கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (20-09-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

செப்டம்பர் 20, 2022



நுட்பமான சிந்தனைகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கவலைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும். 


பரணி : ஆர்வம் அதிகரிக்கும். 


கிருத்திகை : இழுபறிகள் குறையும்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 20, 2022



பேச்சுத்திறமையின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத சிலரின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


ரோகிணி : புத்துணர்ச்சியான நாள்.


மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும். 

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 20, 2022



எண்ணிய சில காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியான வெளியூர் பயணங்கள் சாதகமாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். வாழ்க்கை துணையின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




மிருகசீரிஷம் : காரியசித்தி உண்டாகும்.


திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.


புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும். 

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 20, 2022



உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். புதிய வேலை நிமிர்த்தமான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் வெளியூர் தொடர்புகளால் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். வாய்ப்புகள் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




புனர்பூசம் : மந்தமான நாள்.


பூசம் : அனுகூலம் ஏற்படும். 


ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 20, 2022



வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்து மனம் மகிழ்வீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை உருவாக்கும். கல்வி பணிகளில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மகம் : சிந்தனைகள் மேம்படும்.


பூரம் : மகிழ்ச்சியான நாள்.


உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 20, 2022



உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருப்பவர்கள் மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் மேம்படும். விருத்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.


அஸ்தம் : ஆர்வம் உண்டாகும்.


சித்திரை : லாபம் மேம்படும்.  

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 20, 2022



தன்னம்பிக்கையுடன் சில முக்கிய முடிவினை எடுப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தொழிற்கல்வி சார்ந்த விஷயங்களில் அனுபவ அறிவு மேம்படும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். கவலைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


சுவாதி : அனுபவம் மேம்படும்.


விசாகம் : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 20, 2022



மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். புதிய நபர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : குழப்பம் நீங்கும்.


அனுஷம் : கவனத்துடன் செயல்படவும்.


கேட்டை : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 20, 2022



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மாணவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வாகனத்தை சீர் செய்வதற்கான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு துரிதம் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மூலம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


பூராடம் : மேன்மை உண்டாகும். 


உத்திராடம் : தெளிவு கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 20, 2022



மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான சில விஷயங்களை செய்து முடிப்பீர்கள். தாய்மாமனிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில் சார்ந்த பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். கூட்டாளிகளிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை குறைத்து கொள்வது நல்லது. நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அலைச்சல்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




உத்திராடம் : இழுபறிகள் அகலும்.


திருவோணம் : முதலீடுகள் அதிகரிக்கும். 


அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 20, 2022



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாடிக்கையாளர்களின் ஆதரவின் மூலம் தொழிலில் லாபம் மேம்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : லாபம் மேம்படும்.


பூரட்டாதி : சுபிட்சம் உண்டாகும். 

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 20, 2022



மனதில் புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




பூரட்டாதி : இடர்பாடுகள் குறையும். 


உத்திரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.


ரேவதி : இழுபறியான நாள்.

---------------------------------------



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...