கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்கள் மாற்றம்‌ செய்யப்பட்ட ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு நவம்பர்‌ 2022 மாதம்‌ ஊதியம்‌ மற்றும்‌ பிற பணப்பலன்கள்‌ பெற்று வழங்க அறிவுறுத்தல் - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ (Instructions for payment of salary and other benefits for the month of November 2022 to the teachers in the Unions where Block Educational Officers have been transferred - Proceedings of the Director of Elementary Education, TamilNadu) ந.க.எண்‌.28688/ஐ1/2022, நாள்‌: 29.11.2022...


>>> வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்கள் மாற்றம்‌ செய்யப்பட்ட ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு நவம்பர்‌ 2022 மாதம்‌ ஊதியம்‌ மற்றும்‌ பிற பணப்பலன்கள்‌ பெற்று வழங்க அறிவுறுத்தல் - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ (Instructions for payment of salary and other benefits for the month of November 2022 to the teachers in the Unions where Block Educational Officers have been transferred - Proceedings of the Director of Elementary Education, TamilNadu) ந.க.எண்‌.28688/ஐ1/2022, நாள்‌: 29.11.2022...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.28688/ஐ1/2022, நாள்‌: 29.11.2022...


 பொருள்‌: தொடக்கக்‌ கல்வி - நிர்வாக சீரமைப்பு - வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்களை தேவையுள்ள ஒன்றியங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது -  பணியிடம்‌ மாற்றம்‌ செய்யப்பட்ட ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு அக்டோபர்‌ 2022 மாதம்‌ பின்பற்றப்பட்ட நடைமுறையின்‌ படி ஊதியம்‌ பெற்று வழங்க வட்டாரக்‌ கல்வி அலுவலர்களை அறிவுறுத்த தெரிவித்தல்‌ - தொடர்பாக


பார்வை: 

1. அரசாணை (நிலை) எண்‌:84, பள்ளிக்‌ கல்வித்‌ (பக(1)) துறை, நாள்‌.09.09.2022

2. தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.26666/ஐ1/2022, நாள்‌.23.09.2022

3. தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.229610/சி2/2022, நாள்‌:10.10.2022

4, தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.28688/ஐ1/2022, நாள்‌:10.10.2022


பார்வை 1 இல்‌ கண்டுள்ள அரசாணையில்‌ பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ளவும்‌, மாணாக்கர்களுக்கு சிறந்த கல்வியினை வழங்கும்‌ பொருட்டும்‌ பள்ளிக்‌ கல்வி துறையில்‌ உள்ள நிர்வாகத்தினை சீரமைத்து ஆணை வழங்கப்பட்டது. 


மேற்கண்ட நிர்வாக சீரமைப்பினை தொடர்ந்து, பார்வை 1 இல்‌ கண்டுள்ள அரசாணையில்‌ அனுமதிக்கப்பட்ட 75 வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்களை தேவையுள்ள ஒன்றியங்களுக்கு பகிர்ந்தளித்தும்‌, உபரியாக கண்டறியப்பட்ட 47 வட்டாரக் கல்வி அலுவலர்‌ பணியிடத்திகனை தேவைப்படும்‌ ஒன்றியங்களுக்கு பணியிடம்‌ மாற்றம்‌ செய்தும்‌ பார்வை 2 இல்‌ கண்டுள்ள செயல்முறைகளின்‌ வாயிலாக ஆணையிடப்பட்டது.


வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடம்‌ என்பது அப்பணியிடத்தின்‌ ஆளுமையின்‌ கீழ்‌ உள்ள பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலகப் பணியாளர்களுக்கு ஊதியம்‌ பெற்று வழங்கும்‌ பணியிடமாகும்‌.


வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடம்‌ மாற்றம்‌ செய்யப்பட்ட ஒன்றியத்தில்‌ அப்பணியிடத்திற்கென புதியதாக DDO Code மற்றும்‌ IFHRMS Office Code ஆகியவை பெறப்படவேண்டும்‌. மேலும்‌, ஒன்றியங்களில்‌ கூடுதலாகப் பெறப்பட்ட வட்டாரக்‌ கல்வி அலுவலரின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ சில பள்ளிகளை கொண்டு வந்து, அப்பள்ளிகளில் பணிபுரியும்‌ ஆசிரியர்களை கூடுதலாக அனுமதிக்கப்பட்ட வட்டாரக்‌ கல்வி அலுவலரின்‌ DDO Codeயின்‌ கீழ்‌ IFHRMS மூலம்‌ Post Mapping செய்த பின்னர்தான்‌ அவர்களுக்கு ஊதியம்‌ மற்றும்‌ பிற பணப்பலன்கள்‌ பெற்று வழங்க இயலும்‌.


மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள கால அவகாசம்‌ தேவைபடுவதால்‌, கூடுதலாக வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடம்‌ அனுமதிக்கப்பட்ட ஒன்றியங்களில்‌ ஏற்கனவே பணிபுரியும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்களே அவ்வொன்றியத்தில்‌ உள்ள ஆசிரியர்களுக்கு நவம்பர்‌ 2022 மாத (30.11.2022) ஊதியம்‌ பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ (தொடக்கக்‌ கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்‌.


தொடக்கக்கல்வி இயக்குநர்

பெறுநர்
சார்ந்த மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ (தொடக்கக்‌ கல்வி)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...