கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சிறப்பு நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறப்பு நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வந்தது ரூ.6000 போனது ரூ.7000 - சிறப்பு நிலை பெற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சி



வந்தது ரூ.6000 போனது ரூ.7000 - சிறப்பு நிலை பெற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சி


* 20 ஆண்டு பணிக்கால நிறைவில் சிறப்பு நிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்த மாதம் இரண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு அகமகிழ்ந்து இருந்தார்கள். ஆனால் ஊதியம் வங்கியில் வரவு வைக்கப்பட்ட போது அவர்களுக்கு இதயத்தில் இடி இறங்கியது போல் கடந்த மாதங்களைக் காட்டிலும் ஊதியத்தொகை குறைந்து இருந்தது.


* இரண்டு ஊதிய உயர்வுகள் பெற்று ஊதியம் பெருமளவில் உயர்ந்து இருக்கும் என்ற எண்ணத்தில் வங்கி கணக்கை பார்த்தால் கடந்த மாதத்தை விட ஆயிரம் ரூபாய் குறைந்து இருந்தது. காரணத்தை தேடிய பொழுது வருமான வரி தொகையாக ஏழாயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது தெரியவந்தது


* இதுவரை வருமான வரி உச்சவரமான 12 லட்சத்திற்கு கீழ் வருமானம் பெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் சிறப்பு நிலை ஊதிய உயர்வுகள் பெற்றதன் மூலமாக 12 லட்சத்தை கடந்து ஊதியம் பெற்றதால் அவர்களுக்கு 4 லட்சத்திலிருந்து வருமான வரி கணக்கிட்டு ரூபாய் 7000 இந்த மாதம் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இனி இது மாதா மாதம் தொடரும்.


* இரண்டு ஊதிய உயர்வுகள் பெற்றும் வங்கிக்கணக்கில் ஊதியம் குறைந்து போனதால் இடைநிலை ஆசிரியர்கள் வருத்தத்துடன் உள்ளனர்.


கையில வாங்கினேன், பையில போடல... காசு போன இடம் தெரியல...


சிறப்பு நிலை ஆணை வழங்க சிறப்பு முகாம் - இயக்குநர் உத்தரவு




இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி சிறப்பு நிலை ஆணை வழங்க தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 010190/ டி1/ 2026, நாள் : 03-06-2026 வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.


ந.க.எண். 010190/டி1/2026, நாள் : 03.06.2026


பொருள்: தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணிகள் - தொடக்கக் கல்வி இயக்கக்கத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்க /நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் - இடைநிலை ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அனுமதிக்க கோரும் - விண்ணப்பம் -தொடர்பாக.


பார்வை:


சங்கத்தினர்களிடமிருந்து .02.06.2026. வரப்பெற்ற கோரிக்கை மனு,


பள்ளிக் கல்வித் துறையில் 2004, 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் இளநிலை, இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டு பின்னர் அரசாணை நிலை எண்.99, பள்ளிக் கல்வி (வ.செ.) துறை, நாள்.27.06.2006-ன்படி 01.06.2006 முதல் காலமுறை ஊதியத்தில் பணிவரன்முறை செய்யப்பட்டனர்.


மேற்கண்டவாறு பணிவரன்முறை செய்யப்பெற்ற ஆசிரியர்களுக்கு முறையே 01.06.2016-ல் தேர்வுநிலை 01.06.2026 -ல் சிறப்பு நிலை பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு உரிய ஆணை பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பார்வையில் கண்டவாறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.


மேற்காண் ஆசிரியர் சங்கத்தினரின் கோரிக்கையினை பரிசீலனை செய்யும் வகையில் 01.06.2026-ல் சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தி பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் ஆணை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


இச்சிறப்பு நிலை வழங்கும் நிகழ்வுகளிலிருந்து புகார்கள் ஏதும் பெறப்பட்டால் தொடர்புடைய அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சிறப்பு நிலை வழங்கும் நிகழ்வினை மாவட்டக் கல்வி அலுவலர் பார்வையிட்டு துரிதமாக வழங்குவதற்கான அறிவுளைகளை / வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குநருக்காக


பெறுநர்:


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)



01-06-2026ல் சிறப்புநிலை பெறுபவர்களுக்கான தகவல்கள்



 01-06-2026ல் சிறப்புநிலை (Special Grade) பெறுபவர்களுக்கான தகவல்கள்


நண்பர்களே வணக்கம் 🙏


💐💐💐


2003-04, 2004-05, 2005-06 தொகுப்பூதிய நியமனம்.

 01/06/2006 பணி வரன் முறை ஆசிரியர்களுக்கு


இன்றுடன் இருபது ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்கிறீர்கள்


நாளை 01/06/2026 இல் 

(அதே பதவியில்  இருப்பவர்களுக்கு SPL grade) *சிறப்பு நிலை* வருகிறது...



 * கருத்துருக்கள்

1) படிவம்

2) பதிவுத் தாள் ( record sheet)

3) பணிக் கால கணக்கீட்டு தாள்

4) பணிக் கால சரிபார்ப்பு விவரங்கள்

5) விடுப்பு விவரங்கள்

6) போராட்டத்தில் பங்கேற்பு/முறைப்படுத்தப் பட்ட விவரங்கள்

7) Special Report (சில மாவட்டங்களில் கேட்கப் படுகிறது)

8) ஒருங்கிணைந்த சான்று

9) சார்ந்த ஆசிரியர் விண்ணப்பம் 🙏


மேலே உள்ள கருத்துருக்கள் உடன் இணைக்கப்பட வேண்டியவை


1) SR Page 1&2

2) நியமன ஆணை

3) நியமனம் ஆணை SR Entry page

4) பணி வரன் முறை ஆணை

5) பணி வரன் முறை SR Entry page

6) தகுதி காண் பருவம் ஆணை

7) தகுதி காண் பருவம் SR Entry page

8) தேர்வு நிலை ஆணை

9) தேர்வு நிலை ஆணை SR Entry page

10) SSLC Mark sheet

11) SSLC Genuineness

12) SR Entry page

13) HSC Mark sheet

14) HSC Genuineness

15) SR Entry page

16) UG convocation

17) UG Genuineness

18) SR Entry page

19) PG convocation

20) PG Genuineness

21) SR Entry page

22) B.Ed convocation

23) B.Ed Genuineness

24) SR Entry page 

( SSLC to B.Ed Genuineness SR இல் ஒரு பக்கத்தில் பதிவு செய்து இருந்தால் ஒரு முறை வைத்தால் போதும்...) 


இவை அனைவருக்கும் பொதுவானது


இது தவிர சிலருக்கு


25) SSLC/HSC இல் தமிழ் படிக்காதவர்கள், TNPSC second class Lang test pass details/ SR Entry page


26) other state Degree எனில் Evaluation ( மதிப்பீடு) by DEO ஆணை / அதன் SR Entry page 


அரசாணை 151 பகது நாள் 9/9/22 படி

உயர் நிலை/ மேல் நிலைப் பள்ளியில் PET/SGT/BT/PG க்கு தேர்வு நிலை/ *சிறப்பு நிலை* வழங்கும் *அதிகாரம்* 

சார்ந்த *மாவட்ட கல்வி அலுவலர் (இ.நி) அவர்களுக்கு* தான் உள்ளது...


 * பள்ளி தலைமை ஆசிரியர் வழியாக சமர்ப்பிக்க வேண்டியது


1) HM covering letter 

 2) அசல் பணிப் பதிவேடு

3) ஆசிரியர் விண்ணப்பம்

4) கருத்துருக்கள் ( ஒன்று மட்டும் போதும்)

5) இணைப்புகள் 


வழக்கமான நடைமுறை தான்...

 *1/6/2026* இல் அதிக அளவில் ஆசிரியர்கள் சிறப்பு நிலை பெற உள்ளதால்

மதிப்பிற்குரிய பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தல் படி கல்வி மாவட்ட அளவில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது ...



தங்களின் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த பதிவு 😊


இத்துடன் Excel sheet (All forms in one) இணைத்துள்ளேன்

குறைந்த உள்ளீடு செய்து தங்களது கருத்துருக்களை தயாரித்து கொள்ளலாம்...


தட்டச்சு படிவம் தான் வேண்டும் என்று கிடையாது...

Empty form இல் கையால் எழுதி கூட தயாரிக்கலாம் 🙏


 *சிறப்பு நிலை* பெற்று 

விரைவில் வரும் கல்வியாண்டில் *பதவி உயர்வு* பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐


தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம் 🙏

31/5/26


01-06-2026ல் சிறப்பு நிலை பெற உள்ள ஆசிரியர்களின் கவனத்திற்கு

 


நண்பர்களே வணக்கம் 🙏


01-06-2026ல் சிறப்பு நிலை பெற உள்ள ஆசிரியர்களின் கவனத்திற்கு


1/6/2026

சிறப்பு நிலை Special Grade பெற உள்ள

 2003,2004 & 2005 TRB நியமன (1/6/2006 பணி வரன் முறை) ஆசிரியர்களின் 

கனிவான கவனத்திற்கு..


இன்னும் 3½ மாதத்தில் சிறப்பு நிலை பெற உள்ளீர்கள்... 

அதற்கு கீழ் கண்ட ஆவணங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்...


1) பணி நியமன ஆணை


2) தொகுப்பூதியம் நீக்கம் செய்து பொதுவான ஆணை


3) 1.6.2006 முன் தேதி இட்டு பணி வரன் முறை ஆணை ( தனிப்பட்ட ஆணை அப்போது வழங்கினார்கள்)


4) தகுதி காண் பருவம் நிறைவு ஆணை


5) 1/6/2016 தேர்வு நிலை பெற்ற ஆணை


இவை அனைத்தும் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

( பணிப் பதிவேட்டில் பதிவு உள்ள பக்க நகல் தேவைப்படும்)


இது தவிர


6) SSLC

7) HSC

8) UG 

9) PG 

10) B.Ed / D.T.Ed


கல்வி சான்றிதழ் நகல் மற்றும் உண்மைதன்மை பெறப்பட்ட விவரம் அவற்றின் SR entry details ...


1/6/2026 க்கு இப்போதே பதிவு செய்வதன் நோக்கம்...

உண்மைத் தன்மை பெறப்படாமல் இருப்பின் இப்போதே தலைமை ஆசிரியர் வழியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்..


அதே போல 10/12/UG/PG/B.Ed/D.T.Ed other state இல் படித்து இருப்பின் கட்டாயம் மதிப்பீடு (Evaluation) செய்யப்பட வேண்டும்...


உண்மைத் தன்மை/Evaluation ஏற்கனவே வாங்கி இருந்து பணிப் பதிவேட்டில் பதிவு எனில் ... 

நன்று / போதும்


தற்போது மீண்டும் புதிதாக வாங்க தேவையில்லை...


அதே போல 1/6/2006 இல் இருந்து 31/12/2025 வரை பணிக் காலம் சரிபார்ப்பு விவரம் விடுதல் இன்றி பணிப் பதிவேட்டில் பதிவு செய்துள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்...


செய்முறை தேர்வு

பொதுத் தேர்வு

சட்ட மன்ற தேர்தல் 

மதிப்பீட்டு பணி

கோடை விடுமுறை என வரும் நாட்களில் Busy ஆக 😊 இருப்போம்...


ஏதேனும் document/entry இல்லாமல் இருந்தால் அதை பெற போதுமான கால அவகாசம் உள்ளது 👍


தங்களின் முன் திட்டமிடல்


தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர் 

மதுரை 8/2/26🙏


தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு தர ஊதியம் முறையே ரூ.5400 / ரூ.5700 நிர்ணயம் செய்தல் - நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் பொழுது ஊதிய நிர்ணயம் செய்தல் - பள்ளிக்கல்வித்துறை அரசு துணைச் செயலாளரின் கடிதம்


 தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு தர ஊதியம் முறையே ரூ.5400 / ரூ.5700 நிர்ணயம் செய்தல் - நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் பொழுது ஊதிய நிர்ணயம் செய்தல் - பள்ளிக்கல்வித்துறை அரசு துணைச் செயலாளரின் கடிதம் எண்: 11100/ தொ.க.1(1)/ 2023-1, நாள்: 15-12-2023


Fixation of grade pay for Primary School Headmaster Selection Grade / Special Grade at Rs.5400 / Rs.5700 respectively - Fixation of pay at the time of promotion of Middle School Headmaster - Letter from the Deputy Secretary to the Government, School Education Department No.: 11100/ EE 1(1)/ 2023-1, Dated: 15-12-2023


தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வு நிலைக்கு ரூபாய் 5400 தர ஊதியம் பெறும் நிலையில் அவரே நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும் நேர்வில் ஊதிய நிர்ணயம் குறித்து அரசு விளக்கக் கடிதம்...


இக்கடிதத்தின் அடிப்படையில் துவக்கப்பள்ளித் தலைமையாசிரியர் Elementary School HM பணியில் 31.05.2006 க்கு முன்னர் தேர்வு நிலை ஊதியம் ₹5400 வழங்கியது சரியானது என்றும், அவரே நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெறும் போது தர ஊதியம் ₹ 4700 நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது...



>>> தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு தர ஊதியம் முறையே ரூ.5400 / ரூ.5700 நிர்ணயம் செய்தல் - நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் பொழுது ஊதிய நிர்ணயம் செய்தல் - பள்ளிக்கல்வித்துறை அரசு துணைச் செயலாளரின் கடிதம்...


தொடக்கக்கல்வி இயக்ககம் - பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் முடித்தல்/ தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை ஆணை வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 26417/ இ மற்றும் டி பிரிவு/ இ1/ 2023, நாள்: 03.11.2023 (Directorate of Elementary Education - Regularisation / Completion of Probationary Period / Selection Grade and Special Grade Order issue regarding - Tamil Nadu Directorate of Elementary Education Proceedings Rc. No: 26417/ Section E and D/ E1/ 2023, Dated: 03.11.2023)...

 

 தொடக்கக்கல்வி இயக்ககம் - பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் முடித்தல்/ தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை ஆணை வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 26417/ இ மற்றும் டி பிரிவு/ இ1/ 2023, நாள்: 03.11.2023 (Directorate of Elementary Education - Regularisation / Completion of Probationary Period / Selection Grade and Special Grade Order issue regarding - Tamil Nadu Directorate of Elementary Education Proceedings Rc. No: 26417/ Section E and D/ E1/ 2023, Dated: 03.11.2023)...



 தொடக்கக் கல்வி இயக்ககம் - அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் சார்பாக பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் முடித்தல் / தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுதல் - துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வழங்கக் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - ...



>>> Click Here to Download DEE Instruction to DEO's & BEOs...



>>> உயர்கல்வி பயில அனுமதி, தேர்வுநிலை, சிறப்புநிலை மற்றும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கு வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்குதல் - மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கூடுதல் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - தெளிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Duties of Block Educational Officers to Grant Higher Education Permission, Selection, Grade Special Grade and Bonus Increment - Additional Duties and Responsibilities of District Educational Officers (Elementary Education) and Block Educational Officers - Providing Clarification - Proceedings for the Director of Elementary Education) ந.க.எண்: 30428/ ஐ1/ 2022, நாள்: 09-12-2022...



இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிகளில் பணிபுரிந்த காலங்களையும் சேர்த்து நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணிநிலையில் தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்குதல் - அரசாணை (நிலை) எண்: 213, நாள்: 02-12-2022 வெளியீடு (Grant of Selection Grade / Special Grade in the post of Middle School Headmaster including periods of service in the posts of Secondary Grade Teacher & Primary School Headmaster - G.O. (Ms) No: 213, Dated: 02-12-2022)...


>>> இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிகளில் பணிபுரிந்த காலங்களையும் சேர்த்து நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணிநிலையில் தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்குதல் -  அரசாணை (நிலை) எண்: 213, நாள்: 02-12-2022 வெளியீடு (Grant of Selection Grade / Special Grade in the post of Middle School Headmaster including periods of service in the posts of Secondary Grade Teacher & Primary School Headmaster - G.O. (Ms) No: 213, Dated: 02-12-2022)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் (Regularisation / Selection Grade / Special Grade - Attachments to be enclosed with applications of Teachers while sending - Proceedings of District Education Officer (Elementary Education))...


>>> பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - கரூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் (Regularisation / Selection Grade / Special Grade - Attachments to be enclosed with applications of Teachers while sending - Proceedings of  Karur District Education Officer (Elementary Education))...



>>> பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் (Regularisation / Selection Grade / Special Grade - Attachments to be enclosed with applications of Teachers while sending - Proceedings of Thiruvallur District Education Officer (Elementary Education))...



>>> பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் (Regularisation / Selection Grade / Special Grade - Attachments to be enclosed with applications of Teachers while sending - Proceedings of Tiruvannamalai District Education Officer (Elementary Education))...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு,


பணிப் பதிவேட்டில் விடுதல் பதிவுகள் இருப்பின் அதற்குரிய சான்றுகளின்  நகல்களுடன் வட்டாரக் கல்வி அலுவலருக்கு கடிதம் அளிக்க வேண்டும். (சான்றுகளின் நகல்களில் வட்டாரக் கல்வி அலுவலரிடம் சான்றொப்பம் பெற வேண்டும்)


பணிவரன்முறை , தேர்வு நிலை, சிறப்பு நிலை, மறு மதிப்பீடு , இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகளைதல் போன்றவற்றிற்கு மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பும் போது முதன்மையாக கீழ்க்கண்ட பதிவுகள் இல்லை எனில், பணிப்பதிவேடு மீண்டும் வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு திருப்பப்படும் சூழல் உருவாகும்.


பணிப்பதிவேட்டில் முக்கியமாக கவனிக்க வேண்டிய பதிவுகள்:


1. உயர் கல்வி துறை அனுமதி விவரங்கள்


2. உயர் கல்வி பட்டப் படிப்பு விவரங்கள் (பட்டச் சான்று விவரம்)


3. உண்மைத்தன்மை சான்றுகள் விவரம் (10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஆசிரியர் கல்வி மற்றும் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ,  இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள், இளம் கல்வியியல், முதுநிலை கல்வியியல், மெய்மவியல் , ஆய்வியல் உள்ளிட்டவை)


4. குடும்ப விவரங்கள்


5. வாரிசு நியமனம்


6. மகப்பேறு விடுப்பு விவரம்


7. இடமாறுதல் பெற்ற விவரம்


8. ஊதியமில்லா விடுப்பு / அரைச் சம்மள விடுப்பு விவரம்


9. பதவி உயர்வு பெற்ற விவரம்


10. ஊதிய நிர்ணய விவரம் (ஊக்க ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை, இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு)


11. பணிவரன்முறை விவரம்


12 .தகுதிகாண் பருவம் முடித்த விவரம்


13. ஊதிய குழு நடைமுறைபடுத்தும்போது புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட விவரம்


14. போராட்டக்காலம்


15. போராட்டக் காலத்தை வரன்முறைப் படுத்திய விவரம்


16 . அயல் மாநிலப் பட்டப் படிப்புயெனில் மறுமதிப்பீட்டு ஆணை விவரம்


17. ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு கணக்கீடு விவரம்


18. தணிக்கைத் தடையினால் கருவூலக்கணக்கிற்கு  பணப் பயன் திரும்ப செலுத்தப்பட்ட விவரம் (கருவூல செலுத்துச் சீட்டு ஒட்டப்பட வேண்டும் )


19. ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவரம்


20. பணி முறிவு காலங்கள் ( உரிய ஆணைகளின் விவரங்கள்)


21. பதவி இறக்கம் செய்யப்பட்ட  விவரம்


22. தொகுப்பு ஊதியத்தில் (மதிப்பு ஊதியம்) இருந்து காலமுறை ஊதியம்  நிர்ணயம் செய்யப்பட்ட ஆணை விவரம்


💁🏻‍♂️தேர்வு நிலை / சிறப்பு நிலை / பணிவரன்முறை கருத்துருவுடன் இணைக்கபட வேண்டியன:


அ) ஆணைகளின் நகல்கள் (2):


1. முதல் பணி நியமன ஆணை நகல்

(மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறைகள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறைகள் )


2. பணிவரன்முறை ஆணை நகல்


3. தகுதி காண் பருவ ஆணை நகல்


4. ஊக்க ஊதிய உயர்வு ஆணை நகல்


5. தேர்வு நிலை ஆணை நகல்


6. ஊதிய நிர்ணய ஆணைகள் நகல் (தேர்வு நிலை / பதவி உயர்வு)


7. இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் ஆணை நகல் (செய்யப்பட்டிருப்பின்)


8. பதவி உயர்வு ஆணை நகல்


9.பதவி உயர்வு பணிவரன்முறை ஆணை நகல்


10. இடமாறுதல் ஆணை நகல் (விருப்ப மாறுதல் / நிர்வாக மாறுதல் / மனமொத்த மாறுதல்)


11. அயல் மாநில கல்விச்சான்று எனில் மறுமதிப்பீடு ஆணை நகல்


12. பதவி உயர்வு பெற்று பதவி இறக்கம் செய்யப்பட்டதற்கான  ஆணை நகல் மற்றும் மீள் ஊதிய நிர்ணய ஆணை நகல் (அனைவருக்கும் பொருந்தாது)



ஆ) கல்விச்சான்றுகளின் நகல்கள் (2) :


1. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் உண்மைத்தன்மை சான்றின் நகல்


2. 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் உண்மைத்தன்மை சான்றின் நகல்


3. ஆசிரியர் கல்வி மற்றும் பட்டயப் படிப்பு (DTEd) முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் உண்மைத்தன்மை சான்றின் நகல்


4. ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி  சான்றின் நகல் மற்றும் உண்மைத்தன்மை சான்றின் நகல்


5. உயர் கல்வி துறை முன் அனுமதி ஆணை நகல் (இளநிலை)


6. மதிப்பெண் பட்டியல்கள் நகல் (இளநிலை)


7. பட்டச் சான்றின் நகல் (இளநிலை)


8. உண்மைத்தன்மை சான்றின் நகல் (இளநிலை)


9. உயர் கல்வி துறை முன் அனுமதி ஆணை நகல் (இளங் கல்வியியல் - பி.எட்)


10. மதிப்பெண் பட்டியல்கள் நகல் (பி.எட்)


11.பட்டச் சான்றின் நகல்(பி.எட்)


12. உண்மைத்தன்மை சான்றின் நகல்(பி.எட்)


13. முன் அனுமதி ஆணை நகல் (முதுநிலை )


14. மதிப்பெண் பட்டியல் நகல் (முதுநிலை )


15. பட்டச் சான்றின் நகல் (முதுநிலை )


16. உண்மைத்தன்மை சான்றின் நகல் (முதுநிலை )



இ) பணிப் பதிவேட்டின் நகல்கள் (2) :


1. தன் விவரம் (3, 4 ஆம் பக்கம் )


2. பணி நியமன விவரம் பதிவு செய்யப்பட்ட பக்க நகல்


3. தகுதி காண் பருவம் பதிவு செய்யப்பட்ட பக்க நகல்


4. பதவி உயர்வு விவரம் பதிவு செய்யப்பட்ட பக்க நகல்


5. பதவி உயர்வு பணிவரன்முறை செய்யப்பட்ட பக்க நகல்


ஈ) கருவூல செலுத்துச் சீட்டு நகல் (கருவூல கணக்கில் பணம் செலுத்தியிருப்பின்)



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

On Duty Permission for Census Duty Teachers CEO Proceedings

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி - 31.08.2026 வரை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரிர்களுக்கு முற்பகல்/பிற்பகல் பிறபணியில் (OD) அனுமதி - தஞ...