கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.09.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.09.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : தவம்


குறள் :264


ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்.


விளக்கம்:


பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.


பழமொழி :

Dead men tell no tales


குள்ள நரி தின்ற கோழி கூவுமா?


இரண்டொழுக்க பண்புகள் :


1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.


2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.


பொன்மொழி :


எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டியதில்லை, எங்கே வழுக்கியது என்று தான் பார்க்க வேண்டும் தந்தை பெரியார் 


பொது அறிவு :


1. உலகின் மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றான லஸ்கார் எந்த நாட்டில் உள்ளது?


விடை: சிலி 


2. உலகின் மிக நீளமான மலை எது?


விடை: அந்தீஸ் மலை


English words & meanings :


 Gloria - the song praising God இறை புகழ் பாடல்: 

Hest- order கட்டளை


ஆரோக்ய வாழ்வு : 


கொண்டைக்கடலை : சுண்டல் எனப்படும் கொண்டைக் கடலை இரத்த கட்டுப்பாட்டு நன்மைகளை கொண்டுள்ளது. நம்மில் பலருக்கு உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை தினசரி போதுமான அளவில் பொட்டாசியம் உட்கொள்வதன் மூலம் நிர்வகிக்க முடியும். 


செப்டம்பர் 21


சம இரவு நாள்


சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினைக் கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீ(equi) எனபது சமம் என்றும் நாக்சு(nox) என்பது இரவு என்றும் பொருள்படும். சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 21அன்றும் இவை நிகழும். இந்த வருடம் செப்டம்பர் 23 ஆம் தேதி சம இரவு நாள் ஆகும்.


உலக அமைதி நாள்


உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.[1]. இந்நாள் முன்னர் 1981-இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது.[2] ஆனாலும் 2002-இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21-இல் கொண்டாடப்படுகிறது.


நீதிக்கதை


 ஒரு காட்டு பகுதியில ஒரு பெரிய மரம் இருந்துச்சு.அந்த மரத்துல நிறைய பறவைகள் கூடு கட்டி வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க . அந்த பறவைங்க எப்பவும் தங்களோட கூட்ட பாதுகாப்பா வச்சிக்கிட்டே இருக்கும். பிஞ்சிபோனா கூட திரும்பி கட்டுறது , பழைய கூட்ட பாதுகாப்பான கிளைக்கு மாத்துறதுனு எப்பவும் சுறுசுறுப்பா இருக்கும். ஒருநாள் மழைக்காலம் தொடங்குச்சு அன்னைக்கு காட்டுல பெரிய மழை பெய்ய ஆரம்பிச்சுச்சு


தங்களோட கூட்ட பாதுகாப்பா கட்டியிருந்த பறவைகள் எல்லாம் பாதுகாப்பா அதுக்குள்ள இருந்துச்சுங்க


அப்ப பக்கத்துல வாழ்ந்துகிட்டு வந்த குரங்குகள் கூட்டம் மழைக்கு அந்த மரத்தோட அடியில ஒதுங்குச்சுங்க அப்ப புறா சொல்லுச்சு குரங்குகளே குரங்குகளே நீங்களும் எங்களை மாதிரி கூடு கட்டி வச்சிருந்தா இப்படி குளிர்ல நடுங்க அவசியம் வந்திருக்காதேன்னு கேட்டுச்சு


உடனே குருவி சொல்லுச்சு எங்களுக்கு உங்களை மாதிரி கைகள் இல்லை இருந்தாலும் பாதுகாப்பான கூடு கட்டியிருக்கோம்னு சொல்லுச்சு.


மழை விட்டதும் எல்லா குரங்குகளும் மரத்துமேல ஏறி அங்க இருந்த கூட்ட எல்லாத்தையும் பிச்சி பிச்சி போட்டுடுச்சுங்க


கூடுகளை இழந்த பறவைகள் ரொம்ப வறுத்த பட்டுச்சுங்க , அப்பத்தான் வயசான புறா ஒன்னு சொல்லுச்சு ,பறவைகளே நீங்க யாருக்கு யோசனை சொல்லணும்னு முதல்ல தெரிஞ்சிக்கிடனும்


எப்பவும் நம்ம யோசனையை கேட்டு புரிஞ்சிக்கிடறவாங்க கிட்டயும் , நாம சொல்ற யோசனை என்னனு தெரிஞ்சிக்கின்ற புத்திசாலிங்க கிட்டையும்தான் யோசனை சொல்லணும்னு சொன்னது. இப்ப பாருங்க நீங்க நல்லதுதான் சொல்லறீங்கன்னு புரிஞ்சிக்க முடியாத குரங்குகள் தங்களோட முட்டாள் தனத்தை நம்மகிட்ட காட்டிடுச்சுங்க ,அதனால இனிமே தேவை இல்லாம யோசனை சொல்றதுக்கு முன்னாடி யோசிங்கனு சொல்லுச்சு


இத கேட்ட பறவைகள் எல்லாம் தங்களோட தவறை நினச்சு வருத்தப்பட்டுச்சுங்க


இன்றைய செய்திகள்


21.09.2023


*ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு.


 *33 சதவிகித இட ஒதுக்கீட்டால் புதுவை சட்டசபையில் 11 பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெறுவர் - கவர்னர் தமிழிசை தகவல்.


*தமிழக சட்டசபை அக்டோபர் 9ஆம் தேதி கூடுகிறது - சபாநாயகர் அறிவிப்பு.


*இரண்டு நாட்களில் புதிய பணிகளை தொடங்கும் "சந்திரயான் -3" : விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பு.


* உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - அறிமுக போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை  நிஸ்செல்.


*அங்கீகாரம் பெற்ற சங்கம் வழங்கும் சான்றிதழுக்கே விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு - எஸ்.டி.ஏ.டி. தகவல்.


Today's Headlines


*New capital of Andhra Pradesh state Visakhapatnam - Jaganmohan Reddy announced.


  * 11 women MLAs will get seat in Puduvai Assembly due to 33 percent seat reservation - Governor Tamilisai informs.


 *Tamil Assembly meets on October 9th - Speaker's announcement.


 * "Chandrayaan-3" to start new missions in two days : Expectations of scientists.


 * India's Nissel won silver in World Cup Shooting's introductory game


 *Employment in sports quota will be given only on  certificates issued by the recognized association - S.D.A.T.  Information.

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...