கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசாணை (நிலை) எண்‌.21, மாற்றுத்‌ திறனாளிகள்‌(மா.தி.ந-3.2) நலத்துறை, நாள்‌:30.05.2017ன் படி மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பணிகளில்‌ 4% இடஒதுக்கீடு உறுதிபடுத்தப்பட வேண்டும் - ஆணையர் கடிதம் (According to G.O (Ms) No.21, Persons with Disabilities Welfare Department, Dated: 30.05.2017 - 4% reservation should be ensured for Differently Abled (persons with disabilities) in Government Jobs - Commissioner's letter) ந.க.எண்‌.7809/ பணியமர்த்தல்‌/2022, நாள்‌ . :10.2022...


>>> அரசாணை (நிலை) எண்‌.21, மாற்றுத்‌ திறனாளிகள்‌(மா.தி.ந-3.2) நலத்துறை,  நாள்‌:30.05.2017ன் படி மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பணிகளில்‌ 4% இடஒதுக்கீடு உறுதிபடுத்தப்பட வேண்டும் - ஆணையர் கடிதம் (According to G.O (Ms) No.21, Persons with Disabilities Welfare Department, Dated: 30.05.2017 - 4% reservation should be ensured for Differently Abled (persons with disabilities) in Government Jobs - Commissioner's letter) ந.க.எண்‌.7809/ பணியமர்த்தல்‌/2022, நாள்‌ . :10.2022...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




அனுப்புநர்

திருமதி.ஜெசிந்தா லாசரஸ்‌. இ.ஆ.ப. 

மாற்றுத்திறனாளிகள்‌ நல ஆணையர்‌, 

மாற்றுத்திறனாளிகள்‌ நல ஆணையரகம்‌.

லேடி வெலிங்டன்‌ கல்லூரி வளாகம்‌,


பெறுநர்

அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள்‌.


ந.க.எண்‌.7809/ பணியமர்த்தல்‌/2022, நாள்‌ . :10.2022.

அய்யா/அம்மையீர்‌,


பொருள்‌: மாற்றுத்திறனாளிகள்‌ நல ஆணையரகம்‌ - சென்னை- 05 - பணியமர்த்தல்‌ பிரிவு - வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை - கிராம உதவியாளர் பணிக்கான அறிவிப்பு 2022 - மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016ன் படி மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு பின்பற்றக் கோருதல் தொடர்பாக...


பார்வை: 

1. Additional Chief Secretary, Commissioner of Revenue Administration Lr.No. Ra II(2) /01-04/468/2022. dated 20-09-2022


2. வட்டாட்சியர்‌ அலுவலகம்‌. திருப்பத்தூர்‌ மாவட்டம்‌, அறிக்கை எண்‌/அ2/4113/2022, நாள்‌. 10.10.2022.

3. வட்டாட்சியர்‌ அலுவலகம்‌, வேலூர்‌ மாவட்டம்‌, அறிவிக்கை எண்‌/01/2022. நாள்‌. 10.10.2022.


பார்வை 1ல்‌ குறிப்பிடப்பட்டுள்ள 28.09.2022 நாளிட்ட கடிதத்தில்‌, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறையில்‌ காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர்‌ காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக வட்டாட்சியர்‌ அளவில்‌ விளம்பரம்‌ செய்து உரிய அரசு விதிமுறைகளைப்‌ பின்பற்றி காலிப்பணியிடங்களை நிரப்பிடுமாறு வருவாய்‌ நிர்வாக ஆணையர்‌ அவர்களால்‌ அனைத்து மாவட்ட ஆட்‌சித்தலைவர்களுக்கு கடிதம்‌ அனுப்பப்பட்டுள்ளது.


அதனைத்தொடர்ந்து. மாவட்டங்களில்‌ உள்ள கிராம உதவியாளர்‌ காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக வட்டாட்சியர்‌ அளவில்‌ அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.  வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில்‌ காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பத்தில்‌ மாற்றுத்திறன்‌ குறித்த விவரங்கள்‌ தெரிவிக்கப்படவில்லை எண மாற்றுத்திறனாளிகள்‌ இவ்வாணையரகத்தை அணுகியுள்ளனர்‌.


மேற்கண்ட மனுக்கள்‌ மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆராய்ந்த போது ஒரு சில மாவட்டங்களில்‌ வட்டாட்சியர்களால்‌ வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில்‌ அரசாணை (நிலை) எண்‌.21, மாற்றுத்‌ திறனாளிகள்‌(மா.தி.ந-3.2) நலத்துறை,  நாள்‌:30.05.2017ல்‌ குறிப்பிடப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின்‌ வகைகேற்ப (Disability Types) அறிவிப்பு வெளியிடப்படவில்லை. மேற்காண்‌ பதவிக்கு மாற்றுத்திறனாளிகள்‌ இடஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கு இன சுழற்சி முறை பின்பற்றப்படுகிறது என அறிய முடிகிறது. இவ்வறிவிப்பில் மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு அரசிடமிருந்து விலக்கு அளித்து ஆணை பெறப்படாத நிலையில் கீழ்க்கண்டவாறு இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.


அரசாணை (நிலை) எண்‌:21, மாற்றுத்‌ திறனாளிகள்‌(மா.தி.ந-32) நலத்துறை,  நாள்‌.30.05.2017ல்‌ தெரிவித்துள்ளவாறு. மாற்றுத்திறனாளிகள்‌ உரிமை சட்டம்‌ 2016 பிரிவு 34-ன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பணிகளில்‌ 4% இடஒதுக்கீடு கீழ்கண்டவாறு உறுதிபடுத்தப்பட வேண்டும்‌.


Blindness and low vision - 1%


Deaf and hard of hearing - 1%


Locomotor disability including cerebral palsy, leprosy cured, dwarfism, acid attack victims and muscular dystrophy, Autism, intellectual disabiity, specific learning disability and mental liness - 1%


and


Multiple disabilities from amongst persons mentioned above including deaf-biindness in the posts identified for each disabilities -1%


எனவே, அரசாணையில்‌ தெரிவித்துள்ள மாற்றுத்திறன்‌ தன்மைகளின்‌ (Disability Categories) அடிப்படையில்‌, கிராம உதவியாளர்‌ பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்திட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது..


மாற்றுத்திறனாளிகள்‌ நல ஆணையர்‌




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...