கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் (Regularisation / Selection Grade / Special Grade - Attachments to be enclosed with applications of Teachers while sending - Proceedings of District Education Officer (Elementary Education))...


>>> பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - கரூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் (Regularisation / Selection Grade / Special Grade - Attachments to be enclosed with applications of Teachers while sending - Proceedings of  Karur District Education Officer (Elementary Education))...



>>> பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் (Regularisation / Selection Grade / Special Grade - Attachments to be enclosed with applications of Teachers while sending - Proceedings of Thiruvallur District Education Officer (Elementary Education))...



>>> பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் (Regularisation / Selection Grade / Special Grade - Attachments to be enclosed with applications of Teachers while sending - Proceedings of Tiruvannamalai District Education Officer (Elementary Education))...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு,


பணிப் பதிவேட்டில் விடுதல் பதிவுகள் இருப்பின் அதற்குரிய சான்றுகளின்  நகல்களுடன் வட்டாரக் கல்வி அலுவலருக்கு கடிதம் அளிக்க வேண்டும். (சான்றுகளின் நகல்களில் வட்டாரக் கல்வி அலுவலரிடம் சான்றொப்பம் பெற வேண்டும்)


பணிவரன்முறை , தேர்வு நிலை, சிறப்பு நிலை, மறு மதிப்பீடு , இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகளைதல் போன்றவற்றிற்கு மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பும் போது முதன்மையாக கீழ்க்கண்ட பதிவுகள் இல்லை எனில், பணிப்பதிவேடு மீண்டும் வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு திருப்பப்படும் சூழல் உருவாகும்.


பணிப்பதிவேட்டில் முக்கியமாக கவனிக்க வேண்டிய பதிவுகள்:


1. உயர் கல்வி துறை அனுமதி விவரங்கள்


2. உயர் கல்வி பட்டப் படிப்பு விவரங்கள் (பட்டச் சான்று விவரம்)


3. உண்மைத்தன்மை சான்றுகள் விவரம் (10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஆசிரியர் கல்வி மற்றும் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ,  இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள், இளம் கல்வியியல், முதுநிலை கல்வியியல், மெய்மவியல் , ஆய்வியல் உள்ளிட்டவை)


4. குடும்ப விவரங்கள்


5. வாரிசு நியமனம்


6. மகப்பேறு விடுப்பு விவரம்


7. இடமாறுதல் பெற்ற விவரம்


8. ஊதியமில்லா விடுப்பு / அரைச் சம்மள விடுப்பு விவரம்


9. பதவி உயர்வு பெற்ற விவரம்


10. ஊதிய நிர்ணய விவரம் (ஊக்க ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை, இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு)


11. பணிவரன்முறை விவரம்


12 .தகுதிகாண் பருவம் முடித்த விவரம்


13. ஊதிய குழு நடைமுறைபடுத்தும்போது புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட விவரம்


14. போராட்டக்காலம்


15. போராட்டக் காலத்தை வரன்முறைப் படுத்திய விவரம்


16 . அயல் மாநிலப் பட்டப் படிப்புயெனில் மறுமதிப்பீட்டு ஆணை விவரம்


17. ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு கணக்கீடு விவரம்


18. தணிக்கைத் தடையினால் கருவூலக்கணக்கிற்கு  பணப் பயன் திரும்ப செலுத்தப்பட்ட விவரம் (கருவூல செலுத்துச் சீட்டு ஒட்டப்பட வேண்டும் )


19. ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவரம்


20. பணி முறிவு காலங்கள் ( உரிய ஆணைகளின் விவரங்கள்)


21. பதவி இறக்கம் செய்யப்பட்ட  விவரம்


22. தொகுப்பு ஊதியத்தில் (மதிப்பு ஊதியம்) இருந்து காலமுறை ஊதியம்  நிர்ணயம் செய்யப்பட்ட ஆணை விவரம்


💁🏻‍♂️தேர்வு நிலை / சிறப்பு நிலை / பணிவரன்முறை கருத்துருவுடன் இணைக்கபட வேண்டியன:


அ) ஆணைகளின் நகல்கள் (2):


1. முதல் பணி நியமன ஆணை நகல்

(மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறைகள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறைகள் )


2. பணிவரன்முறை ஆணை நகல்


3. தகுதி காண் பருவ ஆணை நகல்


4. ஊக்க ஊதிய உயர்வு ஆணை நகல்


5. தேர்வு நிலை ஆணை நகல்


6. ஊதிய நிர்ணய ஆணைகள் நகல் (தேர்வு நிலை / பதவி உயர்வு)


7. இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் ஆணை நகல் (செய்யப்பட்டிருப்பின்)


8. பதவி உயர்வு ஆணை நகல்


9.பதவி உயர்வு பணிவரன்முறை ஆணை நகல்


10. இடமாறுதல் ஆணை நகல் (விருப்ப மாறுதல் / நிர்வாக மாறுதல் / மனமொத்த மாறுதல்)


11. அயல் மாநில கல்விச்சான்று எனில் மறுமதிப்பீடு ஆணை நகல்


12. பதவி உயர்வு பெற்று பதவி இறக்கம் செய்யப்பட்டதற்கான  ஆணை நகல் மற்றும் மீள் ஊதிய நிர்ணய ஆணை நகல் (அனைவருக்கும் பொருந்தாது)



ஆ) கல்விச்சான்றுகளின் நகல்கள் (2) :


1. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் உண்மைத்தன்மை சான்றின் நகல்


2. 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் உண்மைத்தன்மை சான்றின் நகல்


3. ஆசிரியர் கல்வி மற்றும் பட்டயப் படிப்பு (DTEd) முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் உண்மைத்தன்மை சான்றின் நகல்


4. ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி  சான்றின் நகல் மற்றும் உண்மைத்தன்மை சான்றின் நகல்


5. உயர் கல்வி துறை முன் அனுமதி ஆணை நகல் (இளநிலை)


6. மதிப்பெண் பட்டியல்கள் நகல் (இளநிலை)


7. பட்டச் சான்றின் நகல் (இளநிலை)


8. உண்மைத்தன்மை சான்றின் நகல் (இளநிலை)


9. உயர் கல்வி துறை முன் அனுமதி ஆணை நகல் (இளங் கல்வியியல் - பி.எட்)


10. மதிப்பெண் பட்டியல்கள் நகல் (பி.எட்)


11.பட்டச் சான்றின் நகல்(பி.எட்)


12. உண்மைத்தன்மை சான்றின் நகல்(பி.எட்)


13. முன் அனுமதி ஆணை நகல் (முதுநிலை )


14. மதிப்பெண் பட்டியல் நகல் (முதுநிலை )


15. பட்டச் சான்றின் நகல் (முதுநிலை )


16. உண்மைத்தன்மை சான்றின் நகல் (முதுநிலை )



இ) பணிப் பதிவேட்டின் நகல்கள் (2) :


1. தன் விவரம் (3, 4 ஆம் பக்கம் )


2. பணி நியமன விவரம் பதிவு செய்யப்பட்ட பக்க நகல்


3. தகுதி காண் பருவம் பதிவு செய்யப்பட்ட பக்க நகல்


4. பதவி உயர்வு விவரம் பதிவு செய்யப்பட்ட பக்க நகல்


5. பதவி உயர்வு பணிவரன்முறை செய்யப்பட்ட பக்க நகல்


ஈ) கருவூல செலுத்துச் சீட்டு நகல் (கருவூல கணக்கில் பணம் செலுத்தியிருப்பின்)



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

27-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் குறள் எண்:956 அதிகாரம...