கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த பாடம் 9ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெறும் (9th Standard Tamil textbook will feature a lesson on Tamil Nadu's former Chief Minister Kalaignar Karunanidhi's contribution to Tamil)...



 முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த பாடம் 9ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெறும் (9th Standard Tamil textbook will feature a lesson on Tamil Nadu's former Chief Minister Kalaignar Karunanidhi's contribution to Tamil)


இந்த ஆண்டு முதல் பாடப்புத்தகத்தில் இடம்பெறும் - பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.


வரும் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



முந்தைய திமுக ஆட்சி காலத்தின் போது முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி எழுதிய தமிழ் செம்மொழி பாடல் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கலைஞர் கருணாநிதி குறித்த ஒரு பாடம் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற உள்ளது.



சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசிய போது, கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த பதிவுகள் பாடப்புத்தகத்தில் இடம் பெறும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வருகிற கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய சேவைகள், பங்களிப்புகள் குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதற்கான பாடப்பகுதி இறுதி செய்யப்பட்டு புத்தகங்கள் தற்போது அச்சிடும் பணியில் இருப்பதாகவும் விரைவில் பாடப்புத்தகம் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி : தினத்தந்தி






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...