்துக்களினால்‌ பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு பலத்த காயங்கள்‌ அல்லது உயிர்‌ சேதம்‌ ஏற்படுகிறது எனவும்‌ தெரிவித்துள்ளார்‌ :-


💥 மாணவர்கள்‌ பள்ளிக்கு வந்து செல்லும்‌ போது ஏற்படும்‌ விபத்து.


💥 கல்விச்‌ சுற்றுலா செல்லும்‌ போது ஏற்படும்‌ விபத்து.

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

💥  நாட்டு நலப்பணித்‌ திட்டம்‌, தேசிய மாணவர்‌ படை, ஜுனியர்‌ ரெட்‌ கிராஸ்‌, பாரத சாரண / சாரணிய இயக்கம்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ மன்றங்கள்‌ மூலமாக நடைபெறும்‌ முகாம்‌ மற்றும்‌ பேரணிகளில்‌ கலந்து கொள்ளும்‌ போது ஏற்படும்‌ விபத்து.


💥 விளையாட்டு போட்டிகளில்‌ கலந்து கொள்ளும்போது ஏற்படும்‌ விபத்து.


💥 மின்கசிவு மற்றும்‌ ஆய்வகங்களில்‌ ஏற்படும்‌ விபத்து.

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

💥 விஷஜந்துக்களால்‌ ஏற்படும்‌ விபத்து.


💥 மாணவர்கள்‌ விடுமுறை நாள்களில்‌ வெளியே செல்லும்‌ போது நீர்நிலைகளால்‌ ஏற்படும்‌ விபத்து போன்றவை.

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

2) மேற்காணும்‌ சூழ்நிலையில்‌ தவிர்க்க முடியாமல்‌ மாணவ / மாணவியருக்கு விபத்துகள்‌ ஏற்பட்டு பாதிப்பு உண்டாகிறது எனவும்‌, இதனால்‌ குழந்தையை இழந்து பெற்றோர்கள்‌ மிகவும்‌ வேதனை அடைகின்றனர்‌ எனவும்‌, எனவே குழந்தையை இழந்து வாழும்‌ குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டியது அவசியமாகிறது எனவும்‌, இத்தகைய நிகழ்வுகளின்‌ போது பாதிப்பு அடையும்‌ மாணவ / மாணவியர்களுக்கும்‌ அல்லது உயிர்சேதம்‌ ஏற்படின்‌ அவர்களின்‌ குடும்பத்திற்கும்‌ உதவித்‌ தொகை வழங்குவது அவர்களுக்கு மிகவும்‌ பயனுள்ளதாக அமையுமென்பதால்‌, விபத்தில்‌ காயம்‌ அடையும்‌ அல்லது மரணமடையும்‌ பள்ளி மாணவர்களுக்கு பின்வருமாறு நிவாரணத்‌ தொகை நிர்ணயம்‌ செய்து மாணவ / மாணவியர்களின்‌ பெற்றோர்களுக்கும்‌ / பாதுகாவலர்களுக்கும்‌ அரசிடம்‌ பெற்று பள்ளிக்‌ கல்வி துறையின்‌ மூலம்‌ நிவாரணம்‌ வழங்கிட ஆணை வழங்குமாறு பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ அரசைக்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌:-

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

வ.                   விபத்தின்‌ தன்மை           இழப்பீடு

எண்‌


1)  விபத்தில்‌ மரணமடைந்த மாணவர்களுக்கு ரூ.1,00,000/-

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

2) விபத்தில்‌ பலத்த காயம்‌ அடைந்த மாணவர்களுக்கு  ரூ.50,000/-

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

3) விபத்தில்‌ சிறிய காயம்‌ அடைந்த மாணவர்களுக்கு ரூ.25,000/-

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

3. பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ கருத்துருவினை அரசு கவனமுடன்‌ பரிசீலனை செய்து அதனை ஏற்று, அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ / மாணவியர்கள்‌ எதிர்பாராத விபத்துக்களினால்‌ இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள்‌ ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும்‌ மாணவ / மாணவியர்களின்‌ குடும்பத்தினருக்கு நிவாரணத்‌ தொகை நிர்ணயம்‌ செய்து உயிரிழந்த / காயம்‌ அடைந்த மாணவர்களின்‌ பெற்றோர்கள்‌ / பாதுகாவலர்களுக்கு கீழ்க்கண்டவாறு நிவாரணத்‌ தொகை வழங்கலாம்‌ என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது :-

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html


(I) அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ / மாணவியர்கள்‌ எதிர்பாராத விபத்துக்களினால்‌ மரணம்‌ அடைந்தால்‌ ரூ.1,00,000/-ம்‌ (ரூபாய்‌ ஒரு இலட்சம்‌ மட்டும்‌), பலத்த காயமடைந்தால்‌ ரூ.50,000/-ம்‌ (ரூபாய்‌ ஐம்பதாயிரம்‌ மட்டும்‌ மற்றும்‌ சிறிய காயம்‌ அடைந்தால்‌ ரூ.25,000/-ம்‌ (ரூபாய்‌ இருபத்தைந்தாயிரம்‌ மட்டும்‌) என உயிரிழந்த / காயம்‌ அடைந்த மாணவர்களுடைய பெற்றோர்கள்‌ / பாதுகாவலர்களுக்கு நிவாரணத்‌ தொகை பள்ளிக்‌ கல்வித்‌ துறை மூலம்‌ வழங்கப்பட வேண்டும்‌.

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

॥) மாணவ / மாணவியர்களுக்கு, பள்ளிகளிலும்‌ / பள்ளி செல்லும்‌ போதும்‌ / சுற்றுலா செல்லும்‌ போதும்‌ / பள்ளியின்‌ செயல்பாடுகளின்‌ போதும்‌ / எதிர்பாராத விதமாக, விபத்துக்களினால்‌ மரணம்‌ / காயம்‌ ஏற்பட்டால்‌ நிவாரணம்‌ வழங்கப்‌ படவேண்டும்‌.

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html


NHIS 2016 - கூடுதல் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் & சில மருத்துவமனைகளை நீக்குதல் - அரசாணை வெளியீடு...

 


புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் - 2016 - அரசுத் துறைகள் மற்றும் பிற நிறுவனங்களின் ஊழியர்களுக்கான சிகிச்சை - 52 கூடுதல் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல், 1 மருத்துவமனைக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கை, பெயர் மாற்றம் 1 மருத்துவமனை, மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் 5 மருத்துவமனைகளை நீக்குதல் - அரசாணை வெளியீடு...


>>> Click here to Download G.O.(Rt) No.325, Dated 27th May 2021...


EDLI Scheme - கொரோனாவால் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தால் EDLI திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம்.. யாருக்குப் பொருந்தும்?

 EDLI Scheme - கொரோனாவால் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தால் EDLI திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம்.. 




கொரோனா தொற்று மட்டுமில்லாமல் வேறு எந்த காரணத்தினால் உயிரிழந்தாலும் இந்த இழப்பீடு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.



கொரோனா வைரஸ் தொற்றினால் ஏராளமானோர் தினமும் உயிரிழந்துவரும் நிலையில், பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்களும் இந்த கொரோனா தொற்றினால் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் வருமானம் ஈட்டும் ஒருவரை இழந்த நிலையில் அவர்களது குடும்பம் நிர்கதியாக நிற்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.  இந்த இக்கட்டான சூழலில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் தொழிலாளர் வைப்புசார் காப்பீடு (EDLI) திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி எந்த வகையில் இழப்பீடு தொகையினை பெறலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். பொதுவாக நிறுவனங்கள், பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரின் காப்பீட்டுக்காக அவரது அடிப்படை சம்பளத்தில் 0.50 சதவிகிதத் தொகையை மாதந்தோறும் செலுத்தி வருகின்றனர். கொரோனா தொற்று மட்டுமில்லாமல் வேறு எந்த காரணத்தினால் உயிரிழந்தாலும் இந்த இழப்பீடு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.



இதோடு தொழிலாளரின் அடிப்படைச் சம்பளம் மாதம்  ரூபாய் 15 ஆயிரத்துக்குக்கீழ் உள்ளவர்களின் குடும்பத்துக்கு, அவர்கள் பெறும் சம்பளத்துக்கு ஏற்ப இழப்பீடு தரப்படுகிறது. அவர்களுக்கு  குறைந்தபட்ச இழப்பீடு தொகையாக  ரூ.2.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இந்த இழப்பீடு தொகையினை தொழிலாளர்கள் பெற வேண்டும் என்றால், இடிஎல்ஐ திட்டத்தின்கீழ் பிஎஃப் சந்தாதாரர் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும்



மேலும் அதிபட்ச தொகையாக ரூ.7 லட்சம் வரை இழப்பீடு தொகையினை தருகிறது.  ஆனால் இந்த இழப்பீடு தொகையினை தொழிலாளர்கள் பெற வேண்டும் என்றால், இடிஎல்ஐ திட்டத்தின்கீழ் பிஎஃப் சந்தாதாரர் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஓராண்டுக்கு குறைவாக பணிபுரிந்திருந்தால் எவ்வளவு பிஎஃப் தொகை கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதோ அந்த தொகை தான் தரப்படும் எனவும் நடைமுறையில் உள்ளது.



கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஒருவரின் குடும்பம் எப்படி பணத்தினை பெறமுடியும்?


இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசு இந்த தொகையினை பெற முடியும் என கூறப்படுகிறது. அதாவது ஊழியர்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் போதே யார் இவர்களுக்கு அடுத்த வாரிசு என்பதை தெரிவித்திருப்பார்கள். அதனை வைத்து யார் சட்டப்படியான வாரிசு என்பதை தெரிந்து கொள்ளலாம். அவர்கள் தான் இழப்பீடு தொகையினை முழுமையாக பெற முடியும் என கூறப்படுகிறது. இதற்காக EDLI படிவம் 5 IF ஐ முறையாக பூர்த்தி செய்து உரிமைகோருபவர் சமர்ப்பிக்க வேண்டும்.




இந்த உரிமைகோரல் படிவத்தில் முதலாளியால் கையொப்பமிடப்பட்டு சான்றளிக்கப்பட வேண்டும். ஒரு வேளை நிறுவனத்திற்கு சென்று முதலாளி இல்லை முதலாளியின் கையொப்பத்தைப் பெற முடியாவிட்டால் பின்பவரும் சான்றிதழ்களை குடும்பத்தினர் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்படுகிறது.



அதில், 

சேமிப்பு கணக்கு வைத்துள்ள கிளையின் வங்கி மேலாளர்

உள்ளூர் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.

மாஜிஸ்திரேட்

உள்ளூர் நகராட்சி வாரியத்தின் உறுப்பினர் / தலைவர் / செயலாளர்

போஸ்ட் மாஸ்டர் அல்லது சப்-போஸ்ட் மாஸ்டர்

ஈபிஎஃப் அல்லது சிபிடியின் பிராந்திய குழுவின் உறுப்பினர்

ஆகியோரின் கையொப்பத்தினை பெற்று அதனை ஈபிஎஃப் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் ஏற்கனவே இறந்தவரின் பிஎப் கணக்கில் உள்ள பணம் உள்பட இதர பயன்களைப் பெற படிவம் 20 (பிஎஃப் தொகை), படிவம் 10டி (ஓய்வூதியம்) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் இந்த இழப்பீட்டுத் தொகை கிடைக்க தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. விண்ணப்பதாரர்கள் அளிக்கும் வங்கிக் கணக்கில் நேரடியாக இழப்பீடு தொகை ஒரு வாரத்தில் செலுத்தப்படுகிறது.


If you know anyone who has passed away due to Covid-19 and was an employee under Private sector, then their nominee/legal heir may be eligible to receive an amount up to ₹7 lakhs under the Employees Deposit Linked Insurance (EDLI) scheme. EDLI is an insurance cover provided by the EPFO (Employees Provident Fund Organisation) for private sector salaried employees. You may share this information with your friends and acquaintances.


>>> Click here to Download EDLI Notification...





கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் மத்திய அரசு அறிவிப்பு...

 கொரோனா போர் வீரர்கள் இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் லட்சக்கணக்கான நோயாளிகளை மீட்டெடுப்பதில் மருத்துவ உலகம் முக்கிய பங்காற்றுகிறது. 




 அந்தவகையில் கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் சுகாதார பணியாளர்கள் முன்களத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் கொரோனா போர்வீரர்கள் என்றே (கொரோனா வாரியர்ஸ்) அழைக்கப்படுகிறார்கள்.


 

இவ்வாறு கொரோனாவுடன் அன்றாடம் போராடி வரும் இவர்களும் அவ்வப்போது கொரோனா தாக்கி மரணத்தை தழுவுவது உண்டு. பலர் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டு வருகின்றனர். 



 இப்படி கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்த வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது.


ரூ.50 லட்சம்

பிரதான் மந்திரி கரிப் கல்யான் தொகுப்பு எனப்படும் இந்த காப்பீடு திட்டத்தில் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது. 


இது கொரோனா பணிகளில் ஈடுபட்டு இருக்கும் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர்களது குடும்பத்துக்கு ஒரு பாதுகாப்பாகவும் இருக்கும்.


 

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் 3 முறை நீட்டிக்கப்பட்டது. இதில் 3-வது முறை நீட்டிக்கப்பட்ட இந்த காப்பீடு திட்டத்தின் கால அளவு வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. 



 எனவே 24-ந்தேதிக்குப்பிறகு புதிய காப்பீடு திட்டம் சுகாதார பணியாளர்களுக்கு செயல்படுத்தப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்து உள்ளது. இதற்காக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


 

சுகாதார அமைச்சகம் அறிவிப்பு#  இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தின் மூலம் இதுவரை 287 பேருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. 



கொரோனாவுடன் போராடும் சுகாதார ஊழியர்களின் மன உறுதியை உயர்த்துவதில் இந்த திட்டம் ஒரு முக்கியமான உளவியல் பங்கைக் கொண்டுள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளது. கொரோனா போர்வீரர்களின் இந்த காப்பீட்டு திட்டம் வருகிற 24-ந்தேதி வரை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் எனக்கூறியுள்ள சுகாதார அமைச்சகம், அதைத்தொடர்ந்து ஒரு புதிய காப்பீட்டுக்கொள்கை பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு காப்பீடு கிடையாது - மாநிலங்களவையில் தகவல்...

 கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு காப்பீடு கிடையாது - மாநிலங்களவையில் தகவல்...

(பிப்ரவரி 10, 2021 தகவல்)

மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே

 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும், இனிமேல் போடப்போகிறவர்களுக்கும் பக்கவிளைவுகளுக்காக காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளதா என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே கூறியதாவது:-


பக்கவிளைவுகளுக்காக தடுப்பூசி பயனாளிகளுக்கு காப்பீடு வழங்க விதிமுறையில் இடம் இல்லை. கொரோனா தடுப்பூசி என்பது விருப்பத்தின்பேரில்தான் போடப்படுகிறது. அது கட்டாயம் அல்ல.



இருப்பினும், பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்று கண்காணிக்க தடுப்பூசி மையத்திலேயே பயனாளிகளை 30 நிமிட நேரம் அமர வைக்கிறோம். மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பக்கவிளைவுகள் ஏற்படுகிறவர்களுக்கு பொது சுகாதார மையத்தில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியால் 8 ஆயிரத்து 402 பேருக்கும், கோவேக்சின் தடுப்பூசியால் 81 பேருக்கும் லேசான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன.(பிப்ரவரி 10, 2021 தகவல்)


இவ்வாறு அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

47,013 temporary posts converted into permanent posts by School Education Department G.O. Ms. No: 19, Dated: 27-01-2025

  47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண் : 19, நாள்: 27-01-2025 வெளியீடு 47,013 te...