கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கப் பள்ளிகளுக்கு முதல் பருவத் தேர்வு விடுமுறை 12-10-2022 வரை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு (1st term examination holiday for primary schools likely to be further extended upto 12-10-2022)...








 தொடக்கப் பள்ளிகளுக்கு முதல் பருவத் தேர்வு விடுமுறை 12-10-2022 வரை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு (1st term examination holiday for primary schools likely to be further extended upto 12-10-2022)...


1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்த பிறகு, காலாண்டு விடுமுறை அக்டோபர் 1 முதல் அறிவிக்கப்பட்டது.


அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர்களுக்கு அக்டோபர் 6 - 8ம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்தவும் அறிவிக்கப்பட்டிருந்தது.



தற்போது, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  


இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS Guidelines regarding GPF Loan for all DDOs

 அனைத்து ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு GPF Loan தொடர்பான IFHRMS வழிகாட்டுதல் மதிப்பிற்குரிய ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர் அவர்களே, ...