கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்...

 


குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை ராசிக்கு புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

தொழில் ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

போக ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

குடும்ப ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

எதிலும் துடிப்புடன் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே !!

குரு சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சுபகாரியங்கள் நடைபெறும். வழக்கு சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்பட கற்றுக் கொள்ளவும்.

பலன்கள்: 


குரு ஐந்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் சொந்த ஊர் செல்வது தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். உங்களது நேர்மைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். அடுத்து என்ன செய்வது என்பது குறித்து தெளிவான புரிதல் உண்டாகும்.


குரு ஏழாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் சுபகாரிய செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற விவாதங்களால் பகைமை ஏற்படலாம். வாக்குறுதி அளிக்கும் போது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை அறிந்து கொள்வதை குறைத்துக் கொள்வது நல்லது.


குரு ஒன்பதாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் உலக நடைமுறைகளைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அரசு விதிகளுக்கு உட்பட்டு நடப்பது தேவையற்ற விரயத்தை குறைக்கும். கொள்கைப் பிடிப்பு குணம் அதிகரிக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் புதிய அறிமுகம் கிடைக்கும்.

பொருளாதாரம்:


பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். விருப்பமான பொருட்களை தேவை இருப்பின் மட்டும் வாங்கிக் கொள்ளவும். ஆடம்பர எண்ணங்களால் நெருக்கடிகள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்:


உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பதில் ஆர்வமின்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும்.

பெண்களுக்கு:


பெண்கள் பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த சுபகாரியங்கள் நடைபெறுவதில் காலதாமதம் உண்டாகும். குடும்ப விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.

மாணவர்களுக்கு:


மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமின்மை உண்டாகும். பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. பெரியோர்களிடம் விதண்டாவாதங்களை குறைத்துக் கொள்ளவும். உயர்நிலை கல்வியில் அரசு சார்ந்த உதவி கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் வெளியூர் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் சிலருக்கு கைகூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோக பணிகளில் எதிர்பார்ப்பின்றி செயல்படுவது மனதிற்கு அமைதியை கொடுக்கும். புதிய வேலைகள் அமைந்தாலும் நெருக்கடியான சூழ்நிலைகள் குறையாது. எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் தாமதமாக கிடைக்கும். 

வியாபாரிகளுக்கு:


வியாபாரப் பணிகளில் சந்தை நிலவரங்களை அறிந்து புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். மறைமுகமான சில போட்டிகளால் லாபம் குறையும். புதிய நவீன கருவிகளால் விரயங்கள் அதிகரிக்கும். கால்நடை வியாபாரத்தில் மத்திமமான லாபம் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான வாய்ப்புகளில் கவனம் வேண்டும். இனம்புரியாத சில குழப்பங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிலும் போட்டிகள் அதிகமாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு:


சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு ஒரு புதிய பாதை புலப்படும். பத்திரிக்கை துறைகளில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

நன்மைகள்:


சத்ரு ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் நெருக்கமானவர்களை பற்றிய புரிதலும், தொழில் வியாபாரத்தில் புதிய பரிணாமத்தையும், வரவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும்.

கவனம்:


சத்ரு ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் எதிலும் சிக்கனத்துடன் செயல்படவும். கணவன், மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும்.

வழிபாடு:


திருச்செந்தூர் முருகரை வழிபாடு செய்துவர குடும்பத்தில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.


மலைப்பகுதிகளில் மரங்களை நடுவதும், பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய மரங்களை பராமரிப்பதும் பணிகளில் இருக்கக்கூடிய தடைகளை குறைக்கும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...