கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.04.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.04.2023 - School Morning Prayer Activities...


  திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: வெஃகாமை


குறள் எண்: 173

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்.


பொருள்:

அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்


பழமொழி :

Face the danger boldly than live with in fear

அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்.  


இரண்டொழுக்க பண்புகள் :


1. என் முன் என்னை புகழ்ந்து பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பேன்.


 2. எல்லா காரிங்களிலும் நிதானம் கைகொள்வென். அதுவே என் பலன் ஆகும்


பொன்மொழி :


வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல.


பொது அறிவு :


1. இந்தியாவின் வர்த்தக தலைநகராக விளங்குவது எந்த நகரம் ?


 மும்பை. 


 2. இருண்ட கண்டம் எனப்படுவது எது ? 


ஆப்பிரிக்கா.


English words & meanings :


 perspiration – the process of sweating. noun. exercise causes perspiration. வியர்வை . பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


இதய நோய்கள், நோய்த்தொற்றுகள் மற்றும் வீக்கம் போன்ற சுகாதார நிலைமைகளை நிர்வகிப்பதோடு, உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் நிர்வகிக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. எனவே, நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கான ஒரு சிறந்த மூலிகையாக இருக்கும் கறிவேப்பிலையை மருத்துவரின் ஆலோசனை பெயரில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.


கணினி யுகம்


F4 - Its purpose in Windows 95 to XP is to open the locate window. F5 - With the use of this key, you can refresh the contents of your windows system.


ஏப்ரல் 12


நெ. து. சுந்தரவடிவேலு 


பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு, Nayyadupakkam Duraiswamy Sundaravadivelu, அக்டோபர் 12, 1912 - ஏப்ரல் 12, 1993) தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின்,[3] துணைவேந்தராக இரு முறை (1969 முதல் 1972 வரையும் 1973 முதல் 1975 வரையும்) பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் [4] பல காலம் சிறப்பாகப் பணியாற்றினார். 1954 ஆம் ஆண்டு, சுந்தரவடிவேலு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றார். அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராசருடன் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இவற்றுள் முன்னுரிமை வகிப்பது இலவசக்கல்வி மற்றும் இலவசச் சீருடைத்திட்டங்கள் ஆகியவை ஆகும்.



நீதிக்கதை


கதை :


ராமுவும், சோமுவும் ஒரு பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது தண்ணீர் தாகம் ஏற்பட்டது. 




அப்பொழுது தண்ணீர் குடிப்பதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்பொழுது ராமு, சோமுவை அடித்துவிட்டான். சோமு அழுது கொண்டே என் நண்பன் என்னை அடித்துவிட்டான் என்று பாலைவன மணலில் எழுதிவைத்தான். 




தொடர்ந்து அதே வழியில் அவர்கள் இருவரும் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஓரிடத்தில் ஆழமான பள்ளத்தாக்கு இருந்தது. அதில் ராமு தவறி விழப்போனான். அப்பொழுது சோமு தனது உயிரையும் பொருட்படுத்தாது ராமுவை காப்பாற்றினான். 




அதைப் பார்த்த சோமு அருகில் இருந்த ஒரு பாறையில் என் நண்பண் என்னைக் காப்பாற்றினான் என்று செதுக்கி வைத்தான். 




நீதி :



ஒருவர் செய்த நன்றியை மட்டுமே மனதில் வைத்துக் கொள்ளவும்.


இன்றைய செய்திகள்


12.04. 2023


* மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு  தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் கோரிக்கை.


* 6 மாவட்டங்களில் ரூ.90 கோடியில் விளையாட்டு வளாகங்கள், 6 பாரா மைதானங்கள்: தமிழக அரசு அறிவிப்பு.


* தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.


* இந்தியாவில் புதிதாக 5,676 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: மொத்த பாதிப்பு 37,000 -ஐ கடந்தது.


* முப்படைகளில் ஆள்தேர்வுக்கான அக்னி பாதை திட்டம் செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.


* மியன்மரில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர்.


* 2023 உலகக்கோப்பை : பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடத்த திட்டம்.


* ஆசிய-ஓசியானா செஸ் போட்டி: சென்னை வீரர் குகேஷ் 'சாம்பியன்'.


Today's Headlines


* The Tamil Nadu Small and Small Scale Industries Association has requested the Tamil Nadu government to reduce electricity charges.


 * 90 Crore Sports Complexes in 6 Districts, 6 Para Stadiums: Tamil Nadu Government Notification.


 * Tamil Nadu Government's Online Gambling Prohibition Act has been gazetted.


 * 5,676 new cases of Covid-19 confirmed in India: Total cases cross 37,000


* Agni Patha scheme will go ahead for recruitment in three forces - Supreme Court verdict.


 * Myanmar military airstrikes kill 30 civilians;  Many were injured.


* 2023 World Cup: Plans to host matches in Chennai and Kolkata where Pakistan will play.


* Asia-Oceania Chess Tournament: Chennai Player Gukesh 'Champion'

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...