கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விபத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விபத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருவனந்தபுரம் வாமனபுரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள்



Kerala Chief Minister's security  vehicles collided one after the other at Thiruvananthapuram's Vamanapuram


 திடீரென சாலையை கடந்த பெண்ணால் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள்


திருவனந்தபுரம் வாமனபுரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் - காயங்களின்றி பயணத்தை தொடர்ந்தார் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள்




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அணிவகுப்பு பாதுகாப்புடன் காரில் சென்று கொண்டிருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்ற கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் சாலையில் ஒன்றுடன் மோதி திடீரென விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரம் என்ற பகுதியில் சாலையில் பெண் ஒருவர் தமது ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். சாலையில் ஒருபுறம் நடுவழியில் தமது வாகனத்தை நிறுத்திய அப்பெண் வலதுபுறம் திரும்பினார்.


அதே நேரத்தில், முதல்வர் பினராயி விஜயன் கார் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கோட்டயத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பரபரப்பான சாலையில் பெண்ணின் வாகனம் நின்று திரும்புவதை அறியாமல் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் திடீரென பிரேக் போட்டு நின்றது.


இதையடுத்து, முதல்வர் இருந்த வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் முதல்வர் பினராய் விஜயனின் கார் சிறிதளவு சேதம் அடைந்தது. விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் திடீர் பரபரப்பு நிலவியது. முதல்வர் பினராயி விஜயன் பயணித்த கார் சிறிது சேதம் அடைந்தது. அவருக்கும், உடன்வந்த பாதுகாவலர்கள் உள்பட யாருக்கும் நல்வாய்ப்பாக எந்த காயமும் ஏற்படவில்லை.


முதல்வர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றின்மீது ஒன்று மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் தீப்பிடித்த கார் திடீரென தானாக வேகமெடுத்து சாலையில் ஓடியதால் பரபரப்பு - வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம்


ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் தீப்பிடித்த கார் திடீரென தானாக வேகமெடுத்து சாலையில் ஓடியதால் பரபரப்பு - வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம்


 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சாலையில் தீப்பிடித்த நிலையில் கார் ஓட ஆரம்பித்ததால் பரபரப்பு.


வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்.


வாகனத்தில் இருந்து புகை வருவதை பார்த்ததும் மேம்பாலத்தில் நிறுத்திய ஓட்டுநர்.


தீப்பிடித்த வாகனம் திடீரென பாலத்தில் இருந்து இறங்கியதால் பரபரப்பு.


ஜெய்ப்பூரில் விபத்தில் தீப்பிடித்த கார் திடீரென தானாக வேகமெடுத்து சாலையில் ஓடியதால் பரபரப்பு


கார் எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம்.


ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பாலத்தில் தீப்பிடித்து எரிந்த ஓட்டுநர் இல்லாத கார், டிவைடரில் நிற்கும் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது மோதியது. காரின் ஏர் கண்டிஷனிங்கில் இருந்து புகை வருவதை கவனித்த டிரைவர், வெளியே சென்று சோதனை நடத்தினார். 

ஜெய்ப்பூரில் உள்ள சோடாலா சப்ஜி மண்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை, ஓட்டுநர் இல்லாத கார் (எம்ஜி ஹெக்டர்) தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியது. ஜிதேந்திரா ஓட்டிச் சென்ற கார், ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீப்பிடித்து எரிந்தது. தீ மற்றும் புகையை கவனித்த ஜிதேந்திரா வேகமாக வெளியே சென்று தப்பினார். 

இருப்பினும், கார் ஓட்டுநர் இல்லாமல் தொடர்ந்து நகர்ந்து, பாலத்தின் சாலையில் வேகமாகச் சென்றது. இறுதியில் உயரமான பகுதியைக் கடந்ததும் டிவைடரில் மோதியது. அதிர்ஷ்டவசமாக, ஓட்டுநர் இன்றி ஓடிய வாகனத்தால் குழப்பம் ஏற்பட்ட போதிலும், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.


A driverless car engulfed in flames descended an elevated road in Jaipur, colliding with a parked bike before halting at a divider.


The driver noticed smoke coming from the car's air conditioning and stepped out to investigate.


A dramatic incident unfolded on Friday evening in Jaipur’s Sodala Sabzi Mandi area when a burning, driverless car ( MG Hector ) caused widespread panic. The car, driven by Jitendra, caught fire due to a suspected short circuit. Upon noticing the flames and smoke, Jitendra quickly escaped. However, the car continued moving driverless, speeding down an elevated road. It eventually collided with a divider after crossing the elevated stretch. Fortunately, no injuries were reported despite the chaos caused by the runaway vehicle.





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 

Thiruvallur Kavarappettai - Darbhanga - Mysuru Express train accident - video of rescue of trapped passengers...


Rear end collision  at KAVARAIPPETTAI Railway Station around 20.30 hrs today in Chennai -Gudur section involving Train No.12578 Mysuru – Darbhanga Bagmati Express and a Goods train


Help line numbers at Chennai Division

04425354151

04425330952 

044-25330953 

044-25354995


கவரப்பேட்டை ரயில் விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர், உயிரிழப்பு இல்லை

- திருவள்ளூர் ஆட்சியர் பிரபுசங்கர் 


கவரப்பேட்டையில் 2 ரயில்கள் மோதி விபத்து


பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் உள்ள ரயில் பெட்டியை கீழே தள்ளுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்...


 திருவள்ளூர் கவரப்பேட்டை - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து - சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் காணொளி...


Thiruvallur Kavarappettai - Darbhanga - Mysuru Express train accident - video of rescue of trapped passengers...





>>> மீட்புப் பணிகள் - காணொளியை காண இங்கே சொடுக்கவும்...




>>> ரயில் விபத்து காணொளி 2...




>>> ரயில் விபத்து காணொளி 3...



திருவள்ளூர் கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. மைசூருவிலிருந்து தர்பங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மீது மோதியது. நான்கு ஏசி பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் நிலையம் அருகே விபத்து ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.






ரயில் நிலையம் அருகிலேயே விபத்து நிகழ்ந்ததால் - உயிரிழப்புகள் இல்லை - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு...








Near Kavaraipettai in Thiruvallur, a passenger train collided with a goods train. The Mysuru to Darbhanga Express crashed into the goods train.  

Four AC compartments derailed. The accident occurred near the railway station, allowing immediate rescue operations to begin.

Two compartments caught fire, and the fire department rushed to the scene. Rescue efforts to assist the public are underway.

திருவள்ளூரில் ரயில்கள் மோதல்: கவரப்பேட்டை அருகில் Darbhanga - Mysuru express பயணிகள் விரைவு ரயிலும், சரக்கு ரயிலும் மோதிக்கொண்டதில் ரயில் தீப்பிடித்து எரிந்து வருகிறது...

கவரப்பேட்டை ரயில் விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர், உயிரிழப்பு இல்லை

- திருவள்ளூர் ஆட்சியர் பிரபுசங்கர் 


Rear end collision  at KAVARAIPPETTAI Railway Station around 20.30 hrs today in Chennai -Gudur section involving Train No.12578 Mysuru – Darbhanga Bagmati Express and a Goods train


Help line numbers at Chennai Division

04425354151

04425330952 

044-25330953 

044-25354995

 


 திருவள்ளூரில் ரயில்கள் மோதல்: கவரப்பேட்டை அருகில் பயணிகள் விரைவு ரயிலும், சரக்கு ரயிலும் மோதிக்கொண்டதில் ரயில் தீப்பிடித்து எரிந்து வருகிறது...


முதல் கட்டமாக, சிக்னல் கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்ததாக தகவல்...


ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம்...






திருவள்ளூர் கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. மைசூருவிலிருந்து தர்பங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மீது மோதியது. நான்கு ஏசி பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் நிலையம் அருகே விபத்து ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.


ரயில் நிலையம் அருகிலேயே விபத்து நிகழ்ந்ததால் - உயிரிழப்புகள் இல்லை - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு...




 திருவள்ளூர் அடுத்த கவரப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து.


ஆந்திரா நோக்கி சென்ற பயணிகள் விரைவு ரயில் திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்து.


2 பெட்டிகளில் தீப்பற்றி எரிந்து வருவதால் பரபரப்பு.


மைசூர் தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.


நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து...




>>> மீட்புப் பணிகள் - காணொளியை காண இங்கே சொடுக்கவும்...





>>> ரயில் விபத்து காணொளி 2...




>>> ரயில் விபத்து காணொளி 3...


In Kavarapettai Darbhanga - Mysuru express collided with the Goods train . Looks like a major accident...


A major train accident has been reported near Ponneri, where Train No. 12578 Mysore-Darbhanga Express collided with a goods train near Kavarapettai in Tiruvallur district. A major fire has broken out, and more details are awaited.







பெண்கள் விடுதியில் தீ விபத்து - 2 ஆசிரியைகள் உயிரிழப்பு...




 மதுரையில் விசாகா என்ற பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விடுதியை நடத்தி வந்த இன்பா என்ற பெண் கைது. 


விசாகா பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர்.


விடுதியை காலி செய்யக் கோரி கடந்த ஆண்டே மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது.


மதுரை மாவட்டம், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள, கட்ராபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் (12-09-24) அதிகாலை 4 மணியளவில் இந்த விடுதியில் இருந்த பிரிட்ஜ் திடீரென்று வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக, கடுமையான கரும்புகை ஏற்பட்ட நிலையில், அருகில் இருக்கக்கூடியவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், விடுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தி அந்த விடுதியில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மீட்டனர்.


இந்த விடுதியில் ஏற்பட்டுள்ள தீயினால், கரும்புகை உருவானதில் மூச்சுத்திணறலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், பிரிட்ஜ் வெடிக்கும் போது, அதன் அருகில் இருந்த பரிமளா செளந்தரி மற்றும் சரண்யா ஆகிய இருவரையும் பலத்த காயங்களுடன் தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரிமளா செளந்தரி மற்றும் சரண்யா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் தெரிவித்திருந்தனர். பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இந்த சம்பவம் தொடர்பாக விடுதி உரிமையாளர் இன்பாவை மதுரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 100 ஆண்டுகள் பழமையாக கட்டடத்தில் இயங்கி வந்த விசாகா பெண்கள் விடுதி, மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறவில்லை. கட்டடம் சேதமடைந்து இருப்பதால் விடுதியை காலி செய்யுமாறு இடத்தின் உரிமையாளர் கூறியும், வெளியேற மறுத்துள்ளார். மருத்துவமனை நடத்த அனுமதி பெற்றுவிட்டு மகளிர் விடுதியை நடத்தி வந்ததால், விடுதியின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் கட்டடத்தின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்திருந்தார் என்று கூறப்படுகிறது.


இதற்கிடையில், 2023ஆம் ஆண்டே விடுதியை இடித்து அப்புறப்படுத்த மதுரை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. ஆனால், விடுதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் விடுதி இடிக்கப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில், விடுதியில் ஏற்பட்டுள்ள விபத்து குறித்து நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு சென்று அனுமதி பெற்று விடுதியை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


மதுரை மாவட்டம் கட்ராபாளையம் பகுதியில் இயங்கி வரும் பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி ஆசிரியை உள்பட 2 பேர் பலியானார்கள். விபத்து நடந்த இடத்தை கலெக்டர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,


"மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்களை இடிப்பதற்கு மாநகராட்சி சார்பில் முறையாக நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் இடிக்காமல் இருக்கிறார்கள். நீதிமன்றத்தையும் சில பேர் அணுகி உள்ளனர். இடிக்காமல் இருக்கும் பழமை வாய்ந்த கட்டிடங்கள் ஆலோசித்து 'சீல்' வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமாரும், பார்வையிட்டு ஆய்வு செய்தார். முறையான மாநகராட்சி அனுமதி, சுகாதாரத் துறை அனுமதி, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, காவல்துறையின் அனுமதி என்று எந்தவிதமான அனுமதியும் பெறாமல் இந்த விடுதி செயல்பட்டு வந்துள்ளது. விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.


இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டு 2 பெண்கள் பலியான நிலையில் பெண்கள் தங்கும் விடுதியை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விடுதி செயல்பட்டு வந்த கட்டிட உரிமையாளருக்கு மீண்டும் ஒரு நோட்டீஸ் வழங்க உள்ளதாகவும் மதுரை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.


மதுரை கட்ராபாளையத்தில் தீ விபத்து ஏற்பட்ட மகளிர் விடுதிக் கட்டடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தீ விபத்தை அடுத்து கட்டட உரிமையாளர் தினகரனை அழைத்து, வழக்கு தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கட்டிட உரிமையாளர் தரப்பில் கட்டடத்தை காலி செய்யும் பணியும் இன்று தொடங்கும்.


ஆப்கானிஸ்தானில் இந்தியாவிலிருந்து சென்ற விமானம் விபத்து...



ஆப்கானிஸ்தானில் இந்தியாவிலிருந்து மாஸ்கோ சென்ற விமானம் விபத்து...


ஆப்கானிஸ்தான் காவல்துறைக்கு விமான விபத்து குறித்துப் புகார் வந்ததையடுத்து 6 பேர் இருப்பதாகக் கருதப்படும் ரஷ்ய விமானம் ஒன்று காணாமற்போனதாக ரஷ்ய விமானத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


நேற்றிரவு (ஜனவரி 20) விபத்து ஏற்பட்டதாகப் புகார் செய்யப்பட்டது.


ஆப்கானிஸ்தான் ஆகாயவெளியில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது அது காணாமற்போனதாக அதிகாரிகள் கூறினர்.


அந்த விமானம் இந்தியாவிலிருந்து மாஸ்கோவுக்குச் சென்றுகொண்டிருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.


ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் இருக்கும் பதக்-ஷான் (Badakhshan) எனும் மலைப்பகுதியில் விபத்து நேர்ந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.


அந்தப் பகுதி நகரத்திலிருந்து வெகுதொலைவில் உள்ளது. மீட்புக்குழுவினர் அங்கு சென்றடைய சுமார் 12 மணிநேரம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.


விமானத்தின் விவரங்கள், விபத்துக்கான காரணம், பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் ஆகியவை உறுதியாகத் தெரியவில்லை.


விபத்தில் சிக்கிய விமானம் வர்த்தக விமானமோ இந்திய விமானமோ இல்லை என்று இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.



தற்போதைய செய்தி

ஆப்கானிஸ்தானின் வடக்கு படாக்ஷான் மாகாணத்தில் மொராக்கோ விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதாக, மாகாண தகவல் மற்றும் கலாச்சாரத் துறையின் அதிகாரி ஜபிஹுல்லா அமிரியை மேற்கோள் காட்டி உள்ளூர் தொலைக்காட்சியான டோலோநியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 


விபத்துக்குள்ளான விமானத்தில் குரான்-வா-முன்ஜான் மாவட்டத்தின் டோப்கானா பகுதிக்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார். முதற்கட்ட தகவல்களுக்கு மாறாக, விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் அல்ல என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்தது. 


"ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விமான விபத்து இந்திய திட்டமிடப்பட்ட விமானமோ அல்லது திட்டமிடப்படாத (என்எஸ்ஓபி) / பட்டய விமானமோ அல்ல. இது மொராக்கோவில் பதிவுசெய்யப்பட்ட சிறிய விமானம். மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன" என்று அமைச்சகம் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. X இல். 



விபத்துக்குள்ளான விமானம் மொராக்கோவில் பதிவு செய்யப்பட்ட DF-10 (Dassault Falcon) சிறிய விமானம் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. இது இந்திய கேரியர்களின் விமானம் அல்ல. விமானம் ஏர் ஆம்புலன்ஸ் மற்றும் தாய்லாந்தில் இருந்து மாஸ்கோவிற்கு பறந்து கொண்டிருந்தது மற்றும் கயா விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பியது என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, ரஷ்ய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஆறு பேருடன் ரஷ்ய பதிவு செய்யப்பட்ட விமானம் சனிக்கிழமை மாலை ஆப்கானிஸ்தானின் ரேடார் திரைகளில் இருந்து காணாமல் போனதாகக் கூறியது. அந்த விமானம் பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட Dassault Falcon 10 ஜெட் விமானமாகும். இந்த விமானம் இந்தியாவில் இருந்து உஸ்பெகிஸ்தான் வழியாக மாஸ்கோவிற்குச் சென்ற வாடகை விமானமாகும். விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் அல்ல என்பதை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ANI தெரிவித்துள்ளது. 



"படக்ஷான் மாகாணத்தின் குரான்-முன்ஜான் மற்றும் ஜிபக் மாவட்டங்களுக்கு அருகில் டோப்கானா மலைகளில் விழுந்து நொறுங்கிய விமானம் மொராக்கோ பதிவு செய்யப்பட்ட DF 10 விமானம்" என்று DGCA மூத்த அதிகாரி ஒருவர் ANI இடம் தெரிவித்தார். வடக்கு ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதால் உயிரிழப்புகள் அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



 A Moroccan plane on Sunday crashed in Afghanistan's northern Badakhshan province, local television channel Tolonews reported, citing Zabihullah Amiri, an official of the provincial Department of Information and Culture. The official informed that a team had been sent to the Topkhana area of the Kuran-wa-Munjan district on the crashed plane, he said. Contrary to initial reports, the Ministry of Civil Aviation confirmed that the crashed plane was not Indian.


"The unfortunate plane crash that has just occurred in Afghanistan is neither an Indian Scheduled Aircraft nor a Non-Scheduled (NSOP)/Charter aircraft. It is a Moroccan-registered small aircraft. More details are awaited," the ministry stated in a post on X.


The Civil Aviation Ministry further stated that the crashed aircraft is a DF-10 (Dassault Falcon) small aircraft registered in Morocco. It is not an aircraft of Indian carriers. The aircraft was an air ambulance and was flying from Thailand to Moscow and did refueling at Gaya Airport, according to news agency ANI.


According to news agency Reuters, Russian Aviation Authorities stated that a Russian-registered plane with six people thought to be on board disappeared from radar screens over Afghanistan on Saturday evening. The plane was a French-made Dassault Falcon 10 jet. The plane was a charter flight traveling from India via Uzbekistan to Moscow.


ANI also quoted a Directorate General of Civil Aviation (DGCA) official confirming that the crashed aircraft was not Indian. "A plane that crashed in the mountains of Topkhana alongside the districts of Kuran-Munjan and Zibak of Badakhshan province, was Moroccan registered DF 10 aircraft," a senior DGCA official told ANI.


Casualties are feared as the passenger plane crashed in northern Afghanistan, news agency Anadolu reported citing local media.


உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்க விபத்து : தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏன்? (Uttarakhand Silkyara mine accident: Why the delay in rescuing workers?)



 உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்க விபத்து : தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏன்? (Uttarakhand Silkyara mine accident: Why the delay in rescuing workers?)


மீட்புப் பணிகளில் இன்று 16வது நாளாகத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


ஆக்கர் இயந்திரத்தைக் கொண்டு துளையிடும் பணியில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டுக்கொண்டே இருப்பதால், மாற்று வழியில் தொழிலாளர்களை மீட்பதில் தீவிரம்.


சுரங்கப்பாதை உள்ள மலையின் மேலே இருந்து கீழ்ப்பகுதி வரை செங்குத்தாகத் துளையிட்டு மீட்புப் பணியைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.


சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்கான காலக்கெடுவைக் குறிப்பிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.



உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இன்று தொடங்குகிறது கைகளால் துளையிடும் பணி...


கடந்த சனிக்கிழமை, 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத உபகரணம் பழுதாகி உடைந்துவிட்டது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதை கடந்த நவம்பர் 12 ஆம் தேதி இடிந்து விழுந்ததையடுத்து, 41 தொழிலாளர்கள் அந்த சுரங்கபாதையில் சிக்கி கொண்டனர்.

அதனை தொடர்ந்து, 16 நாட்களுக்கும் மேலாக அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், இன்னும் அவர்கள் மீட்கப்படவில்லை.

கடந்த சனிக்கிழமை, 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத உபகரணம் பழுதாகி உடைந்துவிட்டது.

சில்க்யாரா சுரங்கப்பாதையின் இடிபாடுகளுக்குள் துளையிட்டுக் கொண்டிருந்தபோது, ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டன.

ஏறக்குறைய 60 மீட்டர் இடிபாடுகளை உடைக்க, இந்த கனரக இயந்திரம் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டது.

இது உடைந்து விழுந்த நிலையில், அந்த இயந்திரத்தின் உடைந்த பாகங்கள் இன்று அகற்றப்பட்டன.


எப்போது முடியும் மீட்பு பணி?

இதனையடுத்து, இன்றிலிருந்து மீதம் உள்ள சுரங்க இடிபாடுகள் கைகளால் துளையிடப்பட இருக்கின்றன.

தொடர்ச்சியான பின்னடைவுகளுக்குப் பிறகு, சுரங்கப்பாதையின் சரிந்த பகுதிக்கு மேலே உள்ள மலையின் உச்சியில் இருந்து செங்குத்தாக துளையிடும் நடவடிக்கைகளும் நேற்று தொடங்கியது.

நேற்று ஒரு நாளைக்குள் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாக கிட்டத்தட்ட 20 மீட்டர்கள் துளையிட்டனர்.

தடைகள் ஏதும் ஏற்படாத பட்சத்தில், இந்த துளையிடும் பணி வரும் வியாழக்கிழமைக்குள் வெற்றிகரமாக முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் முடிவடைந்ததும் 700-மிமீ அகலமுள்ள குழாய்கள் உள்ளே செலுத்தப்பட்டு, அதன் மூலம் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள்.

இதற்கிடையில், அமெரிக்க ஆகர் இயந்திரம் துளையிட்டு கொண்டிருந்த பகுதியில் அடுத்த 10-15 மீட்டர்களுக்கு கைகளால் துளையிடப்பட இருக்கிறது.


உத்தரகாசியில் கடந்த இரண்டு வாரங்களாக சில்க்யாரா-பர்கோட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றுடன் மீட்பு பணிகள் 16வது நாளை தொட்டுள்ளது. நேற்று புதிய முயற்சியாக சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் சுமார் 20 மீட்டர் வரை துளையிடும் பணி நடைபெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்களை மீட்க போடப்பட்ட 5 திட்டங்களில் செங்குத்து துளையிடுதலும் ஒன்றாகும். சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை சென்றடைய ஏற்கனவே 19.2 மீட்டர் துளை போடப்பட்ட நிலையில், இன்னும் 86 மீட்டர் செங்குத்து துளையிடும் பணி மீதம் இருக்கிறது. இந்த பணிகள் முழுமையடைய இன்னும் 4 நாட்களாவது ஆகும் என்று கூறப்படுகிறது. 


தொழிலாளர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் - அதிகாரிகள் தகவல்

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் லிமிடெட் (NHIDCL) நிர்வாக இயக்குனர் மஹ்மூத் அகமது கூறியதாவது, “சட்லஜ் ஹைட்ரோபவர் கார்ப்பரேஷன் தொடங்கியுள்ள செங்குத்து துளையிடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. ஏதேனும் சிக்கல்கள் இல்லாமல் இப்படியே தொடர்ந்தால், வரும் வியாழன் வரை அதாவது இன்னும் நான்கு நாட்களில் முடித்துவிடலாம் என எதிர்பார்க்கலாம். 700 மிமீ குழாய்கள் துளையிட்டு 'எஸ்கேப் பாதை' உருவாக்கப்படுகிறது. இதிலிருந்து சிறிது தொலைவில், 70 மீட்டரை எட்டிய 200 மிமீ விட்டம் கொண்ட மெல்லிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.  



துளையிடுவதில் ஏற்பட்ட சிக்கல்கள்: 

சுரங்கப்பாதையின் சில்க்யாரா முனையிலிருந்து அமெரிக்கன் ஆகர் இயந்திரம் மூலம் கிடைமட்டமாக துளையிடுவதில் மீண்டும் மீண்டும் சிக்கல்கள் ஏற்பட்டதால், தொழிலாளர்களை சென்றடைய செங்குத்து துளையிடல் என்னும் முறை தேர்வு செய்யப்பட்டது. சுரங்கப்பாதையில் 60 மீட்டர் பரப்பளவில் இடிபாடுகள் பரவியுள்ளன. இதனால் சுமார் 25 டன் எடை கொண்ட ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் அந்த இடிபாடுகளில் சிக்கி கடந்த வெள்ளிக்கிழமை உடைந்தது. 


இதுகுறித்து மீட்பு பணிகளுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ள நோடல் அதிகாரி நீரஜ் கைர்வால் கூறியதாவது: 

பிளாஸ்மா கட்டர் மற்றும் லேசர் கட்டர் மூலம் இடிபாடுகளில் சிக்கிய ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. இரவு 7 மணி நிலவரப்படி 8.15 மீட்டர் தூரம் மட்டுமே ஆகர் இயந்திரம் வெளியே எடுக்க முடிந்தது. பிளாஸ்மா கட்டர் ஹைதராபாத்தில் இருந்து சில்க்யாராவுக்கு நேற்று காலை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.” என்று தெரிவித்தார்.


தொடரும் உயிரைக் காப்பாற்றும் போராட்டம்:

ஆகர் இயந்திரத்தின் பாகங்கள் முழுமையாக அகற்றப்பட்டவுடன், மீதியுள்ள 10-12 மீட்டர் இடிபாடுகளை மீட்புப் பணியாளர்கள் கையால் துளையிட்டு அகற்றுவார்கள். ஒரு குறுகிய இடத்திற்குள் இந்த கையால் நடத்தப்படும் உடைப்பு பணியில், ஆகர் இயந்திரத்தினால் ஏற்கனவே போடப்பட்ட துளைக்குள் சென்று கைகளால் துளையிடுவார். பின்னே செல்லும் மற்ற தொழிலாளர்கள் ஒரு கப்பி மூலம் குப்பைகளை வெளியே அனுப்புவர். ஆனால், இந்த கைகளால் துளையிடும் பணி அதிக நேரம் எடுக்கும் என தெரிகிறது. இதற்கிடையில், சுரங்கப்பாதையின் பார்கோட் முனையிலிருந்தும் தோண்டும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுவரை 10 மீட்டர் தோண்டும் பணி நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கரையில் இருந்து மொத்தம் 483 மீட்டர் தோண்டும் பணி நடைபெற 40 நாட்கள் ஆகலாம் என்றும், இது மாற்று வழியாகவே இந்த தோண்டும் பணி நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.


முன்னதாக சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக மீட்கப்படுவார்கள்; கிறிஸ்துமஸ்க்கு வீடு திரும்புவார்கள் என சர்வதேச சுரங்க மீட்பு நிபுணர் அர்னால்ட் கூறியுள்ளார். இது குறித்த முழுமையான தகவல்கள் :


உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா என்ற பகுதியில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 12ம் தேதி வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சுரங்கத்தின் உள்ளே 41 தொழிலாளர்கள் சிக்கினர்.


இவர்களை மீட்பதற்கான பணி உடனடியாக தொடங்கியது. பேரிடர் மீட்பு படையினர், சுரங்க நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 41 தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், ஆக்ஸிஜன் உள்ளிட்டவை குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தொழிலாளர்கள் சாப்பிட்டு வருகின்றனர்.


இருப்பினும் அந்த சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பது என்பது சுலபமான காரியமாக இல்லை. அங்குள்ள இடம் நிலச்சரிவுக்கு ஏற்ற வகையில் உள்ளது. இதனால் அதிர்வுகளால் மேலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதோடு சுரங்கத்தின் மேல்புறத்தில் இருந்து செங்குத்தாக துளை போட்டு மீட்கும் பணியும் சவால் நிறைந்ததாக உள்ளது. மீட்பு பணிக்கான ஆகர் இயந்திரத்தின் மூலம் இந்த பணி நடந்து வந்த நிலையில் கான்கிரீட் கம்பிகள் இயந்திரத்தின் பிளேடுகளில் சிக்கியது. இதனால் இந்த மீட்பு பணியும் தடைப்பட்டது. அதன்பிறகு கான்கிரீட் கம்பிகள், பிளேடுகள் அகற்றப்பட்டு மீண்டும் மீட்புபணி தொடங்கி உள்ளது. மேலும் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலையும் மீட்பு பணியை தாமதப்படுகிறது.


இதனால் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் எப்போது பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில்தான் சுரங்கபாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் சுரங்ப்பாதை மீட்பு பணிகளில் கைதேர்ந்தவர்.


இந்நிலையில் தான் அர்னால்ட் டிக்ஸ் தற்போதைய மீட்பு பணி குறித்தும், தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவார்கள் என்பது பற்றியும் கூறியுள்ளார். அதுபற்றி அவர் கூறியதாவது: ‛‛இது மலைப்பகுதியில் நடக்கும் மீட்பு பணி என்பதால் மிகவும் பிரச்சனையாக உள்ளது. இதில் அவசரப்படக்கூடாது. முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் மீட்புப் பணி எப்போது முடியும் என்பதை கூறிவிட முடியாது. மீட்பு பணிக்கு குறிப்பிட்ட காலம் பிடிக்கும். இன்று முதல் ஒரு மாதம் கூட ஆகலாம். ஆனால் 41 பேரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள்.


கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் வீடு திரும்புவார்கள் என நம்பலாம். இந்த மீட்பு பணியில் நாங்கள் ஒன்றை மட்டுமே கவனத்தில் வைத்துள்ளோம். அது என்னவென்றால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதுதான். மேலும் தொடக்கத்தில் இருந்தே இந்த பணி என்பது வேகமாக நடக்கும் என உறுதியளிக்கவில்லை. மாறாக இந்த பணி சவால் நிறைந்ததாகதான் இருக்கும் என கூறினேன். அது தொடர்கிறது. ஆனால் தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்’’ என்றார்.


தற்போது சுரங்க மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்த அர்னால்ட் டிக்ஸ் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். இவர் மீட்பு பணியில் ஈடுபட தொடங்கிய நிலையில் வேகமெடுத்தது. ஆனால் தற்போது சுரங்கம் அமைந்துள்ள இடத்தில் மீட்பு பணிக்கு பல இடையூறுகள் உள்ளன. இதனால் மீட்பு பணி மெதுவாக நடந்து வருகிறது. இந்த அர்னால்ட் டிக்ஸ் சுரங்க மீட்பு பணிகளில் மிகவும் கைதேர்ந்தவர். இவர் பிரிட்டனில் பள்ளி கல்வியை முடித்தார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் புவியியல் என்ஜீனியரிங் கல்வி பயின்றார்.


இதையடுத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுரங்க கட்டுமான தொழிலில் வல்லுனராக திகழ்கிறார். அதன் சர்வதேச சுரங்க கூட்டமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வரும் இவர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு சுரங்கப் பாதை திட்டங்களுக்கு  ஆலோசகராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். இந்தியாவில் டெல்லி மெட்ரோ சுரங்க பாதைக்கும் இவர் ஆலோசனைகளை வழங்கியிருந்தார். ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு சுரங்கப்பாதை விபத்து மீட்புப் பணிகளுக்கு அவர் தலைமையேற்று இருக்கிறார். தற்போது உத்தராகண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணியின் முக்கிய ஆலோசகராக அர்னால்டு டிக்ஸ் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மண்சரிவு விபத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை காப்பாற்ற உதவும் தமிழ்நாட்டின் ரிக் நிறுவனத் தொழில்நுட்பம் (Tamil Nadu's Rig Company technology to help rescue 41 workers trapped in Uttarakhand tunnel landslide accident)...

உத்தரகாண்ட்  சுரங்கப்பாதை மண்சரிவு விபத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை காப்பாற்ற உதவும் தமிழ்நாட்டின் ரிக் நிறுவனத் தொழில்நுட்பம் (Tamil Nadu's Rig Company technology to help rescue 41 workers trapped in Uttarakhand tunnel landslide accident)...



 உத்தரகாண்ட்: உத்தரகாசி சுரங்கப்பாதை மண்சரிவு விபத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை காப்பாற்ற உதவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிஆர்டி ரிக் நிறுவனம்.


பாறை, மண் சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்சிஜன் கிடைக்க உதவியுள்ளது தமிழ்நாட்டின் ரிக் தொழில்நுட்பம்.


12வது நாளாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் இன்றிரவு அல்லது நாளை காலைக்குள் முடிந்து, தொழிலாளர்கள் மீட்கப்பட வாய்ப்பு..




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


ரயில் பயணம் - 35 பைசாவில் ரூ.10 இலட்சம் விபத்து காப்பீடு குறித்த தகவல்கள் (Train Travel - Rs.10 Lakh Accident Insurance at 35 Paisa - Details)...





ரயில் பயணம் - 35 பைசாவில் ரூ.10 இலட்சம் விபத்து காப்பீடு குறித்த தகவல்கள் (Train Travel - Rs.10 Lakh Accident Insurance at 35 Paisa - Details)...


 ஒடிசா இரயில் விபத்துக்கு பிறகு, பயணச் சீட்டுடன் பலரும் 35 பைசா விபத்து காப்பீடு குறித்து விழிப்புணர்வு பதிவு இட்டு வருகிறார்கள். அதில் இன்னும் ஒரு விஷயத்தை அதிகப்படியாக சேர்த்து கொண்டால், இழப்பீடு பெறுவது எளிதாக இருக்கும்.


இரயில் பயணம் செய்ய ஆன்லைன் புக்கிங் செய்யும் போது, விபத்து காப்பீடாக 0.35 பைசா கட்டிய பின்னர்  உங்கள் ஆன்லைன் டிக்கெட் காப்பி உங்கள் இ-மெயிலுக்கு வருமல்லவா, அதை அடுத்து நீங்கள் எடுத்த அந்த இன்சூரன்ஸ் சம்பந்தமாக HAT என்று ஒரு தனி இ-மெயிலும் உங்கள் இன்பாக்ஸுக்கு வரும். 


பின்னர் அதனுள் சென்று உங்கள் பிஎன்ஆர் நம்பர் மற்றும் உங்கள் மொபைல் நம்பரை இட்டால், அடுத்ததாக ஒரு திரை விரியும். அதில் உங்கள் இன்சூரன்ஸ்க்கான நாமினியை பதிவு செய்து முடித்து வைத்தால்தான் அந்த இன்சூரன்ஸ் முழுமை பெறும். 


எனவே முப்பத்தைந்து பைசா கட்டுவதுடன் கையோடு நாமினியாக குடும்ப உறுப்பினர்கள் யாரையாவது பதிந்தும் வைத்து விடுங்கள்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஒடிசா பாலசோர் பகனாகா பஜார் ரயில் விபத்து - தொடர்புகொள்ள முடியாத தமிழர்களின் விவரம் - தமிழ்நாடு அரசு வெளியீடு (Odisha Balasore Bahanaga Bazar Train Accident - Details of uncontactable Tamils ​​- Tamilnadu Govt Press Release)...

ஒடிசா பாலசோர் பகனாகா பஜார் ரயில் விபத்து - தொடர்புகொள்ள முடியாத தமிழர்களின் விவரம் - தமிழ்நாடு அரசு வெளியீடு (Odisha Balasore Bahanaga Bazar Train Accident - Details of uncontactable Tamils ​​- Tamilnadu Govt Press Release)...


ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேரில், 7 பேரின் நிலை குறித்து இதுவரை அறியப்படவில்லை!


அவர்கள் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!


தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:


04428593990

9445869843











>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

குஜராத் மோர்பி மச்சு நதி தொங்கு பாலம் அறுந்து விழும் சிசிடிவி காட்சி (Gujarat Morbi Machu river suspension cable bridge collapsing CCTV footage)...



>>> குஜராத் மோர்பி மச்சு நதி தொங்கு பாலம் அறுந்து விழும் சிசிடிவி காட்சி (Gujarat Morbi Machu river suspension cable bridge collapsing CCTV footage)...


குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. புதுடெல்லி, குஜராத் தொங்கும் பாலம் விபத்து குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரி பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி லலித் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் பழமைவாய்ந்த பொது கட்டமைப்புகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொங்கும் பாலம் அறிந்து ஆற்றில் விழுந்ததில் இதுவரை 141 பேர் இறந்ததால் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே, குஜராத் மோர்பி தொங்கும் பாலம் அறுந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



அறுந்து விழும் குஜராத் மோர்பி பாலம்;  சிசிடிவி காட்சி...


குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள மோர்பி என்ற இடத்தில் மச்சு ஆற்றுக்கு மேல் தொங்கு பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தொங்கு பாலம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 230மீ நீளமுடைய இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டு 140 வருடங்களுக்கு மேல் ஆகிறது. கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு 4 நாட்களுக்கு முன்புதான் இந்த பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.



இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிறு மாலை 6 மணி அளவில், 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்த சமயத்தில், பாலத்தில் இருந்த மக்கள் உற்சாகத்தில் ஓடி விளையாடியுள்ளனர். இதனால், அந்த தொங்கு பாலமும் ஆடத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், என்ன செய்வது என யோசிப்பதற்குள் அவர்களின் எடையைத் தாங்க முடியாத மோர்பி தொங்கு பாலம் திடீரென அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது.



அதன் பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த தேசியப் பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநிலப் பேரிடர் மீட்புப்படையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கர விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் என்று தெரிகிறது. ஆனால், ஆற்றுக்குள் இன்னும் பலர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.


இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, “குஜராத் தொங்குபாலம் விபத்தில் என் நெஞ்சே வலிக்கிறது. ஒருபுறம் வலி நிறைந்த இதயம் இருந்தாலும், மறுபுறம் கடமைக்கான பாதையும் இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் மோர்பி தொங்கு பாலம் அறுந்துவிழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பார்ப்பவர்களைப் பதற வைக்கும் இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.



பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு - அரசாணை (நிலை) எண் : 17, பள்ளிக்கல்வித் துறை, நாள்: 07-02-2018 - வெளியீடு (Accident Insurance for School Students - G.O. (Ms) No : 17, Department of School Education, Dated: 07-02-2018 - Issued)...



>>> பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு - அரசாணை (நிலை) எண் : 17, பள்ளிக்கல்வித் துறை,  நாள்: 07-02-2018 -  வெளியீடு (Accident Insurance for School Students - G.O. (Ms) No : 17, Department of School Education, Dated: 07-02-2018 - Issued)...




https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

பள்ளிக்‌ கல்வி - அரசு/ அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ / மாணவியர்கள்‌ எதிர்பாராத விபத்துக்களினால்‌ இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள்‌ ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும்‌ மாணவ / மாணவியர்களின்‌ குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல்‌ - ஆணை வெளியிடப்படுகிறது.


பள்ளிக்‌ கல்வித்‌ ப௧5(2) துறை,  அரசாணை (நிலை) எண்‌. 17 நாள்‌: 07.02.2018. (திருவள்ளுவராண்டு 2049 தை 25)


படிக்கப்பட்டவை:-

பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ கடித ந.க.எண்‌.019344/எம்‌/இ2/2017, நாள்‌ 08.05.2017.


ஆணை:

மேலே படிக்கப்பட்ட கடிதத்தில்‌, 2016-17ஆம்‌ கல்வியாண்டில்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கட்டுப்பாட்டின் கீழ்‌ தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ என மொத்தம்‌ 37,201 அரசுப்‌ பள்ளிகளும்‌ மற்றும்‌ தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ என மொத்தம்‌ 8,402 அரசு உதவி பெறும்‌ பள்ளிகளும்‌, ஆக மொத்தம்‌ 45,603 பள்ளிகள்‌ செயல்படுகின்றன எனவும்‌, மேற்படி அரசுப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை 55,73,217 மாணாக்கர்களும்‌, அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில் ‌29,51,084 மாணாக்கர்களும்‌ பயின்று வருகின்றனர்‌ எனவும்‌, தமிழகத்தில்‌ உள்ள பள்ளி மாணவர்கள்‌ தரமான கல்வி பயில்வதற்கும்‌, மாணவர்களின்‌ பாதுகாப்பு மற்றும்‌ நலன்களை உறுதிப்படுத்திடவும்‌ தமிழக அரசின்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது எனவும்‌, பள்ளி மாணவர்கள்‌ வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும்‌ போதும்,‌ பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பச்‌ செல்லும்‌ போதும்‌, உரிய பாதுகாப்புடன்‌ சென்றுவரும்‌ பொருட்டு, பள்ளிக்‌ கல்வி இயக்ககத்திலிருந்து அவ்வப்போது அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலகங்களுக்கும்‌ சுற்றறிக்கைகள்‌ அனுப்பப்பட்டு வருகின்றன எனவும்‌, இருப்பினும்‌ இடைப்பட்ட பள்ளி நேரத்தில்‌ கீழ்க்காணும்‌ எதிர்பாராத விபத்துக்களினால்‌ பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு பலத்த காயங்கள்‌ அல்லது உயிர்‌ சேதம்‌ ஏற்படுகிறது எனவும்‌ தெரிவித்துள்ளார்‌ :-


💥 மாணவர்கள்‌ பள்ளிக்கு வந்து செல்லும்‌ போது ஏற்படும்‌ விபத்து.


💥 கல்விச்‌ சுற்றுலா செல்லும்‌ போது ஏற்படும்‌ விபத்து.

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

💥  நாட்டு நலப்பணித்‌ திட்டம்‌, தேசிய மாணவர்‌ படை, ஜுனியர்‌ ரெட்‌ கிராஸ்‌, பாரத சாரண / சாரணிய இயக்கம்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ மன்றங்கள்‌ மூலமாக நடைபெறும்‌ முகாம்‌ மற்றும்‌ பேரணிகளில்‌ கலந்து கொள்ளும்‌ போது ஏற்படும்‌ விபத்து.


💥 விளையாட்டு போட்டிகளில்‌ கலந்து கொள்ளும்போது ஏற்படும்‌ விபத்து.


💥 மின்கசிவு மற்றும்‌ ஆய்வகங்களில்‌ ஏற்படும்‌ விபத்து.

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

💥 விஷஜந்துக்களால்‌ ஏற்படும்‌ விபத்து.


💥 மாணவர்கள்‌ விடுமுறை நாள்களில்‌ வெளியே செல்லும்‌ போது நீர்நிலைகளால்‌ ஏற்படும்‌ விபத்து போன்றவை.

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

2) மேற்காணும்‌ சூழ்நிலையில்‌ தவிர்க்க முடியாமல்‌ மாணவ / மாணவியருக்கு விபத்துகள்‌ ஏற்பட்டு பாதிப்பு உண்டாகிறது எனவும்‌, இதனால்‌ குழந்தையை இழந்து பெற்றோர்கள்‌ மிகவும்‌ வேதனை அடைகின்றனர்‌ எனவும்‌, எனவே குழந்தையை இழந்து வாழும்‌ குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டியது அவசியமாகிறது எனவும்‌, இத்தகைய நிகழ்வுகளின்‌ போது பாதிப்பு அடையும்‌ மாணவ / மாணவியர்களுக்கும்‌ அல்லது உயிர்சேதம்‌ ஏற்படின்‌ அவர்களின்‌ குடும்பத்திற்கும்‌ உதவித்‌ தொகை வழங்குவது அவர்களுக்கு மிகவும்‌ பயனுள்ளதாக அமையுமென்பதால்‌, விபத்தில்‌ காயம்‌ அடையும்‌ அல்லது மரணமடையும்‌ பள்ளி மாணவர்களுக்கு பின்வருமாறு நிவாரணத்‌ தொகை நிர்ணயம்‌ செய்து மாணவ / மாணவியர்களின்‌ பெற்றோர்களுக்கும்‌ / பாதுகாவலர்களுக்கும்‌ அரசிடம்‌ பெற்று பள்ளிக்‌ கல்வி துறையின்‌ மூலம்‌ நிவாரணம்‌ வழங்கிட ஆணை வழங்குமாறு பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ அரசைக்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌:-

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

வ.                   விபத்தின்‌ தன்மை           இழப்பீடு

எண்‌


1)  விபத்தில்‌ மரணமடைந்த மாணவர்களுக்கு ரூ.1,00,000/-

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

2) விபத்தில்‌ பலத்த காயம்‌ அடைந்த மாணவர்களுக்கு  ரூ.50,000/-

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

3) விபத்தில்‌ சிறிய காயம்‌ அடைந்த மாணவர்களுக்கு ரூ.25,000/-

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

3. பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ கருத்துருவினை அரசு கவனமுடன்‌ பரிசீலனை செய்து அதனை ஏற்று, அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ / மாணவியர்கள்‌ எதிர்பாராத விபத்துக்களினால்‌ இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள்‌ ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும்‌ மாணவ / மாணவியர்களின்‌ குடும்பத்தினருக்கு நிவாரணத்‌ தொகை நிர்ணயம்‌ செய்து உயிரிழந்த / காயம்‌ அடைந்த மாணவர்களின்‌ பெற்றோர்கள்‌ / பாதுகாவலர்களுக்கு கீழ்க்கண்டவாறு நிவாரணத்‌ தொகை வழங்கலாம்‌ என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது :-

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html


(I) அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ / மாணவியர்கள்‌ எதிர்பாராத விபத்துக்களினால்‌ மரணம்‌ அடைந்தால்‌ ரூ.1,00,000/-ம்‌ (ரூபாய்‌ ஒரு இலட்சம்‌ மட்டும்‌), பலத்த காயமடைந்தால்‌ ரூ.50,000/-ம்‌ (ரூபாய்‌ ஐம்பதாயிரம்‌ மட்டும்‌ மற்றும்‌ சிறிய காயம்‌ அடைந்தால்‌ ரூ.25,000/-ம்‌ (ரூபாய்‌ இருபத்தைந்தாயிரம்‌ மட்டும்‌) என உயிரிழந்த / காயம்‌ அடைந்த மாணவர்களுடைய பெற்றோர்கள்‌ / பாதுகாவலர்களுக்கு நிவாரணத்‌ தொகை பள்ளிக்‌ கல்வித்‌ துறை மூலம்‌ வழங்கப்பட வேண்டும்‌.

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

॥) மாணவ / மாணவியர்களுக்கு, பள்ளிகளிலும்‌ / பள்ளி செல்லும்‌ போதும்‌ / சுற்றுலா செல்லும்‌ போதும்‌ / பள்ளியின்‌ செயல்பாடுகளின்‌ போதும்‌ / எதிர்பாராத விதமாக, விபத்துக்களினால்‌ மரணம்‌ / காயம்‌ ஏற்பட்டால்‌ நிவாரணம்‌ வழங்கப்‌ படவேண்டும்‌.

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html


தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராம கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்து - படுகாயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு (Chariot crashes at Madhealli Village Festival near Papparapatti in Dharmapuri District - Two deceased)...

 


தருமபுரி: தேர் சாய்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.


தருமபுரி மாவட்டம் மாதேஅள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தேர் சரிந்த விபத்து - படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.


படுகாயமடைந்த மனோகரன்(57), சரவணன்(50) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.


>>> தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராம கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்து - படுகாயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...


சென்னை - கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - காணொளிகள் (Chennai - Beach train station electric train derails - videos)...

 சென்னை - கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - காணொளிகள் (Chennai - Beach train station electric train derails - videos)...



>>> சென்னை - கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - காணொளி 1...



>>> சென்னை - கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - காணொளி 2...



>>> சென்னை - கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - காணொளி 3...

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்:1219, நாள்: 27-11-2021 (Rs.5,000 reward for hospitalization of road accident victims - Announcement by the Ministry of Road Transport and Highways - Tamilnadu Government Press Release No: 1219, Date: 27-11-2021)...



>>> சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்:1219, நாள்: 27-11-2021 (Rs.5,000 reward for hospitalization of road accident victims - Announcement by the Ministry of Road Transport and Highways - Tamilnadu Government Press Release No: 1219, Date: 27-11-2021)...

அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் – அரசாணை வெளியீடு...

 அரசாணை (நிலை) எண்.17, பள்ளிக் கல்வித் [பக5(2)] துறை, நாள்: 07-02-2018...

கல்வி – அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.Ms.No: 17 Dated: February 07, 2018...

>>> அரசாணை (நிலை) எண். 17. பள்ளிக் கல்வித் [பக5(2)] துறை, நாள்: 07-02-2018...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...