கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.09.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.09.2022 - School Morning Prayer Activities...


  திருக்குறள் :


பால்: பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: கயமை


குறள் : 1078

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ்.


பொருள்:

குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்


பழமொழி :

Even a King approve of wise man.


அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.


 2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன்.


பொன்மொழி :


உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே.. ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.


பொது அறிவு :


1.மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் என்ன? 


 ரிபஸ். 


 2.பாரமென்சியா என்றால் என்ன?


 மிகச்சிறந்த ஞாபகம்.


English words & meanings :


quin·tu·ple - consisting of five parts or things. Noun. My aunt gave birth to quintuple. ஐந்து மடங்கு. பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


 வல்லாரை கீரையில் ஜூஜூபோஜெனின், ஆல்கலாய்டுகள், ஹெர்பெஸ்டைனுடன் கூடிய டம்மரேன் வகையைச் சேர்ந்த ட்ரைடர்பெனோயின் சபோனின் போன்ற மூலக்கூறுகள் நிறைந்திருக்கின்றன. இவை நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கச் செய்யும்.


NMMS Q 63:


Kilogram : Weight :: Metre : ? a) Journey b) Road c) Cloth. d) Length.


 Answer : Length


நீதிக்கதை


மந்திர புல்லாங்குழல்


பரமக்குடி என்ற ஊரில் கதிரேசன் என்ற ஏழை இளைஞன் இருந்தார். அவர் பக்கத்து ஊரில் ஜம்பு என்ற ஜமிந்தாரிடம் வேலை பார்த்து வந்தார். கடுமையாக உழைத்தாலும் ஜமிந்தார் ஒன்றுமே கொடுக்க மாட்டார் சாப்பாடு மட்டுமே போடுவார். இருந்தாலும் தனக்கு வேலை கொடுத்த ஜமிந்தாருக்கு மிகவும் உண்மையாக உழைத்தார். ஜமிந்தார் கொடுப்பதில் தன் தாயாருக்கு பொருட்கள் வாங்கி கொடுத்து அனுப்புவார். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்து, பின்னர் தன் தாயை பார்க்க போவதாக ஜமிந்தாரிடம் சொன்னார் கதிரேசன். ஜமிந்தாருக்கு அவரை விட மனசு இல்லை. இருந்தாலும் போய் வா. இதோ இரண்டு ஆண்டுக்கான உன் கூலி என்று கூறி 5 செப்பு காசுகள் கொடுத்தார். 


முதலாளிக்கு நன்றி சொல்லிட்டு ஊருக்கு கிளம்பினார். அதே நேரம் அந்த ஊரில் ஒரு பெரிய திருடன் ஒருவன், ஜம்பு ஜமிந்தாரின் வீட்டை ரொம்ப நாட்களாக நோட்டம் போட்டுட்டு வந்தான். அப்போது முன்னர் ஜமிந்தார் வெளியே சென்ற நேரம் பார்த்து அவரது வீட்டில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து, அங்கே பாதுகாப்பாக வைத்திருந்த தங்க காசுகள், நகைகள் மற்றும் அனைத்து ஆபரணங்களையும் கொள்ளை அடித்து, பெரிய மூட்டை கட்டினான். இது போதாது என்று நினைத்து, கதிரேசன் கையில் இருக்கும் பொருட்களையும் பிடுங்க திட்டமிட்டான். எப்படி கதிரேசன் காட்டு வழியாகத் தான் நடந்து ஊருக்கு செல்வார். எனவே அங்கே அவரை அங்கேயே மடக்கி இருப்பதை திருடலாம் என்று நினைத்தான். குறுக்கு பாதையில் ஓடி காட்டில் ஒளிந்துக் கொண்டான்.


கதிரேசன் காட்டு வழியாக செல்லும் போது ஒரு இடத்தில் ஒரு குள்ளமான ஒருவர் கீழே விழுந்து கிடந்தார், அவரை ஓடி போய் தூக்கி, குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரத்தில் அந்த குள்ள மனிதர் கண் விழித்து பார்த்தார், அவரது தோற்றம் வேடிக்கையாக இருந்தது. நீண்ட வெண்ணிறத்தாடி, தலையில் கூம்பு வடிவில் தொப்பி. அய்யா, பெரியவரே! என்ன ஆச்சு, ஏன் மயங்கி கிடக்கிறீங்க. தம்பி, என்னை காப்பாற்றியதற்கு நன்றி, நான் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறேன், எனக்கு உன்னால் முடிந்த உதவியை செய்வாயாக. அய்யா, நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த வருமானம் இதோ இருக்குது, இதில் 2 செப்பு காசுகள் நீங்க வைத்துக் கொள்ளுங்க. 


தம்பி! உன் இரக்க குணம் என்னை மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. அதற்கு கை மாறாக நான் உனக்கு உதவ இருக்கிறேன். என்னிடம் சில மந்திர சக்திகள் இருக்கின்றன. அதனை பயன்படுத்த மற்றவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறேன். கதிரேசனுக்கு ஆச்சரியம், நம்பமுடியவில்லை. என்னடா இது, நாம இவருக்கு உதவினால் அவர் நமக்கு உதவுகிறாராம். அதுவும் மந்திர சக்தியால் புரியவில்லையே என்று திகைத்தார். 


தம்பி, சந்தேகம் வேண்டாம், உனக்கு உதவி செய்ய இருக்கிறேன், என்ன வேண்டும் கேள். அய்யா, எனக்கு இசையில் மிக்க ஆர்வம் உண்டு, நான் ஊதினால் இனிமையான இசை வரக்கூடிய ஒரு புல்லாங்குழல் கொடுங்க, அதை கேட்டவர்களும் மெய் மறந்து போகும் அளவுக்கு இருக்க வேண்டும். உடனே குள்ள மனிதர் கண்ணை மூடி ஏதோ மந்திரம் சொல்ல, கையில் அழகான புல்லாங்குழல் வந்தது, அதை அழகேசனுக்கு கொடுத்து, ஆசிர்வாதம் செய்து, வேறு வழியில் சென்று விட்டார். 


கதிரேசனும் மகிழ்ச்சியாக நடக்கத் தொடங்கினார். திடிரென்று அவர் முன்னால் பெரிய கத்தியோடு அந்த திருடன் வந்து நின்றான். மரியாதையாக உங்க முதலாளி கொடுத்த காசுகளை எனக்கு கொடு என்றான். கதிரேசனுக்கு பயம். ஏன் வீணாக திருடனிடம் சண்டை போட்டு உயிரை இழக்க வேண்டும் என்று நினைத்து பையில் இருந்த 2 செப்பு காசுகளை கொடுத்தான். என்ன 3 செப்பு காசா, அவர் 5 அல்லவா கொடுத்தார். தங்கம் கிடையாதா? அவன் வீட்டில் இத்தனை தங்கம் இருந்ததா? ஆமாம் மீதி 2 காசு எங்கே, அதையும் கொடு, இல்லை என்றால் கொன்று விடுவேன் என்றான். 


என்னிடம் 3 தான் இருக்குது, 2 ஒரு குள்ள மனிதருக்கு கொடுத்து விட்டேன். நான் நம்ப மாட்டேன். எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்? கதிரேசன் என்ன செய்வது என்று யோசித்தார், திருடனிடமிருந்து தப்பிக்க ஒரே ஒரு ஆயுதம், அந்த புல்லாங்குழல் தான். அதை உபயோகிக்கலாம் என்று முடிவு செய்து மீதி 2 காசு, இதுக்குள்ளே இருக்குது. இருங்கள் ஊதி எடுக்கிறேன் என்று கூறி புல்லாங்குழலை இசைக்கத் தொடங்கினார். அய்யா, அய்யா, தயவு செய்து புல்லாங்குழல் இசைப்பதை நிறுத்துங்க, இல்லை என்றால் நான் இறந்து போயிடுவேன். என்னால் வலி தாங்க முடியவில்லை. ஆடாமலும் இருக்க முடியவில்லை. நான் திருடியதை எல்லாம் உங்களுக்கே கொடுத்து விடுகிறேன் என்றான்.


அங்கே ஜமிந்தார் அய்யோ! எல்லாமே போய்விட்டதே, நான் சம்பாதித்தது எல்லாமே களவு போய்விட்டதே, நான் தவறாக சம்பாதித்தது முதல் எல்லாமே போய்விட்டதே, இனிமேல் நான் என்ன செய்வேன் என்று புலம்பிக் கொண்டிருந்தார். கதிரேசன் அவரை பார்த்து, அய்யா அழ வேண்டாம். திருடன் திருடியதை எல்லாம் நான் வாங்கி வந்து விட்டேன், அவனை காட்டில் கட்டி வைத்திருக்கிறேன். உடனே ஊர்க்காவலர்களை அழைத்துச் சென்று பிடியுங்கள். இதோ உங்க நகைகள், பணம், சரியாக இருக்கிறதா என்று பாருங்கள் என்றார்.


ஜமிந்தாருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை இத்தனை நாள் கொடுமைப்படுத்தியும், நேர்மையாக நடந்து கொண்ட அழகேசன் மீது மரியாதை ஏற்பட்டது, தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, அழகேசனுக்கு அந்த ஊரிலேயே பங்களா ஒன்றையும், நிறைய நிலங்களையும் கொடுத்து உதவினார். அழகேசனும் தன் தாயாருடனும், அற்புத புல்லாங்குழலுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.


இன்றைய செய்திகள்


20.09.22


* சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ராஜாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


* மானாமதுரை அருகே நிலக்கொடை குறித்த அரச முத்திரையுடன் கூடிய பிற்கால பாண்டியர் சூலக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


* ஈரோடு மாவட்ட மலைக்கிராமங் களைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளி செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாததால், பள்ளி இடைநிற்றல் அதிகரித்து வருகிறது.


* தமிழகத்தில் அக்டோபர் முதல் அரசு மருத்துவமனைகளில் புதன்கிழமையிலும், பள்ளிகளில் வியாழக்கிழமையிலும் கரோனா உள்ளிட்ட 13 வகையான தடுப்பூசிகள் போடப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* உலகின் பெரிய வைரம் கிரேட் ஸ்டாரை திருப்பி ஒப்படைக்க இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா வலியுறுத்தல்.


* துலீப் கோப்பை கிரிக்கெட் - அரைஇறுதியில் தென்மண்டலம் 645 ரன் வித்தியாசத்தில் வெற்றி.


* உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: பதக்கம் வென்ற பஜ்ரங், போகத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து.


Today's Headlines


* The President has ordered the appointment of Senior Justice T. Raja as the Chief Justice of Madras High Court.


* Later Pandyan flints bearing a royal seal of land grant have been found near Manamadurai.


 * School dropouts are on the rise due to lack of adequate transport facilities for students from the hilly villages of Erode district.


 * Health Minister M. Subramanian has said that 13 types of vaccinations including Corona will be administered in Tamil Nadu from October in government hospitals on Wednesday and in schools on Thursday.


 * South Africa urges England to hand over Great Star, the world's largest diamond.


 * Duleep Cup Cricket - South Zone win by 645 runs in semi-final.


 * World Wrestling Championship: PM Modi congratulates medal winners Bajrang, Bogat.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Google Meet for the month of November - Student Learning Survey Project - District Wise School Wise Teacher & Student Name List

 November மாதத்திற்கான Google Meet- மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் - மாவட்ட வாரியாக பள்ளி வாரியாக ஆசிரியர்கள் & மாணவர்கள் பெயர் பட்டியல் Go...