கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆன்லைன் மற்றும் ஓ.டி.பி. கொடுப்பதன் மூலம் உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் பறிபோனால், உடனே 155260 என்ற எண்ணை அழையுங்கள். 24 மணி நேரத்திற்குள் போன் செய்தால் உங்கள் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு (If your bank account is debited by making a payment in Online and OTP, Call 155260 immediately. If you call within 24 hours you can get your money back)...

வங்கிக் கணக்கில் மோசடி; வாடிக்கையாளர் பணத்தை மீட்க ‘155260’ ஹெல்ப் லைன் அறிமுகம்: சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை...

வங்கிக் கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை நூதன முறையில் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘‘வங்கியில் இருந்து மேலாளர் பேசுகிறேன். உங்களது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு காலாவதியாகப் போகிறது. உடனே புதுப்பிக்காவிட்டால், கார்டு செயலிழந்து விடும்’’ என்று கூறி, வாடிக்கையாளர்களின் கார்டு எண், ரகசிய எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொள்வார்கள்.

பிறகு, போலி கார்டு தயாரித்து,வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை சுருட்டி விடுவார்கள். இதுகுறித்துபாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் போலீஸாரிடம் புகார் அளித்தாலும், இழந்த பணத்தை திரும்ப பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது.

இதை தடுக்க சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, ‘155260’ என்ற உதவி எண் (ஹெல்ப்லைன்) சைபர் க்ரைம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சைபர் க்ரைம்காவல் ஆய்வாளர் கார்த்திகேயன்கூறும்போது, "வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பறிபோகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணத்தை இழந்தவர்கள்ஹெல்ப் லைன் எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தால், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டு விடலாம்" என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...