கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதல் பருவ விடுமுறை மற்றும் எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையர் - செய்திக் குறிப்பு (Press Release - Director of Elementary Education and Commissioner of School Education regarding First Term Vacation and Ennum Ezhuthum Training)...



>>> முதல் பருவ விடுமுறை மற்றும் எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையர் - செய்திக் குறிப்பு (Press Release - Director of Elementary Education and Commissioner of School Education regarding First Term Vacation and Ennum Ezhuthum Training)...



 செய்திக்குறிப்பு


காலாண்டுத்‌ தேர்வு முடிவுற்று அளிக்கப்படவேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்களுக்கு, வழங்கப்படுகிறது. 30.09.2022 அன்று காலாண்டுத்‌ தேர்வு முடிந்தவுடன்‌ 01.10.2022 முதல்‌ 05.10.2022 வரை முதல்‌ பருவ விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


எண்ணும்‌ எழுத்தும்‌ முதற்கட்ட பயிற்சி தொடக்கக்‌ கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில்‌ அளிக்கப்பட்டதால்‌, அதற்கு பதிலாக ஈடுசெய்யும்‌ விடுப்பு அளிக்குமாறு தொடந்து ஆசிரியர்‌ சங்கங்களும்‌, ஆசிரியர்களும்‌ கேட்டுக்கொண்டதன்‌ அடிப்படையில்‌ 06/10/2022, 07/10/2022 மற்றும்‌ 08/10/2022 ஆகிய மூன்று நாட்களும்‌ ஈடுசெய்யும்‌ விடுப்பாக கருதப்படும்‌. (மீதமுள்ள 2 நாட்கள்‌ பின்பு ஈடு செய்யப்படும்‌.)


பள்ளிக்‌ கல்வி மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ உள்ள 6ம்‌ வகுப்பு முதல்‌ 12ம்‌ வகுப்புகளுக்கு அக்டோபர்‌ மாதம்‌ 10ம்‌ தேதி அன்று பள்ளிகள்‌ திறக்கப்படும்‌, தொடக்கப்‌ பள்ளிகளில்‌ 1ம்‌ வகுப்பு முதல்‌ 5ம்‌ வகுப்புகளை கையாளும்‌ ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10, 11, 12 தேதிகளில்‌ எண்ணும்‌ எழுத்தும்‌ இரண்டாம்‌ கட்ட பயிற்சி மாநிலக்‌ ௧ல்வி ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இயக்குநரின்‌ கடிதத்தில்‌ (ந.எண்‌.2411/ஈ2/ 2021, நாள்‌.26.09.2022) தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால்‌, 1ம்‌ வகுப்பு முதல்‌ 5ம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவர்களுக்கு மட்டும்‌ அக்டோபர்‌ 13ம்‌ தேதி பள்ளிகள்‌ திறக்கும்‌ என அறிவுறுத்தப்படுகின்றது.


தொடக்கக்கல்வி இயக்குநர் பள்ளிக்கல்வி ஆணையர்


------------

காலாண்டு விடுமுறை:


1 - 5 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12 முடிய விடுமுறை.


6 - 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9 முடிய விடுமுறை.


மீண்டும் பள்ளி திறக்கப்படும் நாள்:


1 - 5 வகுப்புகளுக்கு - 13.10.2022 (வியாழன்)


6 - 12 வகுப்புகளுக்கு - 10.10.2022 (திங்கள்)


எண்ணும் எழுத்தும் பயிற்சி:


10.10.2022 - 12.10.2022

(திங்கள் - புதன்)





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தங்க நகைக்கடன் : Reserve Bank வெளியிட்டுள்ள புதிய விதிகள்

தங்க நகைக்கடன் : ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிகள் Gold and jewellery loans: New rules issued by the Reserve Bank தங்க நகைக்கடன் தொட...