கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி (HeadMaster promotion, National level sports competitions - School Education Minister Anbil Mahesh's interview)...



>>> தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி (HeadMaster promotion, National level sports competitions - School Education Minister Anbil Mahesh's interview)...


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’தேசிய அளவிலான போட்டிகள் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பின் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நமது அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்திதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு யார் செய்தாலும் தவறு. அதன் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.


கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும். இந்த பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும்.


தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது இல்லை. தலைமையாசிரியர் பணியினை அந்த பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் கவனிக்கலாம் என உத்தரவிட்டுள்ளோம்’’ என்றார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...