கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Certificate லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Certificate லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குதல்‌- முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள்‌ - வருவாய்‌ நிருவாக ஆணையரின் கடிதம் ந.௧.எண்‌.வ.நி.5(3)/ 01/ 329 /2021, நாள்‌: 05.09.2023 (Giving preference to First Generation Graduates in Government posts filled through Employment Offices- Detailed norms regarding issuance of First Generation Graduate Certificate - Revenue Administration Commissioner's Letter Rc.No.R.A.5(3)/ 01/ 329 /2021, Dated: 05.09.2023)...



வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குதல்‌- முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள்‌ - வருவாய்‌ நிருவாக ஆணையரின் கடிதம் ந.௧.எண்‌.வ.நி.5(3)/ 01/ 329 /2021, நாள்‌: 05.09.2023 (Giving preference to First Generation Graduates in Government posts filled through Employment Offices- Detailed norms regarding issuance of First Generation Graduate Certificate - Revenue Administration Commissioner's Letter Rc.No.R.A.5(3)/ 01/ 329 /2021, Dated: 05.09.2023)...


வருவாய் நிர்வாகம்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மை ஆணையரகம்.


அனுப்புநர்‌ 


கூடுதல்‌ தலைமைச்‌ செயலர்‌ / 

வருவாய்‌ நிருவாக ஆணையர்‌, 

எழிலகம்‌, சேப்பாக்கம்‌,

சென்னை-5.


பெறுநர்‌

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்‌

(இணைப்புடன்‌),


ந.௧.எண்‌.வ.நி.5(3)/ 01/ 329 /2021, நாள்‌: 05.09.2023


அய்யா / அம்மையீர்‌,


பொருள்‌ :- பொதுப்பணிகள்‌ - வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குதல்‌- முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள்‌ வழங்குதல்‌ -தொடர்பாக.


பார்வை :- 1. அரசாணை(நிலை) எண்‌.85, உயர்கல்வித்துறை, நாள்‌: 16.04.2010.


2. அரசு கடிதம்‌ (நிலை) எண்‌ 315, உயர்கல்வித்‌ (ஜே.2)துறை, நாள்‌ 13.11.2017.


3. அரசாணை(நிலை) எண்‌.122, மனிதவள மேலாண்மை (கே2)துறை, நாள்‌: 02.11.2021.


4. அரசுக்‌ கடிதம் எண்‌.4745/வ.நி.2(1)/2022, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்துறை, நாள்‌: 17.05.2022 மற்றும்‌ 14.02.2023


5. இவ்வலுவலக கடித எண்‌ வ.நி.5(3)/01/329/2021, நாள்‌ 21.09.2022 மற்றும்‌ 13.03.2023.


6. அரசாணை(நிலை) எண்‌.296, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை வருவாய்‌ நிருவாக அலகு, வ.நி. 3(2) பிரிவு நாள்‌: 19.06.2023.


*****


பார்வையில்‌ காணும்‌ கடிதங்களின்‌ மீது கவனத்தை ஈர்க்க விழைகிறேன்‌.


2. பார்வை 3-ல்‌ காணும்‌ அரசாணையில்‌, வேலைவாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்காக அரசாணை வெளியிடப்பட்டது. மேலும்‌, மேற்குறிப்பிட்ட அரசாணையின்‌ அடிப்படையில்‌, முன்னுரிமை பெற்றுள்ள பிரிவினராக வேலைவாய்ப்பு அலுவலகங்களில்‌ பதிவு செய்து கொள்வதற்கும்‌, முன்னுரிமை முறை பின்பற்றப்படும்‌ பணியாளர்‌ தெரிவுகளுக்கு விண்ணப்பிக்கும்‌ பொருட்டும்‌, வேலைவாய்ப்பில்‌ முன்னுரிமை சான்றிதழ்‌ கோரி விண்ணப்பிக்கும்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ்‌ வழங்கிடும்‌ வகையில்‌முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்‌ பின்வருமாறு பார்வை 4-ல்‌ காணும்‌ அரசாணையில்‌ அரசு ஆணை பிறப்பித்துள்ளது.


வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குதல்‌- முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள்‌ 


அரசாணை(நிலை) எண்‌.296, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை வருவாய்‌ நிருவாக அலகு, வ.நி. 3(2) பிரிவு நாள்‌: 19.06.2023.


>>> வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குதல்‌- முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள்‌ - வருவாய்‌ நிருவாக ஆணையரின் கடிதம் ந.௧.எண்‌.வ.நி.5(3)/ 01/ 329 /2021, நாள்‌: 05.09.2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Generation Graduate Certificate) பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - எளிய வழிமுறைகள் (How to Apply Online for First Generation Graduate Certificate? - Simple instructions)...

 


முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Generation Graduate Certificate) பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - எளிய வழிமுறைகள் (How to Apply Online for First Generation Graduate Certificate? - Simple instructions)...


முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate) ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.


தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தின் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும். இதன்மூலம் கல்விக் கட்டண தொகை விலக்கு அளிக்கப்படும். 


மேலும் இந்த சலுகையை பெற விரும்பும் மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருத்த வேண்டும். 


தேவையான ஆவணங்கள்


* விண்ணப்பதாரரின் புகைப்படம்


* குடும்ப அட்டை


* ஆதார் அட்டை 


* 12ஆம் வகுப்பு சான்றிதழ்


* கல்லூரி விண்ணப்பம் 


* தந்தை கல்வி சான்றிதழ்


* தாய் கல்வி சான்றிதழ்


* சகோதர சகோதரிகளின் கல்வி சான்றிதழ்



விண்ணப்பிப்பது எப்படி?


*STEP : 1


முதலில் https://tnega.tn.gov.in/ அதில் Citizen Login என்பதை க்ளிக் செய்யவும்.


ஏற்கனவே account இருப்பவர்கள் user name password கொடுத்து என்டர் செய்யவும். Captcha Code என்பதில் சரியானவற்றை கொடுத்து Login செய்யவும்


Account இல்லாதவர்கள் புதிதாக Account Open செய்யவும். அதில் new user? sign up என்ற Optionல் புதிதாக Account Open செய்யலாம். 


Account Open செய்து லாகின் செய்து அதில்  Revenue Department என்பதை  செய்யவும். 


முதல் பட்டதாரி  என்பதை தேர்வு செய்து Proceed என்பதை Click செய்யவும்.


*STEP : 2


அடுத்து அதில்  Register CAN என்பதை க்ளிக் செய்யவும்.


அடுத்து அவரும் விண்ணப்பப் படிவத்தில்  விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், திருமண நிலை, பிறந்த தேதி, உறவு முறை, தந்தை/ தாய் பெயர், மதம், கல்வி தகுதி, சாதி, வட்டம், மாவட்டம், கிராமம், நிரந்தர வீட்டு முகவரி, மொபைல் எண் கொடுத்து Generate OTP என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு  வரும்  OTP எண்னை கொடுத்து Register என்பதை Click செய்யுங்கள்


அடுத்து உங்களுக்கு can நம்பர் ரெஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணை கொடுத்து விவரங்களை குறிப்பிட்ட பிறகு search ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி அனைத்தும் வரும். அடுத்து அதில் Proceed என்பதை க்ளிக் செய்யவும்.


அடுத்து உங்களுடைய மொபைல் எண் வரும். அருகில் இருக்கும் generate otp என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு வரும் OTPயை கொடுத்து conform OTP என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அடுத்து கீழே proceed என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். 


*STEP : 3


அதில் Current Course என்ற இடத்தில் Graduate என்பதை கொடுத்து கல்வி நிறுவனத்தின் பெயர், முகவரியை டைப் செய்ய வேண்டும். அனைத்தையும் சரிபார்த்து Submit கொடுக்கவும்.


*STEP : 4


அடுத்து உங்களுடைய ஆவணங்களை Upload செய்யும் ஆப்ஷன் வரும். அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் Upload செய்யுங்கள்.


அதில் Self Declaration Form , Download Aadhar Consent Form டவுன்லோடு செய்து SIGN இட்டு மீண்டும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்யவேண்டும்.


 Download Self Declaration Form என்பதை க்ளிக் செய்யவும். அவற்றில் உங்களுடைய கையெழுத்து போட வேண்டும்


*STEP : 5


ஆவணங்கள் அப்லோட் செய்த பிறகு Make payment என்பதை கொடுக்க வேண்டும். 


அதில் நெட் பேங்கிங் , யூபிஜ , டெபிட் கார்டு போன்றவைகள்  ஏதேனும் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணத்தினை செலுத்த வேண்டும்.


பணம் செலுத்திய பிறகு ஒப்புகை சீட்டு வரும்.  உங்களுக்கு வந்த ஒப்புகை சீட்டை  கொண்டு உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் வருவாய் ஆய்வாளர் (RI) சரிபார்ப்பு முடிந்து தாசில்தார் ஒப்புகை கொடுத்தபின்பு உங்கள் முதல் பட்டதாரி சான்றிதழ் டவுன்லோடு செய்யலாம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்போர் Transfer Order / Joining Order இல்லாத நிலையில் EMIS Websiteல் பதிவேற்றம் செய்ய ஐந்தாண்டு பணி சான்றிதழ் (Service Certificate)...


>>> பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்போர் Transfer Order / Joining Order இல்லாத நிலையில் EMIS Websiteல் பதிவேற்றம் செய்ய ஐந்தாண்டு பணி சான்றிதழ் (தமிழ்)...



>>> பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்போர் Transfer Order / Joining Order இல்லாத நிலையில் EMIS Websiteல் பதிவேற்றம் செய்ய ஐந்தாண்டு பணி சான்றிதழ் (ஆங்கிலம்)...



 பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்போர் ஐந்தாண்டு அனுபவ சான்றிதழ் EMIS Websiteல் பதிவேற்றம் செய்ய தேவையில்லை. Transfer Order / Joining Order பதிவேற்றம் செய்தால் போதுமானது - TN EMIS TEAM...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமை - கணவர் /மனைவி பணிபுரியும் சான்றிதழ் (Spouse Certificate - Teachers Transfer Counseling - Priority)...



>>> ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமை - கணவர் /மனைவி பணிபுரியும் சான்றிதழ் (Spouse Certificate - Teachers Transfer Counseling - Priority - Model 1)...



>>> ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமை - கணவர் /மனைவி பணிபுரியும் சான்றிதழ் (Spouse Certificate - Teachers Transfer Counseling - Priority - Model 2)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக்கல்வித்துறை - கலைத் திருவிழா (Kalai Thiruvizha) 2022 - 2023 - வட்டார அளவிலான, மாவட்ட அளவிலான பாராட்டு சான்றிதழ் மாதிரி (Department of School Education - Art Festival 2022 - 2023 - Block Level, District Level Appreciation Certificate Model)...


>>> பள்ளிக்கல்வித்துறை - கலைத் திருவிழா (Kalai Thiruvizha) 2022 - 2023 - வட்டார அளவிலான, பாராட்டு சான்றிதழ் மாதிரி (Department of School Education - Art Festival 2022 - 2023 - Block Level Appreciation Certificate Model)...



>>> பள்ளிக்கல்வித்துறை - கலைத் திருவிழா (Kalai Thiruvizha) 2022 - 2023 - மாவட்ட அளவிலான பாராட்டு சான்றிதழ் மாதிரி (Department of School Education - Art Festival 2022 - 2023 - District Level Appreciation Certificate Model)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




தமிழ் வழியில் படித்ததற்கான சான்று [PSTM Certificate] Online வாயிலாக மட்டுமே இனி வழங்கப்பட வேண்டும் - ஆணையரின் செயல்முறைகள் (Certificate of Study in Tamil Medium [PSTM Certificate] shall henceforth be issued through Online only - Processes of Commissioner) ந.க.எண்: 30574/ எம்/ இ1/ 2021, நாள்: 30-09-2022...

 


>>> தமிழ் வழியில் படித்ததற்கான சான்று [PSTM Certificate] Online வாயிலாக மட்டுமே இனி வழங்கப்பட வேண்டும் - ஆணையரின் செயல்முறைகள் (Certificate of Study in Tamil Medium [PSTM Certificate] shall henceforth be issued through Online only - Processes of Commissioner) ந.க.எண்: 30574/ எம்/ இ1/ 2021, நாள்: 30-09-2022...


PSTM (தமிழ் வழியில் படித்த சான்று) சான்றிதழ்களுக்கான இ-சேவை மையங்களின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் சரிபார்ப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ( Verification of applications received through e-Sevai Centers for PSTM (Persons Studied in Tamil Medium) certificates – Proceedings of Commissioner of School Education No: 30574/ M/ E1/ 2021, Dated: 04-08-2022) ந.க.எண்: 30574/ எம்/ இ1/ 2021, நாள்: 04-08-2022...



>>> PSTM (தமிழ் வழியில் படித்த சான்று) சான்றிதழ்களுக்கான இ-சேவை மையங்களின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் சரிபார்ப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ( Verification of applications received through e-Sevai Centers for PSTM (Persons Studied in Tamil Medium) certificates – Proceedings of Commissioner of School Education No: 30574/ M/ E1/ 2021, Dated: 04-08-2022) ந.க.எண்: 30574/ எம்/ இ1/ 2021, நாள்: 04-08-2022...




பள்ளி இறுதித் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்வது சார்பான கருத்துருக்களை பரிந்துரை செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மூ.மு.எண்: 029664/ எம்/ இ3/ 2021, நாள்: 18-03-2022 - இணைப்பு: பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 029664/ எம்/ இ3/ 2021, நாள்: 08-02-2022...& அரசாணை (நிலை) எண்: 177, நாள்: 23-12-2021 (Proceedings of the Commissioner of School Education regarding the procedures to be followed in recommending corrections in the mark certificates issued to students in the SSLC Examination - Attachments: Proceedings of the Joint Director of School Education & G.O. (Ms) No.: 177, Dated: 23-12-2021)...



>>> பள்ளி இறுதித் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்வது சார்பான கருத்துருக்களை பரிந்துரை செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மூ.மு.எண்: 029664/ எம்/ இ3/ 2021, நாள்: 18-03-2022 - இணைப்பு: பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 029664/ எம்/ இ3/ 2021, நாள்: 08-02-2022...& அரசாணை (நிலை) எண்: 177, நாள்: 23-12-2021 (Proceedings of the Commissioner of School Education regarding the procedures to be followed in recommending corrections in the mark certificates issued to students in the SSLC Examination - Attachments: Proceedings of the Joint Director of School Education & G.O. (Ms) No.: 177, Dated: 23-12-2021)...

பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுகொள்ள அரசாணை (நிலை) எண்: 4, நாள்: 21-01-2022 [ G.O.(Ms)No.4, Dated: 21-01-2022 - Apply for and obtain 23 types of Certificates of School Education through E-Sevai Center ] வெளியீடு...

 



>>> அரசாணை (நிலை) எண்: 4, நாள்: 21-01-2022 -  பள்ளிக் கல்வி - 2021-2022ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை - மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - சான்றிதழ்கள் மின்னணு சேவைகள் (e-Services) வாயிலாக பெறுதல் - ஆணை G.O.(Ms)No.4,  Dt: January 21, 2022...


பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுகொள்ள அரசாணை.


இனி 10, 12ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்புகளின்  (D.T.Ed) உண்மைத்தன்மை அரசு இ-சேவை மையங்கள் மூலம் பெறலாம் ; அரசாணை‌ வெளியீடு...


மதிப்பெண் சான்றிதழ், இணைக் கல்வி சான்றிதழ் உட்பட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பெறலாம் - பள்ளிக் கல்வித்துறை.

தொலைந்த பள்ளி, கல்லூரி சான்றுகளை மீண்டும் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் (How to get lost School and College Certificates? Simple instructions)...





உங்கள் பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் தொலைந்து விட்டால் அரசிடம் இருந்து தொலைந்ததற்கான சான்றை ஆன்லைன் மூலம் பெறும் எளிய வழிமுறை இப்பதிவில் வழங்கப்பட்டு உள்ளது.


சான்று பெறும் முறைகள்:

மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் படித்ததற்கான சான்றுகள் வழங்கப்படும். அவை மிகவும் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தில் பணிக்கு செல்வதற்கு இந்த சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. அரசின் சில நலத்திட்டங்களை பெறுவதற்கும் சான்றிதழ்கள் அவசியமாகும். இந்த முக்கிய சான்றிதழ்களை நாம் பணிகளுக்காக வெளியில் எடுத்து செல்லும்பொழுதோ அல்லது வேறு சில காரணங்களுக்கு பிற இடங்களில் சமர்ப்பிக்கும் பொழுதோ அவை தொலைந்து போவதற்கான வாய்ப்புகள் உண்டு.


மேலும் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்து விட்டாலோ அல்லது எதிர்பாராத விதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ நாம் புதிய சான்று பெற முடியும். முதலில் காவல் நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும். பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும். அதன் பிறகு புதிய சான்றிதழ் பெற உரிய அலுவலர்களை அணுகி பெற முடியும். தற்போது தொலைந்ததற்கான சான்றை ஆன்லைன் மூலம் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தொலைந்ததற்கான சான்றை ஆன்லைன் மூலம் பெறும் வழிமுறைகள் :

  • இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் புகைப்படமும், இருப்பிட சான்றும் தேவை.


  • அதில் சிட்டிசன் லாகின் மூலம் உள் நுழைய வேண்டும். பிறகு Revenue Department என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

  • பிறகு புதிய முகப்பு திரை உருவாகும். அதில் Certificate for loss education records due to disasters என்பதை கிளிக் செய்யவும்.

  • படிவத்தில் உங்கள் தகவல்களை நிரப்பி Proceed கொடுக்கவும்.

  • உங்கள் CAN எண்ணை கொடுக்க வேண்டும். இல்லாதவர்கள் புதிதாக உருவாக்க வேண்டும்.

  • பிறகு உங்களது புகைப்படம் மற்றும் இருப்பிட சான்றை ஸ்கேன் செய்து Upload செய்ய வேண்டும்.

  • இணைய வங்கி மூலம் சான்றிதழுக்கான கட்டணம் செலுத்த வேண்டும்.

  • அதிகாரிகள் உங்கள் விவரங்களை சரிபார்த்த பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் வந்து சேரும். அதன் பிறகு தொலைந்ததற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட சான்றிதழை இனி வாட்ஸ் அப்பில்(Corona Vaccination Certificate in Whatsapp) பெறும் வசதி அறிமுகம்...



 Covid19 Vaccination Certificate Download செய்திட எளிய வழிமுறை...


Whatsapp இன் மூலம் நீங்கள் Covid -19 தடுப்பூசி செலுத்தியதிற்கான சான்றிதழை  PDF வடிவில் பெற்றுக்கொள்ளலாம்..


1. முதலில்  "9013151515" என்ற எண்ணை  உங்கள் மொபைலில் Save செய்துகொள்ளுங்கள்.


2. அந்த எண்ணை Whatsapp இல்  Open செய்து " Download Certificate" என்று Type செய்து  அனுப்புங்கள்.


3. உடனே உங்கள் மொபைலில் Message Inbox இல் 6 இலக்க OTP வரும்... உங்கள் கைபேசிக்கு வரும் OTP எண்ணை ( 30 வினாடிகளுக்குள்)  Whatsapp இல்  Type செய்து அனுப்புங்கள்.



4. இந்த அலைபேசி எண்ணை கொடுத்து தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் பட்டியல் காட்டப்படும். உதாரணமாக நான்கு பேர் இந்த குறிப்பிட்ட அலைபேசி எண்ணைக் கொடுத்து தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால் Type  1-4. To select a member for Downloading Cowin Vaccination Certificate என்று Message  வரும்...



5.  அந்த நபரின் எண்ணை உதாரணமாக 1 என்ற எண்ணை Type செய்து அனுப்பவும்..


உடனே  PDF வடிவில்  COVID Vaccination  Certificate   பெற்றுக்கொள்ளலாம்...


தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை(Certificate for having Studied in Tamil Medium) பதிவேற்றம் செய்வதற்கான படிவத்தை(Format - PSTM Certificate) வெளியிட்டது TNPSC...


Group 1 Preliminary Exam எழுதியவர்கள்,  தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை(Certificate for having Studied in Tamil Medium) பதிவேற்றம் செய்வதற்கான படிவத்தை(Format - PSTM Certificate) வெளியிட்டது TNPSC...


புதிய வடிவத்தில் உள்ள சான்றிதழை 100 kb முதல் 200 kb-க்குள்ளாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.


கூடுதல் விவரங்களுக்கு 18004190958 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.


 >>> தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் (Certificate for having studied in Tamil Medium)...


Certificate for having studied in Tamil Medium #

This is to certify that Thiru./Tmt./Selvi. …………………………………(Name) had studied Classes ……….. to ………… with Tamil as the medium of instruction, during the year …………. to …….……..and had satisfactorily completed the course of studies prescribed for Classes ………. to ………..

Thiru./Tmt./Selvi. …………………………………(Name) was / was not awarded scholarship meant for students studying in the Tamil medium.

This certificate is issued with reference to Section 2(d) of the PSTM (Amendment) Act, 2020, based on verifiable documentary evidence. The undersigned assumes full responsibility for the veracity of the contents herein.

Signature of Principal/Head Master /

District Educational Officer / 

Chief Educational Officer /

District Adi Dravidar Welfare Officer 

                  Mobile No: ______

Place: 

Date:

Seal of the Institution

.

# If the candidate has studied in different schools from 1st std. up to 10th std./ 12th std., then the above certificate shall be obtained from each of the schools the candidate has studied in.


வருவாய் ஈட்டும் பெற்றோர் விபத்தில் இறந்தாலோ (அ) நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவ, மாணவியருக்கு தலா ரூ.50,000/- அல்லது ரூ.75,000/- கல்வி உதவித் தொகை வழங்க கோரும் விண்ணப்பங்களில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...

 


வருவாய் ஈட்டும் பெற்றோர் விபத்தில் இறந்தாலோ (அ) நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவ, மாணவியருக்கு தலா ரூ.50,000/- அல்லது ரூ.75,000/- கல்வி உதவித் தொகை வழங்க கோரும் விண்ணப்பங்களில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் சான்றுகள் (Documents and Certificates) குறித்த பாலக்கோடு மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 653/ அ5/ 2020, நாள்: 16-07-2020...

>>> பாலக்கோடு மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 653/ அ5/ 2020, நாள்: 16-07-2020...


அரசாணை எண் :390 ,நிதித்துறை, நாள்: 07.11.2012 - 25 ஆண்டுகள் எவ்வித ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாமல் மாசற்று பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.2000/- மற்றும் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பம் மாதிரி (Award of cash incentive to the Government employees who have rendered 25 years of unblemished service - Application Format)...

 


Award of cash incentive to the Government employees who have rendered 25 years  of unblemished service - Orders Issued...


>>> Click here to Download G.O.Ms.No.:390 , Dated: 07.11.2012...



>>> ஊக்கத்தொகை ரூ.2000/- மற்றும் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பம் மாதிரி...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...