கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: புகழ்


குறள் :231


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.


விளக்கம்:


ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.



பழமொழி :

Art is long and life is short


கல்வி கரையில் கற்பவர் நாள் சில.


இரண்டொழுக்க பண்புகள் :


1. உன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்ளாதே. 


2. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் தங்கள் நேரத்தில் ஒளி வீசுகின்றன. ஒன்றோடொன்று ஒத்து பார்ப்பதில்லை


பொன்மொழி :


மனித வாழ்க்கையின் மிகச்சிறந்த இனிமை நட்பு. --ஜோசப் அடிசன்


பொது அறிவு :


1. டெல்லி சுல்தானகத்தின் கடைசி ஆட்சியாளர் யார்?


விடை: இப்ராஹிம் லோடி


2. இந்தியாவின் கடைசி முகலாய பேரரசர் யார்?

விடை: பகதூர் ஷா II


English words & meanings :


 relentless - persistent இடைவிடாத ;

 efforts - attempt முயற்சிகள்


ஆரோக்ய வாழ்வு :


சோம்பு: நாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில்  நீர் வடிதல் குணமாகும்.


ஆகஸ்ட்  04


பராக் உசைன் ஒபாமா  அவர்களின் பிறந்தநாள்


பராக் உசைன் ஒபாமா (Barack Hussein Obama, பிறப்பு: ஆகத்து 4, 1961), அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார்.[1] அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.



நீதிக்கதை


ஒருவன் தன் தோட்டத்தில் நன்கு விளைந்திருந்த காய்கறிகளை மார்க்கெட்டில் கொண்டுபோய் விற்க புறப்பட்டான். அதனால் காய்கறிகளை தன் வண்டியில் கட்டிக் கொண்டு சென்றான். அப்படி போகும் போது, வழியில் அவனது வண்டியின் சக்கரம் பள்ளத்தில் மாட்டிக் கொண்டு. காய்கறிகள் கீழே விழுந்துவிட்டன. அப்போது அவன் கடவுளே எனக்கு உதவி செய் என்று வேண்டினான். இப்போது கடவுள் வரவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தான். இருப்பினும் வரவில்லை. அருகில் யாரும் இல்லை. ஆகவே அவனே அந்த வண்டிச் சக்கரத்தை தூக்கி மேட்டில் வைத்தான். இப்போது சுலபமாக அவனால் தூக்க முடிந்தது. அந்த நேரத்தில் அவன் "தன்னால் தூக்க முடியாது என்று நினைத்த வண்டியின் சக்கரத்தை தூக்கிவிட்டேனே!" என்று நினைத்து ஆச்சரியப்பட்டான். அப்போது பின்னால் திரும்பி பார்த்தான். அந்த வழியில் வந்த ஒரு துறவி அவனுக்கு உதவினார். அந்த துறவிக்கு அவன் தன் நன்றியைக் கூறி. "அத்தனை முறை கடவுளை அழைத்தும்.


அவர் வந்து உதவவில்லை. ஆனால் நீங்கள் வந்து எனக்கு உதவியதற்கு நான் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்" என்று கூறினான். அப்போது அந்த துறவி, "எதற்கு கடவுள் மீது கோபம் கொள்கிறாய்? அவர் உனக்கு உதவி செய்யவில்


லை என்று சொல்லாதே. நீ ஏதேனும் முயற்சி செய்தால் தானே. அவரால் உனக்கு உதவ முடியும்" என்று சொன்னார். பின் 'நீ முயற்சி செய்ததால் தானே. நானே வந்து உதவினேன். ஆகவே அவர் உனக்கு உதவ வேண்டும் என்றால் அவருக்கும்


ஒரு வாய்ப்பு கொடு” என்று கூறி சென்று விட்டார்.


இன்றைய செய்திகள்


04.08. 2023


*அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு.


*ஆதிச்சநல்லூரில் 'சைட் மியூசியம்' அமைக்கும் பணி 5ஆம் தேதி தொடக்கம்: நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்.


*கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு கட்டுப்பாடு... உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் இந்தியா.


*ஏற்றுமதியில் புதிய சாதனை - ஈரோட்டில் ஆறு மாத காலத்தில் ஒரு லட்சம் டன் மஞ்சள் ஏற்றுமதி.


*ஆசிய ஹாக்கி போட்டியில் போடப்படும் ஒவ்வொரு கோலுக்கும் 11 மரக்கன்றுகள் - தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம்.


*ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி தொடங்கியது - முதல் ஆட்டத்தில் தென் கொரியா வெற்றி.


Today's Headlines


*Andaman and Nicobar earthquakes registered 4.3 on the Richter scale.


 *Construction of 'Site Museum' at Adichanallur to start on 5th: Nirmala Sitharaman will inaugurate.


 *Restrictions on computer imports... India in an effort to increase domestic production.


 *New Record in Exports - One Lakh Tons of Turmeric Exported in Erode in Six Months.


 *11 saplings for every goal scored in Asian Hockey Tournament announced by Tamil Nadu Development Authority.


 *Asian Champions Hockey tournament begins - South Korea won the first match.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...