கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.10.2022 - School Morning Prayer Activities...

 


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.10.2022 - School Morning Prayer Activities...


  திருக்குறள் :


பால் : அறத்துப்பால்


இயல்: பாயிரவியல்


அதிகாரம்: வான் சிறப்பு


குறள் : 20

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.


பொருள்:

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.


பழமொழி :

A brave man may fall, but he cannot yield.

வீழ்ந்தாலும் வீரன் அடி பணிய மாட்டான்



இரண்டொழுக்க பண்புகள் :


1. பள்ளியின் கட்டளைகளுக்கும் அரசு கட்டளைகளுக்கும் கீழ் படிவேன். 


2. அதுவே நானும், நாமும், நாடும் சிறக்க உதவும் என்று அறிவேன்.


பொன்மொழி :


பொது அறிவு :

1. மனிதனின் கற்ப காலம் எவ்வளவு ? 


280 நாட்கள். 


2. நம் உbloடம்பில் எத்தனை வியர்வை சுரப்பிகள் உள்ளன? 


20 லட்சம்.



English words & meanings :


Hy-dro-bio-lo-gy - study of aquatic or water organisms. Now a days people are more interested in hydro biology. Noun. நீர் வாழ் உயிரினங்கள் குறித்த அறிவியல்



ஆரோக்ய வாழ்வு :

நீரிழிவு நோயாளிகள் தவறாமல் கொத்தரவரங்காயை உட்கொள்ள வேண்டும். கொத்தவரங்காய் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட காய்கறி. இதனால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை. அதே போல் அதில் உள்ள டைனின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.



நீரிழிவு நோயாளிகள் தவறாமல் கொத்தரவரங்காயை உட்கொள்ள வேண்டும். கொத்தவரங்காய் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட காய்கறி. இதனால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை. அதே போல் அதில் உள்ள டைனின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.





NMMS Q :


ஒரே வரிசையில் உள்ள 8 வீடுகளில் எத்தனை பொதுச் சுவர்கள்இருக்கும்? 


விடை: 7


நீதிக்கதை


நரிக்குட்டி சிங்கக் குட்டியாகாது


ஒரு பெரிய கானகத்தில் ஆண் சிங்கம் ஒன்றும், ஒரு பெண் சிங்கம் ஒன்றும் சேர்ந்து வாழ்ந்து வந்தன. எப்போதும் இரண்டும் இணையாகவே சென்று வேட்டையாடி சாப்பிட்டு வந்தன. அந்தச் சிங்கத் தம்பதியருக்கு இரண்டு குட்டிகள் பிறந்தன. அதனால், ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு தான் மட்டும் வேட்டைக்குச் சென்று பெண் சிங்கத்திற்கும் குட்டிகளுக்கும் இரைகளைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தது. 


ஒரு நாள் அந்த ஆண் சிங்கத்துக்கு ஒரேயொரு நரிக்குட்டி மட்டும் தான் கிடைத்தது. அது அந்த நரிக்குட்டியைக் கொண்டு வந்து பெண் சிங்கத்திடம் கொடுத்தது. 


பெண் சிங்கம் நரிக்குட்டியின் மீது இரக்கப்பட்டு உண்ணாமல் தன் சிங்கக் குட்டிகளோடு இணைத்து வளர்த்து வந்தது. 


நன்றாக வளர்ந்த அந்த மூன்று குட்டிகளும் ஒரு நாள் காட்டிற்குள் வேட்டையாடச் சென்றன. வழியில் ஒரு பெரிய யானையைப் பார்த்ததும் நரிக்குட்டி பயந்துவிட்டது. அது அங்கிருந்து ஓடியது. அதனைப் பார்த்த இரண்டு சிங்கக் குட்டிகளும் அதன் பின்னாலேயே ஓடிவந்து குகைக்குள் ஒளிந்துக் கொண்டது. 


இதனைப் பார்த்த பெண் சிங்கம் நடந்ததைத் தன் குட்டிகளிடம் விசாரித்தது. யானையைப் பார்த்து இவன் பயந்து விட்டான். அதனால் நாங்களும் இவன் பின்னாலேயே வந்து விட்டோம் என்றன. 


பின்னர் சிங்கக் குட்டிகள் இரண்டும் நரியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தன. உடனே நரிக்குக் கோபம் வந்து விட்டது. உடனே பெண் சிங்கத்திடம், இவர்கள் ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்? நான் எந்த விதத்தில் இவர்களைவிடத் தாழ்ந்தவன்? நான் இவர்களை வெல்வேன் என்று கூறியது. 


பெண் சிங்கம் நரியைத் தனியே அழைத்துச் சென்று, நீ சிங்கக் குட்டி அல்ல. நீ நரிக்குட்டி. யானையை வெல்லும் தீரமும் வீரமும் நரிக்கு எப்படி இருக்கும்? நரிக்குட்டிச் சிங்கக் குட்டிகளுடன் வளர்வதனாலேயே அது சிங்கக் குட்டியாகிவிடுமா? நீ நரி என்பதனை இவர்கள் அறிந்து கொள்வதற்கு முன்னர், நீ இங்கிருந்து ஓடிச் சென்று தப்பித்துக்கொள் என்று எச்சரித்தது. உடனே அந்த நரிக்குட்டி அங்கிருந்து ஓடிவிட்டது. 


நீதி :

அறிஞர்கள் அமர்ந்திருக்கும் சபையில் நீயும் அமர்ந்திருப்பதால் மட்டும் நீ அறிஞன் ஆகி விட முடியாது. அறிஞன் அறிஞன் தான். நீ நீ தான்.


இன்றைய செய்திகள்


19.10.22


* பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் தாக்கும் மனநிலையில் உள்ள மாணவர்களை நல்வழிப்படுத்த நன்னெறி கல்வி புகட்ட வேண்டியது அவசியம் என உயர் நீதிமன்றக் கிளை கூறியுள்ளது.


* ஜெயலலிதா மரணம்: சசிகலா உட்பட 4 பேர் மீது விசாரணைக்கு உத்தரவிட ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை.


* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இந்த சம்பவத்தில் காவல்துறை தனது அதிகாரத்தையும் வரம்பையும் மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


* தலைமைச் செயலக பணிக்காக டிஎன்பிஎஸ்சி குரூப் - 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அமைச்சுப் பணி உதவியாளர்கள் இலவச பயிற்சிக்கு வரும் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்.


* தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்.


* நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் நவ. 9-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.


* உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் காரணமாக, கீவ் உள்ளிட்ட நகரங்கள் மின் தடையால் இருளில் மூழ்கியுள்ளன.


* இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக ரோஜர் பின்னி இன்று அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


*போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.


* கால்பந்து போட்டியின் உயரிய விருதை வென்றார் பிரான்ஸ் வீரர் கரிம் பென்சிமா.


Today's Headlines


* Moral education is a must for students who are in the mentality to attack and retaliate against parents and teachers - advice by the high court branch.


* The Aruna Jagatheesan Commission which is set to enquire about the Shooting incident at Tuticorin submitted its report to the Legislative Assembly. That it condemned Police Department that the Police Department crossed its limit of authority and misused its power.


*  Those who applied for group 5A for working in Secretariat can apply for free coaching before the 26th.


*There may be heavy rains for 3 days in Tamilnadu information by Chennai Metrology Department


*T. Y. Chandrasoot is appointed as the 50th Chief Justice. He will take office on November 6th


 *Roger Binny is appointed today as the ICC Chairman.


* Poland player Iga Swiyatech ranks first in the Ladies' Tennis ratings list


* France player Karim Pencima won the highest award in the football play.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...