கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தனியார் பள்ளிகள் முறைப்படுத்துதல் சட்டம் - தற்போதைய நிலையே நீடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு (Private Schools Regularization Act - Madras High Court orders to maintain status quo)...

 


தனியார் பள்ளிகள் முறைப்படுத்துதல் சட்டம் - தற்போதைய நிலையே நீடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு (Private Schools Regularization Act - Madras High Court orders to maintain status quo)...


தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்தும் விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2018-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டம் இயற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் விதிகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.


சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் தொடங்க அரசு அனுமதி பெற வேண்டும், சிறுபான்மை அந்தஸ்து கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட இந்த விதிகள், அரசியல் சாசனம்  சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி,  பல்வேறு திருச்சபைகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.


இந்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.  அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான  ஐசக்மோகன்லால் , வக்கீல் காட்சன், மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், வக்கீல் அருள்மேரி உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள், 'கடந்த 1973-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, உயர் நீதிமன்றத்தால். 1975-ல் ரத்து செய்யப்பட்ட பல பிரிவுகள், புதிய சட்டத்தின் மூலமும், விதிகளின் மூலமும் கொண்டு வரப்பட்டுள்ளதாக  வாதிட்டனர்.


மேலும், 1975-ம் ஆண்டு உத்தரவை எதிர்த்த வழக்குகளை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கே மாற்றியதாகவும், அப்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, 1973-ம் ஆண்டு சட்டம் அமல்படுத்துவதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என 2012-ல் உத்தரவிடப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.


இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அந்த விதிகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், சிறுபான்மையல்லாத கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என வாதிட்டார்.


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ளதையும், 1973-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நலனையும் சுட்டிக்காட்டி, புதிய சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்துவதில் ஜூன் 15-ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்குகளின் விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...